கேள்வி எண் 123:
கேட்டவர் : நேசம்
விதியை மதியால் வெல்ல முடியும் என்றால் அது கடவுளை மீறிய செயலா... அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பது கூட கடவுள் செயல்தான்.(கப்பல் விமானம்....) விதி என்பது இனி நடக்க போகிறது தானே.
விதி என்பது ஒரு சமாதானம்தானே தவிர எல்லாமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்பது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றாகும்..
விதிகளை வெல் என்பதே கடவுள் மனிதனுக்கு கொடுத்த கட்டளையாக நினைக்கிறேனே தவிர விதிப்படி நட என்றல்ல.
எனவே விதியை வெல்ல நினைப்பது கடவுளை மீறிய செயல் அல்ல. விதிப்படி நடக்கட்டும் என விட்டு விடுவதுதான் தவறு.
"விதி" ஒரு பெரிய பாறாங்கல். சோர்ந்திருக்கும் போது அதன் மீது சாய்ந்து இளைப்பாறலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்திற்கு அது மிகப்பெரிய இடைஞ்சல். அதை தகர்க்காமல், தாண்டிச்செல்லாமல் முன்னேற இயலாது.
No comments:
Post a Comment