Thursday, June 3, 2010

தாமரை பதில்கள் : 103

கேள்வி எண் 103:

கேட்டவர் : ஆதி


அண்ணா, சமீபத்தில் பாகீஸ்தான் பிரதமர், இந்தியா பாகீஸ்தான் மீது படையெடுக்காது என்று நம்புவதாக அறிக்கை கொடுத்தார், அது கிட்டத்தட்ட இந்தியா அவர்களை தாக்க வாய்ப்பிருக்கிறது என்று பயத்தில் கொடுத்த சமாதான அறிக்கை போல இருந்தது, இன்றிருக்கும் உலக பொருளாதார சூழலில் நாம் போர்த்தொடுத்திருந்தாலும் பாக்குக்கு யாரும் உதவியிருக்க மாட்டார்கள், ஏற்கனவே உதவ முன்வந்த இஸ்ரேல் இம்முறை நிச்சயமாய் கை நீட்டி இருக்கும், அமெரிக்காவும் நம்பக்கம் நின்றிருக்கும், என் கேள்வி என்னவென்றால் நாம் அவர்கள் மேல் போர் தொடுத்திருக்க வேண்டுமா ? இல்லை போர் தொடுக்காதது சரியா ? போரிட்டிருந்தால் இழந்த கெஷ்மீரை மீட்டிருக்கலாம் அல்லவா ?



முடிவு செய்ய இயலும் விஷயங்களுக்கு போர்தொடங்கலாம். இங்கு இருக்கும் பிரச்சனை நம்பிக்கை சம்பந்தப்பட்டது. போரில் வெற்றி என்பது பூச்சிகொல்லி தெளிப்பதைப் போல. அதே பூச்சிகள் மறுபடி இன்னும் வலிமை பெற்று தாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

காஷ்மீரமும் தீவிரவாதமும் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்கள். வலிமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அல்ல. சிறந்த வாழ்க்கை என்ன என்பதை வாழ்ந்து காட்டுவதின் மூலமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இயலும். மிகச்சிறந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மூலமே இது சாத்தியம். வெறுப்பு கோபம் போன்ற குணங்களுக்கு தீனி போடாமல் இருந்தால் போதும்.

போரினால் தீவிர்வாதிகளை இடம் மாற வைக்கவும் அவர்களின் உணர்வுகளை வலிமையாக்கவும்தான் முடியும். கொலையாளிகளுக்கு தியாகிகள் பட்டம் வாங்கித்தர மட்டுமே இது உதவும்.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படை திரும்ப இயலவில்லை என்பதை மறக்கக் கூடாது.. பாதுகாப்புக்கு அதை விடக் குறைவாகத்தான் செலவாகும்..

பாகிஸ்தான் மட்டுமே இதற்குக் காரணமில்லை.. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment