கேள்வி எண் 101:
கேட்டவர் : விக்ரம்
மனிதனுள் உருவாகும் காதலுக்கும், உடலில் சுரக்கும் ஹார்மோனுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?
குறிப்பு: காமத்திற்கென்று ஹார்மோன் இருக்கிறது, என் கேள்வி காதலுக்கு மட்டுமே. அவ்வாறு காதலுக்கென்று ஹார்மோன் இருப்பின், காதல் ஹார்மோன் இயற்கையாகவே சுரக்குமா? அது எப்போது சுரக்க ஆரம்பிக்கும்? ஆங்கிலத்தில் PUPPY LOVE என்று ஒரு சொல் உண்டு. மீசை அரும்பும் சமயத்தில் உருவாகும் காதலை அவ்வாறு குறிப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன். மீசை அரும்புவது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களால் எப்படி ஏற்படுகிறதோ, அதேபோன்று காதலும் ஏதாவது இரசாயன மாற்றத்தால் ஏற்படுகிறதா என்ற சந்தேகம் சமீபகாலத்தில் எனக்குள் ஏற்பட்ட குழப்பம், அதனால் தான் உங்களிடம் இந்தக் கேள்வி.
கண்டிப்பா சம்பந்தம் இருக்கு. உடலில் எந்த ஹார்மோனும் சுரக்காவிட்டால் காதல் வர சான்ஸே இல்லை.(??? புரிகிறதா???)
டெஸ்ட்ரோஜன், ஈஸ்டிரோஜன் போன்ற சில ஹார்மோன்கள், ஈர்ப்பு ஏற்பட காரணமாக அமைகின்றன. ஆனால் இன்னார் மீது மட்டும்தான் ஈர்ப்பு என்பதைத் தீர்மானிப்பதில் ஹார்மோன்களின் பங்கு இல்லை.
இந்த ஹார்மோன் சுரப்புகள் மிகக் குறைந்து போன காலத்திலும் காதல் வரலாம்.
காதல் இரசாயன மாற்றத்தால் ஏற்படுகிறதா? இரசாயன மாற்றம் காதலால் ஏற்படுகிறதா? விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ட்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
பருவம் வந்ததும் காதல் வந்ததா? காதல் வந்ததும் பருவம் வந்ததா? கண்ணதாசன் அழகா கேட்டு இருப்பார்.
40 வயசுக்கு மேல முதல் காதல் வருகிற சிலரைப் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் மிஞ்சும்.
No comments:
Post a Comment