Thursday, June 3, 2010

தாமரை பதில்கள் : 102

கேள்வி எண் 102:

கேட்டவர் : விக்ரம்


ஒரு ஆ(பெண்)ணுக்கு மற்றொரு ஆ(பெ)ண் மேல் காதல் உண்டானால், குறிப்பிட்ட ஆ(பெ)ண் சாகும் வரை அந்தக் காதல் வாழ வேண்டுமா? (அ) ஒருவேளை காதல் செத்துவிட்டால் (காதலியல்ல) புதிய காதலை வேறொருவருடன் உருவாக்கிக் கொள்ளலாமா? காதலுக்கு சரியான வரையறை தான் என்ன? முடிந்த அளவுக்கு விம் போட்டு கொஞ்சம் விளக்குங்களேன்.




காதலிலும் போரிலும் எல்லாமே சரிதான்.. இது ஆங்கிலப் பழமொழி..

காதலை உருவாக்கிக் கொள்வதை விட காதல் தானே உருவாவதுதான் சிறப்பானது. காதல் என்பது ஒருவரிடம்தான் என்பதெல்லாம் நாமே போட்டுக் கொள்ளும் சுயக்கட்டுபாடுதான். காதல் நல்லதென்றாலும் சரி, காதல் சரியானதில்லை என்றாலும் சரி காதல் காதல் தான். 
காதலில் கணக்கும் பிணக்கும் தேவையில்லை.

காதலுக்கு வரையறை? வரையறைகளைத் தாண்டும் சக்தியளிப்பது காதல்.

No comments:

Post a Comment