Monday, June 7, 2010

பொண்ணு பாக்க போறீயளா?



இந்தப் பொண்ணு பார்க்க வர்ராங்கன்னா ஒரே டென்ஷன் தானுங்க..

மாப்பிள்ளை பொண்ணோட 5 நிமிஷம் தனியாப் பேசணுமாம்..

அப்படியே அவர் கேட்காட்டியும் ஒரு அஞ்சு நிமிஷம் தனியாப் போய் பேசுங்க அப்படின்னு ஒரு அல்லக்கை தூண்டி விட்டுடும்.

அந்த அஞ்சு நிமிஷத்தில என்னத்தைக் கேட்டு எப்படிங்க பொண்ணைச் செலக்ட் பண்ணறது?

பொண்ணு பார்க்கிற எண்ணத்தில இருக்கிற சில அதி புத்திசாலிகளுக்கு, நாளைக்கு முதல்லயே இதைக் கேட்காம விட்டுட்டமே அப்படின்னு நினைச்சு நினைச்சு வருத்தப் படாம இருக்கணும்னா அனுபவஸ்தர்கள் கிட்ட ஆலோசனைக் கேட்டு ஒரு கேள்வித்தாள் தயாரிச்சுக்கணும் அப்படின்னு அறிவார்த்தமான (அர்த்தமுள்ள அறிவு) ஒரு யோசனையாம்.

பாவமில்லையா? கொஞ்சம் கை கொடுத்து உங்க பொண்ணு பார்த்த அனுபவங்களையும்.. (ஹி ஹி.. மேலோட்டமாத்தான்) அப்படியே எதை மிஸ் பண்ணிடக் கூடாதுங்கற (பஜ்ஜி, சொஜ்ஜி .. காஃபி எல்லாம் மிஸ் பண்ண மாட்டாராம், எதை தெரிஞ்சிக்க மறக்கக் கூடாதுங்கற) அறிவுரையும் கொடுங்களேன்.

(பின் குறிப்பு : பெண்ணோட தனியே பேசனாவே புடிச்சிருக்கா அப்படின்னு பொண்ணு கேட்டுட்டா என்ன பதில் சொல்றதுன்னு திரு திரு இப்பவே முழிக்க ஆரம்பிச்சிட்டதாத் காற்று வழித் தகவல்.)


இப்பல்லாம் பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடியே SMS, email, போன்ல கடலைன்னு ரொம்ப தொலைவா போயிகிட்டு இருக்கு.....
 

அதுக்கெல்லாம் திறமை இருக்கிறவங்க இப்படி கேள்வி கேப்பாங்களா என்ன? 

இவிக எல்லாம் ஒரு பொண்ணை கவரத் தெரியாமல் வாழ்க்கைல தப்பு பண்ணினா தனியாப் பண்ணி மாட்டிக்கக் கூடாது என.... 

சர்வ ஜாக்ரதையா அப்பா அம்மா சொல்ற பொண்ணைப் போய் பார்க்கறவங்க இல்லியா?

அப்படித்தான் ஒரு முறை பொண்ணு கூட பேசணும்னு சொன்னாரம் ஒருத்தர். .அங்கப் போனா பொண்ணோட இன்னொரு பொண்ணும் இருந்ததாம். கேட்டாக் கசின் அப்படின்னு சொல்லிச்சாம். ஏறக்குறைய பையனை 10 நிமிஷம் இண்டர்வியூ பண்ணிட்டு கடைசியாப் பொண்ணைப் பிடிச்சிருக்கான்னு கேட்க என்ன பதில் சொல்றதுன்னு கேட்க பொத்தம் பொதுவா மண்டையை ஆட்டிட்டு வந்திட்டாராம் மாப்பிள்ளை.(என்ன செய்யறதுன்னு புரியாமல்)

வீட்டுக்குப் போனா பொண்ணு வீட்ல இருந்து மாப்பிள்ளையோட அப்பாவுக்குப் ஃபோன் நிச்சயதார்தத்தை அங்க வச்சுக்கலாம்.. கல்யாணத்துக்கு இந்த மண்டபம் புக் பண்ணலாம் அப்படின்னு ஏகப்பட்ட விசாரிப்பு..

பையனோட அப்பாவுக்கு ஒரே ஷாக். இன்னும் நாம முடிவே சொல்லலியே என்ன இது அப்படின்னு அம்மாவைக் கூப்பிட்டுக் கேட்டா அவங்களும் முழிக்கிறாங்க..


பையன் திரு திருன்னு முழிச்சு மாட்டிகிட்டானாம்.

முதல்ல இந்த பகுதிக்கு ஆண்கள் மட்டுமே வர்ர மாதிரி செய்யணும். இல்லைன்னா வினாத்தாள் லீக் ஆயிடும்.

1. சின்னப் பிரச்சனை என்னன்னா, கல்யாணத்துக்கு முன்னால முக்கியமாத் தோணுவது கல்யாணமாகி இரண்டு வருஷத்துக்குள்ள அபத்தமாத் தோணும். கல்யாணத்துக்கு முன்னால அபத்தமா தோணறது இப்ப முக்கியமாத் தோணும். வினாத்தாள் செட் பண்ணறதில இதுதான் மிகப் பெரிய பிரச்சனை

2. முதல்ல ஒரு விஷயத்தை தெளிவாச் சொல்லிறலாம். என்னைப் பத்தி என்னென்ன தெரிஞ்சுக்க விரும்பறீங்க அப்படின்னு கேட்கலாம். வாழ்க்கை எந்த மாதிரி அமையணும் என்ன கார் ரொம்பப் பிடிக்கும் இப்படி ஆரம்பிக்கலாம் (காஸ்ட்லி காரைச் சொன்னா உடனே எஸ்கேப்)

3. கண்டிப்பா ஃபிரண்ட்ஸைப் பற்றி அவங்க கேட்பாங்க. ஆனால் நம்மால கேட்க முடியாது. :(

4. மக்கள் சொன்ன மாதிரி தங்கச்சியை பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியாது. நீங்க சம்மதம் சொன்ன பிறகுதான் தங்கச்சியைக் கண்ணுலயே காட்டுவாங்க.

5. எப்படி பொழுது போக்கறாங்க. வேலை செய்யறாங்கன்னா வேலைப்பளு எப்படி இருக்கு. கல்யாணத்துக்கு பின்னால என்ன செய்யணும் ஆசைப்படறாங்க அப்படின்னு கேட்கலாம்.

6. பொண்ணைப் புடிக்கலைன்னு வச்சுக்குங்க, அவங்களை கேள்விக் கேட்க விடாதீங்க. சும்மா மொக்கையா உங்களைப் பத்தி மட்டும் சொல்லிட்டு, யெஸ் ஆர் நோ கொஸ்டின் மட்டும் சிலது கேட்டுட்டு எஸ்கேப்பாயிடுங்க.

7. அவங்க குடும்ப ஆளுங்களைப் பற்றிச் சொல்ல விடுங்க. அவங்கக் கோணத்திலச் சொல்லட்டும்.

8. இராமன் தேடிய சீதை படத்தில இரண்டு மூணு விதமாப் பொண்ணு பார்க்கறதைக் காட்டறாரு சேரன். அதையும் ஒரு ரெஃப்ரன்ஸூக்கு பார்த்து வச்சுக்குங்க..

 சொல்லப்போனா மூணு விதத்தில தயாராகிக் கொள்வது நல்லது.  ஒரு பெண்ணிடமும் சரி ஒரு ஆணிடமும் சரி உன்னைப் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா என்ன?

ஆகவே பெண்பார்க்கும் அப்பொழுதே முடிவு பண்ணியாகணும் என்கிற அவசரத்தைக் கொஞ்சம் ஏறக்கட்டி வச்சுடறது நல்லது.

பொண்ணைப் பாக்கப் போகறதுக்கு முன்பே அந்தக் குடும்பத்தைப் பற்றியும், அவங்களோட பழக்க வழக்கங்கள், குண நலன்கள், வாழ்க்கை முறை, கொஞ்சம் வரலாறு இப்படி விசாரிச்சு தெரிஞ்சிக்கறது நல்லது.

பொண்ணைப் பற்றி இரண்டாவது சுற்று விசாரிக்கலாம், எங்க படிச்சாங்க, என்ன செய்யறாங்க, விருப்பு வெறுப்புகள், ஹாபி என்ன இப்படி தேவையான அளவு விஷயம் தெரிஞ்சுக்கணும்.

அப்புறம் முதல்ல பொண்ணு வீட்டுக்காரங்களுடன் ஃபோனில் பேசி பார்த்துக் கொள்ளும் நாளை வச்சுக்கலாம். இப்ப சில நல்ல பார்க் + ஹோட்டல்கள் இருக்கு. திறந்த வெளியா இருக்கறதினால் கொஞ்சம் பிரைவசி நல்லாவே கிடைக்கும். நாம் பேசறது கேட்காத தூரத்தில் தான் இருந்து பார்ப்பாங்க. வீட்லன்னா ரூம் வாசல் கிட்டயே நாலைஞ்சு பேர் நின்னுகிட்டு இருப்பாங்க.


ஆரம்பத்திலேயே, அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. புடிச்சிருந்தாதான் பேசனும் என்ற கட்டாயமெல்லாம் ஒண்ணுமே இல்லை. அதனால் முதல்ல அவங்க நலம் விசாரிக்கலாம். (தமிழர் பண்பாடு).

ஒரு நண்பன் அப்படித்தான் ஒரு பொண்ணு பார்க்கப் போயிருந்தான்..

பொண்ணு கொஞ்சம் பெங்களூர் கலாச்சாரம்..

என்ன வருமானம்.. என்ன வண்டி வச்சிருக்கீங்க.. வீக் எண்ட் என்ன செய்வீங்க அப்படின்னு டீடெய்ல அனலைஸ் பண்ணிட்டு...

நான் கொஞ்சம் மாடர்ன் தான்,, ஆனா பப்புக்கெல்லாம் போனதில்லை. டிஸ்கோ எல்லாம் போனதில்லை. டிரஸ்ஸிங் மட்டும் கொஞ்சம் மாடர்ன் அவ்வளவுதான்..

ஆனால் கல்யாணத்திற்கப்புறம் நீங்க போகலாம்னு சொன்னா மாட்டேன்னு சொல்ல மாட்டேன் அப்படின்னு ஃப்ராங்காச் சொல்லிட்டாங்க.

பையனுக்குப் புரியலை, இது என்ன வகை? கல்யாணத்துக்கப்புறம் பப், டிஸ்கோ எல்லாம் கூட்டிகிட்டுப் போயோ ஆகணும்னு சொல்றங்களா இல்லை.. ஃப்ராங்கா பேசறாங்களான்னு பெரிய சந்தேகம் வந்திட்டது. அதற்கப்புறம் அவங்க பேசறது எல்லாம் இவனுக்கு ஆடம்பரம் விரும்பற பொண்ணு போலவே தோண ஆரம்பிச்சிருக்கு.

சரி நான் அப்பாகிட்ட சொல்றேன். பெரியவங்க பேசட்டும் அப்படின்னு பையன் நழுவி ஓடியே போயிட்டான்..


தெரிஞ்சிக்க வேண்டியது நம்முடைய விருப்பு வெறுப்புகளை நம்மை அந்தச் சிறிய நேரத்தில் நம்மால வெளிப்படுத்த முடியாது. அதனால தெளிவா இந்தக் கொஞ்ச நேரத்தில தெளிவா ஒரு முடிவு எடுக்க முடியாதுதான். அதனால அவசரம் வேணாம். இது என் அலைபேசி எண். திருப்தி ஆகிற வரைக்கும் பேசலாம்..ஒருத்தரை ஒருவர் புரிஞ்சிக்கலாம் அப்படின்னு அவங்க முடிவு கேட்கும் முன்னர் சொல்லிவிடறது நல்லது.(அது டெம்பரரி நம்பரா இருக்கிறது நல்லதா கெட்டதான்னு நீங்களே முடிவு செஞ்சுக்குங்க
சில நல்ல பெண்கள் ரொம்ப கூச்சத்தில் இருப்பாங்க நாம் என்ன சொல்றோம் அப்படின்னு கவனமா கேட்கமுடியாது. அந்த மாதிரியான சூழ்நிலைகளில் எதிர்மறையான கேள்விகள் வேணாம்.. நீங்க என்னைப் பிடிக்கலையான்னு கேட்க ஆரம்ப வார்த்தையை மட்டுமே பிடிச்ச அவங்க ம்ம்ம் அப்படின்னு சொல்வாங்க.

நீங்கள் அதிகமாகப் பேசுவதிலும் பொண்ணை அதிகமாக பேச வைத்தால், நீங்கள் அடுத்து என்ன பேசணும், எது பேசக் கூடாதென முடிவெடுக்க இலகுவாக இருக்கும்...(அதற்காக தொண, தொணனு கேள்வி கேட்காதீங்க..!! )

இதில ஆஹா மாட்டினது பூம் பூம் மாடு என்று ஒரு அபிப்ராயம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. அப்ப மண்டைய மண்டைய ஆட்னீங்களே என்று இரண்டு மூணு வருஷத்துக்கப்புறம் பூமாரங் மாதிரி வந்து தாக்கும். அதனால் அவங்களைப் பேச விடுங்க. அவங்களை விடக் கொஞ்சம் குறைவா பேசி வைங்க.


முதல்ல மாப்பிள்ளைக்கு பொண்ணைப் புடிக்கணும். அப்புறம் தான் இம்ப்ரெஷன் பில்டப் எல்லாம். பில்டப்புக்கு எதிரா பில்டப்பு வரும்.. அதனால முதல் சந்திப்பில பில்டப் வேணாம்..


எதற்கும் தெளிவாகப் பதில் கொடுத்து திணறுவதிலும் கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாகப் பதிலளியுங்க...!! (மேலதிக உசாத்துணை தேவையெனின் சூப்பர் ஸ்டார் ரஜனிக் காந்தின் பேச்சுக்களை காணொளியில் பார்த்து பயிற்சி எடுத்துக்கலாம்


பொண்ணு பாக்கறது என்பது கேலிக்கூத்து என்று சிலர் கிண்டல் செய்யலாம்.

இருக்கிற இடத்துக்கு மாப்பிள்ளைகள் வந்து மாட்டிக்கிறாக்களே இது பெண்களுக்கு சாபமா? வரமா என்று அதையும் யோசிக்கணும் இல்ல.

மாப்பிள்ளைக்கு வழுக்கை, நரைமுடி, கருப்பா இருக்கார், குண்டா இருக்கார், சரியான சம்பாத்தியம் இல்லை, மீசை தடியா இல்லை இப்படி பலவித தர்மசங்கட நிராகரிப்புகளுக்கு ஆண்களும் ஆளாகிறார்கள்..

ஆனால் அடிப்படையில் சமூகம் எப்படி அமைந்தது? திருமணம் ஏன் ஏற்பட்டது இப்படி ஆழமா முதல்ல யோசிச்சு அதன் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் மட்டுமே பொண்ணு பார்க்கிறது என்பதைப் பற்றி சரியான கருத்துகளைப் பேச முடியும்.

பெண் பார்க்கும் படலம் தேவையா?


ஆமாம் தேவைதான். பின்ன எந்தப் பெண்ணை கட்டிக்கறதுன்னு குலுக்கல் முறையிலா தேர்ந்தெடுக்க முடியும்? எப்படியாவது இன்னாரைத்தான் கட்டிக்கப் போறோம். அவங்க நிஜத்தில இப்படி இருப்பாங்க என்று தெரியணுமில்ல. எப்படியும் முதல் சந்திப்பு என்ற ஒன்று இருந்தே ஆகணும். அது தெரிஞ்ச பொண்ணா இருக்கும் பட்சத்திலும்.. 

காதைக் கொடுங்க ஒரு ரகசியம் சொல்றேன்... 

காதலிக்கும் பெண்கள் பெண் பார்க்கும் வைபவம் என்று ஒண்ணு இருக்கணும் என்று ஆசைப்படுகிறார்கள். பல பெண்கள் பெண் பார்ப்பதை விரும்புகிறார்கள். நிராகரிக்கப்படுவதைத்தான் வெறுக்கிறார்கள்.



இப்ப மட்டும் என்ன ஆண்கள் என்னவோ சாரட்டு வண்டியில இராஜா மாதிரி வந்து பெண்ணே உனக்கு ஆடத்தெரியுமா/பெண்ணே உனக்குப் பாடத்தெரியுமா அப்படின்னு கேட்பதில்லையே!

பையன் என்ன சம்பாதிக்கிறான், எங்க வேலை செய்கிறான், வீடு எப்படி சொந்த வீடா வடகை வீடா, சிகரெட், மது பழக்கம் இருக்கா, எங்க படிச்சான், என்ன பழக்க வழக்கம், என்ன பொழுது போக்கு இப்படி ஆயிரக் கணக்கான கேள்விகளால் துளைக்கப்படுவது பையன் தான்.

அதுவுமில்லாம பொணு சொந்த வீட்ல அவங்க சொந்தக்காரங்க மத்தியில ஜம்முன்னு வந்துட்டு காஃபி கொடுத்திட்டு உட்கார்ந்திடுவா

பையனோட தவிபைப் பாருங்க..

பொண்ணை உத்துப் பார்த்தா பையனோட பார்வையே சரியில்லையே என்று பேச்சு..

ஓரக்கண்ணால பார்த்த்லும் கிண்டல், பார்க்காம இருந்தாலும் பிரச்சனை. பொண்ணு கதவு சந்தில நின்னு பையனை உச்சி முதல் பாதம் வரை பார்த்திட்டு வந்திருப்பா என்பது அவனுக்குத் தெரியாது (முழிச்சுக்குங்க நண்பர்களே). இதில தொழிகளோட கிண்டல் வேற. கதவுக்குப் பின்னால என்ன நடக்குதுன்னு தெரிஞ்சா நம்ம பசங்க பொண்ணு பார்க்கவே போக மாட்டாங்க..

கண்டிப்பா பையன் பார்க்கும் படலம் வச்சா என் ஆதரவு உண்டு. அது ஆண்களுக்கு ரொம்பவே நல்லது.

அந்தகால சுயம்வரம் என்பதே ஆண்பார்க்கும் படலம்தானே.
அன்று கூட பாருங்கள், பெண் இருக்கும் இடத்திற்குத்தான் ஆண் வரவேண்டும்.

உப்பரிகைகளிலும், பால்கனிகளிலும் பெண் இருந்து ஆணைப் பார்த்து அவளுக்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுப்பாள்.

ஆனால் இதெல்லாம் பணக்கார பெண்களுக்கு மட்டுமே வாய்த்த கொடுப்பினைகள்,

அன்று நிராகரிக்கப்பட்ட ஆண்கள் இப்படி அழுதார்களா?



 இதை இன்னும் அழகாகச் சொல்றேன் கேளுங்க...


பொண்ணு பார்க்க வர்ரது பெண்களுக்கு சங்கடம் இல்லை. பேரம் பேசி வியாபரம் பேசி பொன்னு பார்க்க வர்ராங்க பார்த்தீங்களா! அதான் பிடிக்கலை.

ஆயிரக்கணக்கான கண்கள் தறிகெட்டத்தனமாக தன் உடலை பட்டப்பகலில் தெருக்களில் மார்க்கெட்டுகளில் பேருந்துகளில் வெறித்ததை சகித்த பெண்ணுக்கு அனுமதியுடன் அதுவும் வாழ்க்கைத் துணையாய் தேர்ந்தெடுக்கும் ஒரு நல்ல நோக்கத்துடன் பார்ப்பதை எப்படி அவலம் என்று சொல்லுவாள்.

அதுவும் பெண் பார்ப்பது என்பது, ஜாதகம் பார்த்து, குடும்பம் பற்றி அறிந்து புகைப்படம் பார்த்து .. இப்படி பலபடிகளுக்கு பின்னால்தான் வருகிறது. உங்க வீட்ல பொண்ணு இருக்காமே.. முதல்ல பார்க்கலாம். மத்ததெல்லாம் அப்புறம் என்று யாரும் வருவதில்லை..

எனக்குத் தெரிஞ்சு இதுவரை எந்த மாப்பிள்ளையும் பொண்ணை பார்க்க வந்திட்டு பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லலை. வேற காரணங்களால் தான் திருமணம் தடைபட்டிருக்கு. அழகைப் பார்ப்பவன், அந்தப் பெண்ணின் அழகில் திருப்தியில்லாவன் வெட்டியா பொண்ணு பார்க்க போறதில்லை..

ஏதோ பொண்ணு பார்ர்கப் போறோம்னு கனவுகளில் மிதக்கும் பசங்க விழிச்சுகிட்டு தங்களை  தயார்படுத்திக்க இது உதவும்னு நினைக்கிறேன்..

நீங்க என்ன சொல்றீங்க?

1 comment: