Thursday, June 3, 2010

தாமரை பதில்கள் : 106

கேள்வி எண் 106:


கேட்டவர் : நேசம்



உதவி யாரிடம் கேட்கலாம்.. முக்கியமாக யாரிடம் கேட்க கூடாது ..?


நாம் கேட்டுத்தான் மற்றவர்கள் உதவுவார்கள் என்பது தவறு. ஏதோ ஒருவகையில் எல்லோரும் எல்லோருக்கும் உதவிக் கொண்டுதான் இருக்கிறோம். 

விரோதி கூட நம் இலட்சியப் பிடிப்பை உறுதியாக்க உதவுகிறார். 

யாரிடம் உதவி கேட்கிறோம் என்பது முக்கியமே இல்லை. எதற்காக உதவி கேட்கிறோம் என்பதுதான் முக்கியம்.

சுயநலத்திற்காக அடிக்கடி உதவி கேட்டால் நண்பனும் விரோதியாவான்.

பொதுநலத்திற்கு மட்டுமே உதவி கேட்டால் விரோதியும் நண்பனாவான்.

நமக்காக உதவி என்னும் பட்சத்தில் மட்டும்

1. யாருக்கு நமக்கு உதவுவதால் தொல்லை வராதோ
2. யாரால் நமக்கு உதவி செய்ய வழியிருக்கிறதோ
3. யாருக்கு நமக்கு உதவ எண்ணம் இருப்பதாக நம்புகிறோமோ

அவர்களிடம் உதவி கேட்பது சரி.. 

தலையில் ஏற்கனவே சுமை தூக்கிப் போகிறவனிடம், நம் தலை பாரத்தை இறக்க உதவி கேட்கக் கூடாது.

உலக நன்மைக்காக என்னும் பொழுதினில், நாட்டு நன்மைக்கு என்னும் போதினில் சமாதானம் போன்ற நல்ல விஷயங்களுக்கு யாரிடமும் உதவி கேட்கவே தயங்கக் கூடாது..

நமது அரசியல் கட்சிகள் நாட்டு நலனில் இந்தக் கொள்கையை மட்டுமாவது பின்பற்றினாலே போதும்.. நாடு முன்னேறிவிடும்.

No comments:

Post a Comment