Thursday, June 10, 2010

தாமரை பதில்கள் : 131

கேள்வி எண் 131:



கேட்டவர் : நேசம்


கட்சிகள் வாங்கும் ஒட்டு அடிப்படையில் பதவிகள் கொடுத்தால் சரியாக இருக்குமா.. இது போன்று மற்ற நாடுகளில் உண்டா..என் இந்த கேள்வி வந்தது என்றால் தேமுதிக கடந்த தேர்தலில் வாங்கிய பத்து சதவிதத்துக்கு சில இடங்கள் கிடைத்து இருக்க்கும் இல்லையா?



பலவகை குடியரசுத் தேர்தல் முறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் சொன்ன விதமும் உண்டு.

இந்தியா போன்ற நாட்டிற்கு இம்முறை சரியாக வராது.

காரணங்கள்

1. தே.மு.தி.க விற்கு 20 உறுப்பினர் பதவிகள் என்றால் இந்த 20 பேர் யார் யார்? எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்?

2. இந்த உறுப்பினர்கள் எந்த பகுதியில் தங்கள் கவனத்தை அதிகம் செலுத்துவார்கள்?

3. எல்லா மாநிலங்களுக்கும் சம அளவு உறுப்பினர் எண்ணிக்கையை யார் உறுதி செய்வார்கள்?

4. உள்ளூரில் உழைப்பவனுக்கு உறுப்பினர் பதவி எப்படிக் கிடைக்கும்?

5. சுயேச்சையாக கட்சி சார்பின்றி எப்படி போட்டியிடுவது?


இப்படிப் பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. இப்பொழுதாவது மக்கள்தான் தீர்மானிக்கின்றனர் என்பதால் மக்களிட்ம் கெட்ட பெயர் எடுக்க வேண்டாம் என்ற குறைந்த பட்ச பயம் இருக்கிறது. அதுவும் இல்லாவிட்டால்?

இன்றைய முறை நீங்கள் சொல்லும் முறையை விட உயர்ந்தது.

1. நாட்டில் அனைத்து பகுதிகளின் பங்களிப்பு
2. உறுப்பினரை மக்கள் நேரிடையாகத் தேர்ந்தெடுத்தல்
3. யாரும் போட்டியிடலாம் என்ற சுதந்திரம்
4. மக்களுடனான உறுப்பினரின் உறவு

இவையெல்லாம் இந்தியா போன்ற கலாச்சாரம், மொழி, இனம் போன்றவை விரவியிருக்கும் நாடுகளில் முக்கியம். மிக மிக முக்கியம். 

எல்லாப் பகுதியினருக்கும் இதில் பங்களிப்பு இருக்க வேண்டும் 

சிறு சிறு விதி மாற்றங்கள் செய்தாலே போதும். இந்திய ஜனநாயகம் மிளிரும்.
 

No comments:

Post a Comment