கேள்வி எண் 128:
கேட்டவர் : நேசம்
இட ஒதுக்கீடு பெற்ற சமுதாயம் எதாவது உண்மையில் முன்னேறி விட்டதா...?
100 சதவித இடஒதுக்கிடு கொடுத்தால் சரியாக இருக்குமா?.
இடஒதுக்கீடு பெற்ற சமுதாயங்களில் பலர் முன்னேறி இருக்கிறார்கள் என்பது உண்மை. நானும் அவர்களில் ஒருவனே!!!
எங்கள் சமுதாயத்தில் இன்று இது குறைக்கப்பட வேண்டிய் நிலை வந்தாகி விட்டது.
சமுதாயம் முழுதும் முன்னேறுவது என்பது இதனால் எழும் விழிப்புணர்வில் உருவாவது.
ஒரு சமுதாயத்தின் குறுகிய கால வளர்ச்சி அடுத்த சமுதாயத்தை பாதிக்கும் முன்னர் ஒதுக்கீடு குறைக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு வளர்ச்சியைத் தூண்டத்தானே தவிர வளர்ச்சி என்பது அதன் பின்பு அதனால் பயன்பெற்றவர்களின் கையில்தான் உள்ளது.
100 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சரியாகாது. மருந்தை மட்டுமே உணவாக உண்ண முடியாது. போட்டியில்லாவிட்டால் வாய்ப்புகள் வீணடிக்கப்படும். அதே சமயம் மற்ற அனைவருக்கும் வாய்ப்பே கிடையாது என மறுக்கவும் முடியாது. முயற்சி செய்யும் வாய்ப்பையும், ஊக்கத்தையும் தரவேண்டுமே தவிர பழம் உரித்து வாயில் வைப்பது தவறு.
கடமை : சமத்துவ சமுதாயம்
கண்ணியம் : இடஒதுக்கீடு போன்று வாய்ப்புகள் ஏற்படுத்தல்.. நிதி உதவித் திட்டங்கள்...மற்ற சமுதாயம் காயப்படும் அளவிற்கு இல்லாமல்...
கட்டுப்பாடு : அளவான குறுகிய கால திட்டங்கள்.
but u won't get equality...it'll exist till the world exists.
ReplyDelete