கேள்வி எண் 139:
கேட்டவர் : மகாபிரபு
மனிதன் இறந்துவிட்ட பின் அவன் உடலில் இருந்து உயிர் பிரிவதை மருத்துவ ரீதியாக நிரூபித்து உள்ளார்களா? அப்படி பிரிந்த அந்த உயிர் என்ன செய்துக்கொன்டிருக்கும்?
இன்னும் அது நிரூபிக்கப்படவில்லை.
செத்தவனிடம் எப்படிக் கேள்வி கேட்பது என்று புரியலை. அதனால் International Association for Near-Death Studies (IANDS) அப்படின்னு ஒண்ணு ஆரம்பிச்சு, செத்துப்பிழைச்சவங்களை வச்சு ஆராய்ட்சி செய்யறாங்க. இதெல்லாம் மனோதத்துவம் சார்ந்தது என்பதால் எதையும் உறுதியாச் சொல்ல முடியலை..
http://www.nderf.org/
இப்படியும் ஒரு நிறுவனம் ஆராய்ட்சி செய்யுது..கேள்வி எண் 118 இல் கொஞ்சம் சொல்லி இருக்கேன்
http://solvendhan.blogspot.com/2010/06/46.html
சரி இவங்க ஒட்டு மொத்த முடிவு இதுவரை என்ன?
உயிர் பிரிவது என்பது இருக்கலாம் என நம்ப ஆரம்பிச்சிருக்காங்க.
பிரிந்த உயிர் அந்த அறையின் கூரையின் கீழ் மிதந்துகிட்டே தன் உடலைப் பார்க்குமாம். எல்லாமே தெரியுமாம் ஆனால் ஒன்றும் செய்ய முடியாதாம்
சில சமயம் நாலாவது பரிமாணத்தில் வாழ்க்கையோட முன்னோட்டம் (அதாங்க சீரியல்ல இதுவரை அப்படின்னு போட்டு பிட்டு பிட்டா பழைய கதையைச் சொல்வாங்களே)
இருட்டுக்குள் பல மைல் தூரம் சென்று வெளிச்சம் ஏற்படுவதை உணரமுடியுமாம். பழைய நண்பர்கள், உறவினர்கள் முன்னரே இறந்தவர்களைப் பார்ப்போமாம்.
http://www.npr.org/templates/story/story.php?storyId=104397005&ps=cprs
இந்த மாதிரி ரொம்ப சுவாரஸ்யமா போகுது இந்த ஆராய்ட்சி.. ஆனால் முடிவு?
அதை சான்றளிக்க அல்லது உறுதி செய்ய செத்தாதான் முடியும் என்பதால் யாரும் முன் வரலையாம்.
No comments:
Post a Comment