கேள்வி எண் 127:
இட ஒதுக்கீடு சரியானது தானா?
கேட்டவர் :அமரன்
இட ஒதுக்கீடு சரியானது தானா?
இடஒதுக்கீடு என்பது வந்த நோயை ஒழிக்கச் செய்யும் சிகிச்சை போன்றது. நோய் இருக்கும்பொழுது மட்டுமே தேவையான ஒன்று.
குறிப்பிட்ட பிரிவு மக்கள் வரலாற்றுத் தவறுகளினால் அமுங்கிக் கிடக்கும்பொழுது அவர்களை மற்ற மக்களுக்கு சரியாக உயர்த்த சிலசமயங்களில் உபயோகப்படுத்தப்படும் சிகிச்சை முறை இடஒதுக்கீடு.
ஒரு மருத்துவர் ஒரு சிகிச்சைக்கு ஒரு மருந்தை உபயோகப்படுத்தும் பொழுது மருந்து எப்படி வேளை செய்கிறது என கண்காணிப்பார். ஆரோக்ய முன்னேற்றம் இல்லாத பொழுது மருந்தை மாற்றுவார். ஆரோக்ய முன்னேற்றம் தெரியும் பொழுது மருந்தின் அளவைக் குறைத்து இறுதியில் மருந்தை கைவிட வைப்பார்.
இல்லாவிட்டால் சாதாரண மருந்து போதை மருந்தாகி அது உடலில் பல பக்க விளைவுகளை உண்டாக்கி ஊறு செய்யும்.
முதன்முதலில் இடஒதுக்கீடு அறிமுகப்பட்ட பொழுது மேற்கண்ட முறையில் நசுங்கிய சமுதாயங்கள் முன்னேற முன்னேற இட ஒதுக்கீடு குறைக்கப்படும் என்றே ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் இன்று இட ஒதுக்கீடு சமுதாய போதை மருந்தாக மாறித்தான் விட்டது. எப்படிப் புற்று நோயில் சில செல்கள் மட்டும் அதி விரைவாக வளர்ந்து மற்றவற்றின் வளர்ச்சியைத் தடுத்து புற்று நோய்க் கட்டிகளாக மாறி உயிருக்கே ஆபத்தாய் முடிகிறதோ, அப்படி ஒரு சிலர் மட்டுமே பலன் பெற்று சமுதாய அழிவிற்கு இது வழிகோல ஆரம்பித்தாகி விட்டது.
கால வரையறை கொண்ட இட ஒதுக்கீடு மட்டுமே மருந்து. கால வரையறை இல்லாத இட ஒதுக்கீடு போதை மருந்து.
No comments:
Post a Comment