Tuesday, June 1, 2010

தாமரை பதில்கள் : 100

கேள்வி எண் 100:
கேட்டவர் : அன்புரசிகன்



ஒரு நாட்டின் அதிபர் பதவியிலிருப்பவரின் சொந்த எண்ண அதிக்கம் அவரது நடவடிக்கைகளிலும் எடுக்கப்படும் முடிவுகளிலும் தங்கியிருக்க வாய்ப்புள்ளதா??? 

அதாவது அவரது சொந்த - பிரத்தியேக எண்ணக்கருத்துக்கள் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளதா?(உதாரண நாடு அமெரிக்கா)




வாய்ப்பு இருக்கிறதா என்பதை விட நான்கு ஆண்டுகளில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது என்பதே உண்மை.

என்னதான் எழுதிக் கொடுப்பதை பேசி, கூட்டம் போட்டு மற்றவங்க சொல்வதைக் கேட்டு நடக்கும் ரப்பர்ஸ்டாம்ப் ஆக இருந்தாலும் சரி..

ஒருவருடைய சொந்தக் கருத்து வெளிப்பட்டே தீரும், அதை தன் சொந்தக் கருத்து என அவர் ஒப்புக் கொள்கிறாரா என்பது வேறு விஷயம்.

No comments:

Post a Comment