கேள்வி எண் 135:
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் என்ன?
கேட்டவர் : பரஞ்சோதி
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் என்ன?
பெர்முடா முக்கோணம் என்பது ஃபுளோரிடாவின் முனை, போர்ட்டோ ரீகோ மற்றும் பெர்முடா இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியாகும். பல கப்பல்களும், விமானங்களும் இப்பகுதியில் மர்மமான முறையில் மறைந்து போயிருக்கின்றன.
திசைகாட்டும் காந்தமானிகள் வேகமாக மாறுவது, மின்னணுச் சாதனங்கள் செயலிழப்பது, திடீரென கப்பல்கள் முழுகிவிடுவது, சடாரென வானில் வெடித்து விடுவது.. கப்பல் மட்டும் எங்கேயாவது அனாதையாகக் கானப்படுவது மாலுமிகள் காணாமல் போய்விடுவது, திடீர் நீருற்றுகள் காணக்கிடைப்பது இப்படிப் பலப் பலக் கதைகள் உலவுகின்றன.
இந்த மர்மங்களுக்கு காரணமாக சில கூறப்படுகின்றன..
1. மீத்தேன் வாயு வெளியேற்றம்
2. வளைகுடா நீரோட்டம்
3. வெளிக்கிரக வாசிகளும் அட்லாண்டிஸூம்
4. வினோத காந்தப் புயல்
5. நீர்ச் சூறாவளி (Water Tornodo)
6. கணிக்க இயலா தட்பவெப்ப மாறுபாடுகள்
7. கடலில் அடியில் உள்ள ஆழமான பிளவுகள் ( டெக்டானிக் பிளேட்டுகள் நகர்வதால் உண்டாகுபவை அதனால் கடலில் ஏற்படும் மாற்றங்கள்)
இப்படிப் பலப்பல ஹேஸ்யங்கள் உள்ளன.ஒவ்வொன்றைப் பற்றியும் விவரிக்க இங்கே இடமில்லை.
அதனால் நீங்கள் இங்கே படிக்கலாம்,
சில விவரங்களை உறுதியாகச் சொல்லலாம்.
1. அனைத்து விமானங்களும் கப்பல்களும் விபத்துக்குள்ளாவது இல்லை.
2. விபத்துகளில் இருவகை இருக்கின்றது.. ஒன்று சட்டென எல்லாத் தொடர்பும் அறுந்து விடுவது.. இன்னொன்று திசை தடுமாறி குழம்பி விபத்திற்குள்ளாவது..
இதை வைத்துப் பார்க்கும் பொழுது
3. வெளிக்கிரக வாசிகளும் அட்லாண்டிஸூம்
4. வினோத காந்தப் புயல்
இவை இரண்டுமே அடிபட்டுப் போகின்றன.
1. மீத்தேன் வாயு வெளியேற்றம்
2. வளைகுடா நீரோட்டம்
7. கடலில் அடியில் உள்ள ஆழமான பிளவுகள் ( டெக்டானிக் பிளேட்டுகள் நகர்வதால் உண்டாகுபவை அதனால் கடலில் ஏற்படும் மாற்றங்கள்)
இவை விமான விபத்துகளை விளக்கத் தவறுகின்றன
5. நீர்ச் சூறாவளி (Water Tornodo)
6. கணிக்க இயலா தட்பவெப்ப மாறுபாடுகள்
இவை இரண்டு மட்டுமே சற்று வலுவாகத் தோன்றுகின்றன.
ஒரு சந்தேகம் என்னன்னா, நம்மகிட்ட (அதான் மனிதர்கள் கிட்ட) எக்கச்சக்கமான செயற்கைக் கோள் வசதி இருக்கே.. ஏன் எந்தச் செயற்கைக் கோளும் இந்தப் பகுதியை ஆராயலை?
அதுதான் இதை விட மிகப் பெரிய மர்மம்.
No comments:
Post a Comment