கேள்வி எண் 137:
கேட்டவர் : பரஞ்சோதி
கால இயந்திரம் (Time Machine) ஒன்று உங்களிடம் இருந்தால் எந்த காலக்கட்டத்திற்கு செல்ல விரும்புவீங்க? ஏன்?
வயசாயிடுச்சே பரம்ஸ். அதனால் இப்ப முதுகொடிய குதிரையிலோ அல்லது பல்லாக்கிலோ பயணம் செய்ய முடியாது.. அதனால் பழங்காலத்திற்கு போனா கஷ்டப்படுவோம்...
எதிர்காலத்துக்குப் போனா நமக்கு ஒண்ணுமே தெரியலை அப்படிங்கற மாதிரி புழுவா பார்ப்பாங்க..
அதனால இப்ப இருப்பதுதான் நமக்கு வசதி...
ஆனால்....
ஒரு காலகட்டத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தால் அல்லது இருந்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி இருக்க முடியும் என்ற ஒரு வாய்ப்பு எங்க இருக்குதுன்னு தேடுவேன்.. அந்தக் காலத்துக்குப் போக ஆசைப்படுவேன்.. எனக்குத் தெரிந்து அப்படி ஒரு காலம் இராஜராஜன் - இராஜேந்திர சோழன் காலம்...
அந்தக் காலத்தில் சைவ வைணவ சமண புத்த மதங்களையும் தென்னிந்தியா முழுமையையும் ஏன் முழு இந்தியாவையும் ஒரு திருப்பு திருப்ப எனக்கு வாய்ப்பிருந்திருக்கும். அதே சமயம்.. ஐரோப்பியருக்கு முன்னதாக இந்தியாவை சிறந்த அறிவியல் நாடாகவும் மாற்ற எனக்கு வாய்ப்பு இருந்திருக்கும்...விதையை விதைத்திருந்தால் பிற்காலத்தில் பலனுண்டு.
அதை அடுத்த சாய்ஸ் அசோகர் காலம். பிறகு குப்தர்கள் காலம்..
அதே சமயம் என்னால் எதிர்காலத்துக்கு மட்டும் தான் போகமுடியும் என்றால்.. தயங்காமல் மேக்ஸ் லிமிட் செட் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்,,,
ஒரு வேளை இந்த யுக மனித இனம் முற்றிலும் அழிந்து அடுத்த மனித இனத்துக்கு என் தேவை இருக்கலாம்,
நம்ம தேவை எங்க அதிகம் இருக்கோ அங்கதானே நமக்கு மதிப்பும் இருக்கும்!!!
பாஷை தொல்லையா? அது பிரச்சனை இல்லை.. கத்து கொடுத்து விடுவேன்..
என்னோட பழைய கையெழுத்து ஞாபகம் இருக்கில்லையா?
"புதியதோர் உலகம் செய்வோம்"
No comments:
Post a Comment