Wednesday, June 23, 2010

தாமரை பதில்கள் - 143

கேள்வி எண் 143:கேட்டவர் : பரஞ்சோதி


அட்லாண்டிஸ் இன மக்கள் 9 மீட்டர் உயரம் வரை இருந்தார்களாமே? அது உண்மையா? அவர் என்ன ஆனார்கள்?


அட்லாண்டிஸ் பற்றி முதலில் எழுதியவர் அரிஸ்டாட்டிலோட மாணவரான பிளாட்டோ. 

அரிஸ்டாட்டில் தன் மாணவர்களோட உரையாடியதாக எழுதியிருக்கும் ஒரு உரையில் 9000 ஆயிரம் ஆண்ட்டுகளுக்கு முன்னால் ஏதென்ஸ் மக்களுக்கும் அட்லாண்டிஸ் மக்களுக்கும் இருந்த பகையைப் பற்றிச் சொன்னதாகச் சொல்லி அவர் ஆரம்பிக்கிறார்.


11000 ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த அட்லாண்டிஸ் மக்களைப் பற்றிய கதை. கடல் அரசன் போஸீடன், அவனுடைய மகன் அட்லஸ் உயர்ந்த நாகரீகம் பற்றிய உண்மைக் கதைன்னு சொன்னாராம்..


பஹாமா திவுகள் பக்கத்தில் பிமினி என்ற தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் 70 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் உள்ள ஒரு சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.


இதில் உள்ள ஒவ்வொரு கல்லும் 5 மீட்டர் நீளமும் 0.5 மீட்டரிலிருந்து 1.5 மீட்டர் மொத்தமும் 5 டன் எடை கொண்ட கற்களினால் கட்டப் பட்டதாம். இது ஒரு மூழ்கிய துறைமுகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் வயது 4000 ஆண்டுகளில் இருந்து 10 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பிளாட்டோ சொன்ன கதையையும் இதையும் இணைக்கும் மக்கள் அட்லாண்டிஸ் மக்களை மிகப் பெரிய இராட்சத உருவம் கொண்டவர்களாக கருதுகிறார்கள். 

ஆனால் இது உண்மையா என்று உறுதிப்படுத்த முடியவில்லை, பொய்யென்றும் உறுதியாகவில்லை. 

ஆனால் தஞ்சை பெரிய கோவிலையும் எகிப்தின் பிரமிடுகளையும் பார்க்கும் பொழுது அவர்கள் அவ்வளவு உயரம் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனப்படுகிறது.. வேணும்னா 9-10 அடி இருந்திருக்கலாம்.. 9 மீட்டர் எல்லாம் ரொம்பவே ஓவர்.

இவர்களின் அழிவைப் பற்றி பலகதைகள் உலவுகின்றன

1. இது நகர்ந்து நகர்ந்து அண்டார்டிகாவுக்கு போயிடுச்சி அப்படின்னு கனடா விஞ்ஞானிகள் சொன்னாங்க. அது தவறு என்று தெரிஞ்சுடுச்சி.

2. எகிப்தியர்களின் ஒரு கொவிலில் இந்தாபெயிண்டிங் இருக்கு..


அவங்க கருத்துப்படி இது பெரும் வெள்ளத்தின் முன்பும் பின்பும் என்பதைக் குறிக்குது. இரந்து சிங்கங்களுக்கு மத்தியில் சூரியன் இருக்கில்லையா...

சூரியன் பெருவெள்ளத்துக்கு முன்பு மேற்கில் உதிச்சதாகவும், அதற்கு பிறகு கிழக்கில் உதிப்பதாகவும் அர்த்தமாம். அதாவது பூமி சுற்றும் திசை மாறிப்போச்சி.. அல்லது துருவ மாற்றம் இதைக் குறிக்குது என்கிறார்கள்.

3. வரலாற்று ஆசிரியர்கள் இவர்கள் கிழக்கில் குடியேறிய அங்கிருந்த வேறு மனித இனங்களை அழித்துவிட்டு வாழத்தொடங்கினார்கள் என்கிறார்கள்..

4. புவியியலார் சொல்றது என்னன்னா, கிரேட் அட்லாண்டிக் ரிட்ஜ்,, அதாவது அட்லாண்டிக் மலைத்தொடர்.. இதில் அட்லாண்டிஸ் அழிந்து விட்டது அப்படின்னு சொல்றாங்க.


இதில எப்படி அழியும் மலைன்னா மேல தானே வரணும் என்று கேட்கத் தோணுதில்ல.. 

யூரேசியன் பிளேட்டும், அமெரிக்கன் பிளேட்டும் ஒன்றை விட்டு ஒன்று விலகிப் போகின்றன, இதனால் பிளவு ஏற்பட்டிருக்கிறது... இது நிலநடுக்கங்களை உண்டாக்க மேலே இருந்த நகரங்கள் கடலுக்குல் ஆழ்ந்தன..

அந்தப் பிளவு பெரிதாக பெரிதாக,பூமியின் மேலோடு வாய்பிளக்க, பூமியின் உட்கரு எரிமலைகளாக சீறி வெளிப்பட்டு இந்த மலைத்தொடர்கள் உண்டாகி இருக்கின்றன.


6. ஒரு விண்கல் விழுந்திருக்குமா என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு, இதனால் முதலில் மிகப் பெரிய சுனாமி போன்றவை ஏற்பட்டு அழிவை உண்டாக்கி இருக்கு, அது ஏற்படுத்திய வெப்பத்தால் பெருவெள்ளமும் உண்டாகி இருக்கும். பின் பனியுகம் தோன்றி... பனி உருகியபோது அட்லாண்டிஸ் கடலுக்குள் மூழ்கி இருக்கும் என்கிறார்கள் சிலர். ஆனால் இது இந்த அளவு ஆதாரங்களை விட்டு வைத்திருக்குமா என்ற கேள்விக்கு பதில்லில்லை.

5. பிளாட்டோவும் சரி இன்னும் பல கதைகளும் சரி நிலநடுக்கம் பெருவெள்ளம், சுனாமி போன்றவையே அழிவிற்குக் காரணம் எனச் சொல்லுவதும் இதுவும் சரியாகப் பொருந்துகிறது..


.

No comments:

Post a Comment