கேள்வி எண் 119:
கேட்டவர் : அறிஞர்
கேள்வி : ஒருவர் கொடுக்கும் வங்கி காசோலையை, வங்கியில் செலுத்தி பணத்தை பெற குறிப்பிட்ட கால அவகாசம் ஏதும் உள்ளதா? (10 வருடம் கழித்து டெபாஸிட் பண்ண இயலுமா) (அப்படி செய்பவர்களை காண்பது அரிது.)
காசோலைகளின் ஆயுட்காலம் 6 மாதங்களாகும். பெரும்பாலான நாடுகளில் இதுதான் விதி. காசோலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு 6மாதத்திற்குள் அதை பணமாக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காசோலை செல்லாது.
காசோலைக்கு மட்டுமல்ல. தொடர்ந்து பல ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் விட்ட கடனைக் கூட திருப்பிக் கேட்க முடியாது.. 3 ஆண்டுகள் என நினைக்கிறேன். 12 ஆண்டுகள் ஒரு இடத்தில் குடியிருந்தால், அதில் வசிக்கும் உரிமையைக் கோரவும் சட்டத்தில் இருக்கிறது. ஆகவே 12 ஆண்டுகள் ஒருவருக்கு தொடர்ச்சியாக ஒரே வீட்டை வாடகைக்கும் விட வேண்டாம்.
காலம் பொன் போன்றது.
No comments:
Post a Comment