கேள்வி எண் 133:
சமச்சீர் கல்வியின் அவசியம் என்ன?
கேட்டவர் : நேசம்
சமச்சீர் கல்வியின் அவசியம் என்ன?
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதாக இருத்தல் வேண்டும். இதுதான் சமச்சீர் கல்வியின் நோக்கமும் அவசியமும்,
கல்வி முறையில் பார்த்தால்
1. பாடத்திட்டம்
2. கல்வி நிலையத்தில் உள்ள வசதிகள்
3. மாணவர்களின் தர ஆய்வு
இவை போன்றவை நிர்ணயிக்கப்படலாம்
1, ஆசிரியர் திறமை
2. மாணவர் ஆர்வம்
இது போன்ற சிலவற்றை நிர்ணயிக்க இய்லாது.
சமச்சீர் கல்வி அவசியம் என்பதை விட நல்லது என்பதுதான் உண்மை. ஆனால் அதை எங்கே தொடங்குவது என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. அதை கல்வி நிலையத்தில் உள்ள வசதிகள், அதன் பிறகு ஆசிரியர் தரக் கட்டுப்பாடு பிறகு பாடத்திட்டம் பிறகு தேர்வு முறை என ஒரு ஒழுங்கான முறையில் செல்ல வேண்டும். பாடத்திட்டத்தையும் தேர்வு முறையையும் மட்டும் மாற்றுவதால் எதிர்மறையான பலனே விளையும்.
ஊட்டி போன்ற கான்வெண்டுகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பவர்களை ஆராய்ந்ததில் அவர்கள் பாடதிட்டத்திற்காகவொ அல்லது தேர்வு முறைக்காகவோ அல்லது எளிதாகும் உயர்கல்வி தொழில் வாய்ப்புகளுக்காகவோ அங்கே படிக்க வைக்கவில்லை.
மாணவர்கள் தெளிவான அணுகுமுறை, பழகும் விதம், வாழ்க்கையில் நம்பிக்கை, மொழிவளம், மனித இணையம் இப்படி பல காரணங்கள் இருக்கின்றன,
எனவே சமச்சீர் கல்வி என்பது கொள்கை அளவில் ஓகே. உண்மையான சமச்சீர் கல்வி என்பதை அமல்படுத்துவது மிகக் கடினமான ஒன்று
No comments:
Post a Comment