Friday, June 4, 2010

தாமரை பதில்கள் : 108

கேள்வி எண் 108:


கேட்டவர் : அன்புரசிகன்



இலங்கை இந்தியா இடையிலுள்ள பாக்குநீரிணையில் தென்மையான வரலாற்றுப்படி அதனை இராமர் - ஆதாம் - சேது பாலம் என மூன்று வெவ்வேறு பெயரில் அழைக்கிறார்களே..... இராமர் பாலம் என்ற பெயர் இராமாயணத்தினால் வந்திருக்கிறது என்பது எனது எண்ணம். மற்ற இரண்டும் ஏன் அவ்வாறு அழைக்கிறார்கள். யார் அந்த சேது??? ஆதாம்???? அவர்கள் சார்ந்து ஏதாவது கதைகள் உள்ளனவா??


ஆதாம் பாலம். இதுதான் ரொம்ப ஈசி. 

யார் போட்டதுன்னு கேட்டா - கடவுள் போட்டதுன்னு சொல்றாங்க மக்கள். ஆனால் மற்ற மதங்களை பொய் எனச் சொல்லும் ஆங்கிலேயன் ஏற்பானா? அதனால் அவன் வைத்த பெயர் ஆதாம் பாலம். 

இப்போ யாரோ கண்டுபிடிச்ச கெபாசிட்டருக்கு நாம மின்தேக்கின்னு தமிழில பேர் வைக்கலியா அந்த உரிமையில் அவங்களும் ஆதாம் பாலம் அப்படின்னு பேர் வச்சிருக்காங்க. ஆதாமுக்கும் இந்த பாலத்திற்கும் ஸ்நான ப்ராப்தி கூட கிடையாது, ஆதாம் என்பதன் மூலம் இதைக் கட்டினவர் பேர் தெரியலை அப்படின்னு அர்த்தம்.

இராமர் பாலம் என்று சொல்வது உங்களுக்கு தெரியும். சேது தான் உங்களுக்கு குழப்பம்.

சேது என்றால் பாலம் என்று அர்த்தம். இராம சேது என்பதுதான் முழுபெயர்.ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேது - என்றாலே இந்த பாலம்தான். 

சேது பந்தன் - என்றால் பாலம் கட்டல். ஆக பாலம் என்பதைத்தான் சேது என்கிறோம்.

நீர் என்றால் கங்கை என்பது போல சேது என்றால் இராமன் கட்டிய பாலம் அவ்வளவுதான்.

ஆதாம் பாலம்.. அப்படின்னா ஈழம் என்பதைத்தான் ஈடன் எனச் சொல்கிறார்கள்.. அப்படின்னா ஆண்டவன் மனிதனுக்காக அமைத்த தோட்டம் ஸ்ரீலங்காதான்.. இப்படியெல்லாம் கதை சொல்லி ரிவர்ஸ் இஞ்சினியரிங் செய்து இன்னொரு சண்டைக்கு அடிபோடாதீங்க. அப்புறம் இன்னும் ரெண்டு கோஷ்டி அடிதடிக்கு வந்திடும். இது ஒரு இண்டர்பிரெட்டேஷன் அவ்வளவுதான். எப்படி கலிஃபோர்னியா - கபிலாரண்யமோ அப்படித்தான் இது. எழுதவும் படிக்கவும் நல்லா இருக்கும்.

இந்த மாதிரி கனெக்ஷன் குடுக்க ஆயிரம் வழி இருக்கு. அதை வச்சு கதை எழுதலாம். ஆனால் ஆராய்ந்து பார்க்காமல், ஆதாரம் இல்லாமல் இந்தக் கதையை டெவலப் பண்ணி சண்டைப் போடக் கூடாது. 

No comments:

Post a Comment