Monday, June 7, 2010

தாமரை பதில்கள் : 120

கேள்வி எண் 120:


கேட்டவர் : நிரன்




அன்பு தாமரை அண்ணா!

பல நாட்களாக என்னுள் இருக்கும் சந்தேகம், உங்களிடம் பதிலுக்காக தந்துவிடுகிறேன்.

விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுவார்கள் அது எவ்வளவு சாத்தியம்? விதி தெரிந்தால்தானே மதியையே உபயோகிக்கமுடியும்.




மதியின்றி விதி எப்படி தெரியும் நிரன்?

நம்ம வக்கீல்கள் அதைத்தான் செய்கிறார்கள். விதியை அதாவது சட்டத்தை மதியால் வெல்லுகிறார்கள். 

விதி என்பது என்ன? மாற்ற முடியாதது. இயல்பானது எனக் கருதப்படுவது.. ஆனால் அப்படி அல்ல.

மனிதன் அந்த விதிகளை மதியால் மாற்றித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. நீரை விட கனமானதை மிதக்க வைத்தான்.. காற்றை விட கனமானதை பறக்க வைத்தான். யானையை ஒரு வாழைப்பழத்துக்கு பிச்சை எடுக்க வைத்தான். கொசுவை கொடூரமாக்கினான்..

விதியை முதலில் அறிகிறான் அப்புறம் வெல்கிறான்..

எல்லாம் விதிதான் என்றால் மனிதன் சோம்பேறியாகி விடுவான் என்பதினால்தான் இறைவன் எல்லாவற்றையும் தன் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. எல்லை மீறிப்போகும்போது மட்டும் சமநிலையை உருவாக்க சில மாற்றங்களைச் செய்கிறான்.. ஒரு இயற்கைப் பேரழிவு மாதிரி ரூபத்தில். மதப்படி சொல்லப் போனால் ஒரு அவதார ரூபத்தில் அல்லது ஒரு தூதன் ரூபத்தில்.

எந்த விதியும் நிலையானது இல்லை. ஆற்றல் அழிவின்மை விதியிலிருந்து தலைவிதி வரை.
 

No comments:

Post a Comment