Sunday, June 6, 2010

தாமரை பதில்கள் : 118

கேள்வி எண் 118:


கேட்டவர் : பூமகள்



சில காலமாக ஒரு தனியார் அலைவரிசையில் தொடர்ந்து காட்டி வரும் தலைப்பைப் பற்றிய கேள்வி உங்களிடம் கேட்கலாமென்று இருக்கிறேன்..

கேள்விகள் கிளைகளாகப் பிரிந்திருக்கும்.. பொறுத்து பதில் தாருங்கள் அண்ணா.

1. முன் ஜென்மம், அடுத்த பிறவி இவற்றை நம்புவதா கூடாதா? 
2. ஆன்மா, பேய், ஆவி இவை உண்மையில் இருக்கின்றனவா? 

இவற்றின் பின்னால் இருக்கும் உண்மை நிலையை எனக்கு விளக்குவீர்களா அண்ணா..?




பூச்சாண்டி காட்டி சின்னக் குழந்தைகளை பயமுறுத்துவது இப்படித்தான்..

சரி.. பதிலுக்கு வருவோம்.

ஆன்மா ஆவி பேய் இவை உள்ளனவா என நிறைய ஆராய்ட்சிகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன.


இப்படி பலர் உயிர் என்பது என்ன என்றும், இறப்பிற்கு பின்னால் என்ன நடக்கிறது எனவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

INTERESTING FAQ:

We analyzed 238 contributions to our ADC website form exploring the relationship between the deceased and the person reporting the ADC. We found that 46 (19%)of the contacts occurred within 24 hours or less. Interestingly, 35 (76%) of the 46 contacts occurred between blood relatives. Only 5 (14%) occurred between significant others. 

இது மாதிரி என் குடும்பத்தில் ஏற்பட்ட சில நிகழ்ச்சிகளை ஏற்கனவே பகிர்ந்திருக்கேன். 

அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு 9 வது படிக்கும் போது நேர்ந்தது.

இறப்பிற்கு பின்னரான தொடர்பு என்பதை என் தாய்க்கு ஏற்பட்டதைக் கண்ணெதிரே பார்த்திருக்கிறேன்.


உறுதியா சொல்ல முடியாதது...

இந்த ஆராய்ட்சி சரியான முறையில்தான் நடக்குதா என்பது. 

உறுதியாக சொல்ல முடிந்தது

அப்படியே ஆவி பேய் பிசாசு இருந்தாலும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதுங்களால நம்மை ஒண்ணும் செய்ய முடியாது.


ஆவி இருப்பது நிரூபிக்கப்பட்டால், பல ஜென்மங்கள் என்பதும் உண்மைதான். இது ரொம்ப சிம்பிள்...லாஜிக்கா உடல் என்பது வேறு உயிர் என்பது வேறு என்று அறிவோமானால், உயிர் இன்னொரு உடல் அடைகிறது என்பது எளிதா நிரூபிக்கப்படும்.


குறிப்பா இதைப் படிச்சீங்கன்னா, 


இன்னும் தெளிவாகும்.

நான் இப்படி ஆனா, யாரை யாரை போய் பார்க்கணும் என்று பெரிய லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். முடிஞ்சா உங்களையும் வந்து பார்த்து உண்மையை விளக்குகிறேன்..
 

No comments:

Post a Comment