Monday, June 14, 2010

தாமரை பதில்கள் : 138

கேள்வி எண் 138:


கேட்டவர் : பரஞ்சோதி


எத்தனை கார்ட்டூன்கள் இருந்தாலும் டாம் அண்ட் ஜெரி மட்டும் ஏன் எல்லா தரப்பினராலும் ரசிக்க முடிகிறது?எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லையே ஏன்? 

கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க...

டாம் அண்ட் ஜெர்ரிக்கும் --- கவுண்டமணி செந்தில் காமெடிக்கும் அடிப்படை ஒண்ணுதான்.. இல்லையா? வடிவேல் - பார்த்திபன் கொஞ்சம் அந்தச் சாயல்..


டாம் அண்ட் ஜெர்ரியில் என்ன என்ன இருக்கு பாருங்க

1. புத்திசாலித்த்தனம்
2. கிரியேட்டிவிடி - புதுமை
3. விட்டுக் கொடுத்தல் அதே சமயம் விட்டுக் கொடாமை
4. பாசம்
5. பொறுப்புணர்வு
6. உரிமைப் போராட்டம்
7. காதல்
8. பொறாமை
9. பழிவாங்கல்
10. மன்னித்தல்
11. ஒருத்தரே எப்ப பார்த்தாலும் ஜெயிக்காமல் இருப்பது

இப்படிப் பல விஷயங்கள் நுட்பமா பொதிந்து இருக்கு, சினிமாவுக்கு அடிப்படையான 32 வகை கதை அமைப்புகளும் இதில் உள்ளது. இன்னுமொன்னு,.. இதில் யாரையும் முழு வில்லன் என மூத்திரையும் குத்த முடியாது.

நீங்க டாம் அண்ட் ஜெர்ரி பார்த்தா சிரிக்கற வயசையே இன்னும் தாண்டலை..

வழக்கமா, இவற்றை ஆரம்பகாலங்களில் பார்த்தா சிரிப்போம்.. ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் ரசிக்க ஆரம்பிப்போம்.. அதன் பின்னால் அதன் நுணுக்கங்களை ஆராய்ந்து அனுபவிக்கவும் பாராட்டவும் ஆரம்பிப்போம்...

அப்புறம் கடைசியா அவற்றை பழைய நினைவுகளை அசை போட உதவும் காலம் காட்டியாப் பார்க்க ஆரம்பிப்போம்.. இன்னும் இந்தப் படிகளெல்லாம் தாண்ட பல வருஷமாகும்.

அதனாலதான் அலுக்க மாட்டங்குது..


பி.கு:  

டாம் அண்ட் ஜெர்ரி பார்த்தால் நான் சிரிப்பது இல்லை. என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை உங்க கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

பி.பி.கு

டாம் / ஜெர்ரி டபுள் ஆக்ட் பண்ணின கார்ட்டூன் பார்த்து இருக்கீங்களா?

 

1 comment: