Thursday, June 3, 2010

தாமரை பதில்கள் : 105

கேள்வி எண் 105:


கேட்டவர் : என்னவன் விஜய்




இலங்கைப் போரால் நிம்மதியிழந்து வாழ்ந்த நாழிகள் சென்று இன்று காஸாவை கண்டதும் என் நினைவுகள் அலைப்பாய தூங்க முடியாமல் எழுந்துவந்து தங்களுக்கு கேள்வியை எழுப்புகிறேன்.

1. காஸாவில் என்னதான் நடக்கிறது?
2. ஹமாஸுக்கு இது சரியான பாடமா?
3. யூதர்கள் செய்வது சரியா?
4. அப்பாவிகளை கொன்று குவிப்பது மனிதநேயமா?





முதல் இரு கேள்விகளுக்கு பதிலளிக்க நான் நிறைய படிக்க வேண்டும் விஜய். அடிப்படையில் ஒன்று மட்டும் இப்போதைக்கு சொல்லுகிறேன்.,, அந்த இரு கேள்விகளுக்கு இன்னும் சிலநாள் கழித்து பதில் எழுதுகிறேன்.

இறைவன் கோடிக்கணக்கான வகையான உயிரினங்களை படைத்தான். எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு இல்லம் கொடுத்தான்.. அது பூமி..

எல்லா உயிரினங்களும் ஒன்றாய் வாழ்ந்தால்தான் அது அவர்களுக்குச் சொந்தம் என்பதைக் காட்ட உணவுச் சக்கரம், சார்புடைமை போன்ற பலவற்றை கொண்டு அத்தனை உயிரினங்களையும் வாழவைத்தான்.. ஒரே வீட்டில்.

இதையெல்லாம் நன்கு தெரிந்த கொண்ட பின்னரும், என் நாடு என் பூமி எனச் சொந்தம் கொண்டாடி அதற்காய் அடித்துக் கொண்டு உயிர்விடுவதைப் போல முட்டாள்தனம் எதுவுமில்லை,

யூதர்கள் மட்டுமல்ல, பாலத்தீனியர்கள் மற்றும் இதை வேடிக்கை பார்க்கும், ஒரு சார்பை எடுக்கும் ஒவ்வொரு மனிதனும் எடுக்கும் முடிவும் நடவடிக்கையும் சரியில்லைதான்.. 

கொல்வது நேயமா என்று கேட்பது தவறு.. நியாயமா என்று மட்டுமே கேட்க முடியும். நேயமும் கொலையும் நேரெதிர் விஷயங்கள் அல்லவா?

கொல்வது நியாயம். எப்போது தெரியுமா? ஒரு கொலையால் பல உயிர்கள் காப்பற்றப்படும் என்று உறுதியாய் தெரியும்பொழுது மட்டுமே கொலைகள் நியாயப்படுத்தப் பட யோசிக்கப்படுகின்றன.. அவ்வகையில் இக்கொலைகள் நியாயப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகின்றன,

ஆனால் எத்தனை பேர் யார் பக்கம் நியாயம் என்று பக்கவாதம் பார்க்காமல் எப்படி மனிதன் வாழவேண்டும் எனப் பார்க்கிறார்கள்? அப்படிப் பார்க்கத் தொடங்கிய பின்னர்தான், தீவிரவாதம், இனவாதம், மொழி வெறி போன்ற அபத்தங்களுக்கு முடிவு வரும். 

யார் பக்கம் நியாயம் என சார்பெடுப்பதால் பிரச்சனை என்றுமே தீரப்போவதில்லை.

No comments:

Post a Comment