Tuesday, June 1, 2010

தாமரை பதில்கள் : 98

கேள்வி எண் 98:
கேட்டவர் : ஆதி


அண்ணா, ஒவ்வொரு தீவரவாத தாக்குதலின் போதும் இவர்கள் பாக்கீஸ்தானில் இருந்து வந்தவர்கள், பாக்கீஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று அறிக்கை கொடுப்பதோடு அரசாங்க அந்த பிரச்சனையை விட்டுவிடுவதேன், அறிக்கை வெறும் கண் துடைப்பா ? ஆதாரப்பூர்வமாக உலகுக்கு எடுத்துரைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதேன் ?



அது நல்லதாக இருந்தாலும் சரி.. கெட்டதாக இருந்தாலும் சரி.

ஒரு அளவுக்கு மேல் செய்யவும் முடியாது
முழுமையாக ஒழிக்கவும் முடியாது

உலக அரசியலே இதைத்தான் நம்பி இருக்கு ஆதி.

இதில் பலசிக்கல்கள் இருக்கின்றன ஆதி. அமெரிக்கா - அல்கொய்தா வையே எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவின் பணி முடிந்ததா? இன்னும் இல்லையே. ஆப்கானிஸ்தான் கேட்பாரற்ற இடமாக பிரிந்து கிடந்தது. அமெரிக்கா மூக்கை நுழைக்க முயன்றது. இன்னும் முழுவெற்றி கிடைக்கவில்லையே. பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்காவினால் தீவிரவாதிகளை வேட்டையாடமுடியவில்லையே.

எது ஒன்றும் வளரவும் வாழவும் உணவு தேவை. தீவிரவாதத்திற்கு உணவு - வெறி. அந்த வெறி எங்கிருந்து வரும்? மற்றவர்களின் எதிர்ப்பிலிருந்து. வருகிறது. 

ஆதாரங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுவதோடு எங்கு தீவரவாத அமைப்புகள் குடியிருக்கிறதோ அந்த நாடே களையெடுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு தான் சுத்தமான நாடுதான் என்பதை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கினால் போதும்.

சாமர்த்தியமாக அது வளரும் மடியின் மீதே வெறியைத் திருப்பி விடுவதே அதன் தாக்கத்தைக் குறைக்கும். எதிரி மாறிப் போவான். எதிரியை விட துரோகியின் மீதுதான் யாருக்கும் கோபம் அதிகம் இருக்கும். தீவிரவாத இயக்கங்கள் அதை வளர்த்துவிட்டவரை துரோகிகள் என அடையாளம் காண வைக்க வேண்டும். அதுதான் ராஜதந்திரம்.

அறிக்கைகள் கண்துடைப்பல்ல. என்ன செய்வது என்று தெரியாத கையாலாகாத்தனம்,

(நான் கட்சி ஆரம்பிச்சா 85 ஓட்டு உறுதின்னு நினைக்கிறேன் இதைப் படிக்கிறவங்க எண்ணிக்கையை வச்சுதான் சொல்றேன்)

No comments:

Post a Comment