Thursday, June 24, 2010

conspiracy theories 1 -- நிலவில் மனிதன் கால் வைத்தது பொய்? - 7

சந்தேகம் : அமெரிக்கக் கொடி சந்திரனில் பறக்குது. காற்றில்லா இடத்தில் எப்படிப் பறக்கும்.நாசா விளக்கம்: : விண்வெளிவீரர்கள் அப்பதான் கொடியை நாட்டி இருக்காங்க.. அதனால கொஞ்சம் அசையுது... அதுவுமில்லாம, கொடொயை நடும் பொழுது மேலிருக்கும் நீளவாக்கான கம்பி, கொடியை நடும் முயற்சியில் பெண்டாயிடுச்சி.. இதனால உண்டான சுருக்கத்தில் கொடி அசைவது மாதிரி தெரியுது.
என்னோட கருத்து : இந்தப் படத்துக்கு இந்த பதில் ஓகேதான்.. ஆனால்  ஃபாக்ஸ் ஒளிபரப்பிய வீடியோவை உன்னிப்பா கவனிச்சா கொடியில் கீழ் பக்க நுனி தூக்கப்படுவது நல்லா தெரியும்.. அதுக்கு இது பதில் இல்லையே மக்கா..!!!

ஒரு துவளையான துணி தொங்கும் போது எதாவது ஒரு விசையால் அது டிஸ்டர்ப் ஆனா அதனுடைய நகர்வு பெண்டுலம் மோஷன்ல தான் இருக்கும். நிலவீற்பு மையத்திற்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பெண்டுலம் மாதிரிதான் ஆடும்.. ஆனா ஒரு பக்கம் மாத்திரம் தூக்குதே அதற்கு என்ன அர்த்தம்?

இதை உங்கள் அறையில் எல்லாக் கதவையும் சாத்திட்டே பார்க்கலாம்.  

சந்தேகம் : சந்திரன்ல இறங்கினது இரண்டு பேர். (ஆல்ட்ரின்) ஒருத்தர் போட்டோவில இருக்கார். இன்னொருத்தர்(ஆர்ம்ஸ்ட்ராங்) எதிர்ல இருக்கார். கேமிரா காணலியே?நாசா விளக்கம் : காமிர நெஞ்சில் மாட்டி இருக்கு. ஃபோட்டோவில ஆல்ட்ரினோட காமிரா பளிச்சுன்னு தெரியுதே! கண்ணு தெரியலியா என்ன?
நம்ம கேள்வி.. : அதெல்லாம் சரிங்கன்னா படத்தப் பார்த்தா சூரிய வெளிச்சம் ஆர்ம்ஸ்ட்ராங் மேல சூப்பரா விழுகுது. நிழலோட சாய்வு  கூட அப்படித்தான் காட்டுது. ஆல்ட்ரின் நிழல் அவர் முகத்தில கண்ணாடியில பளீர்னு தெரியுதில்ல..

இப்ப என்னோட சந்தேகம், அப்ப ஆல்ட்ரினின் முன் பக்கம் இருட்ட இருக்கணும். கேமிராவில் ஃபிளாஷ் இல்லை. இருந்தா ஆல்ட்ரினின் கண்ணாடி முகம் பளீர்னு காட்டிக் கொடுத்திருக்கும். அப்புறம் எப்படின்னா கேமிராவில் இருக்கும் பொடி எழுத்து கூட பளீர்னு தெரியற மாதிரி படமெடுத்தீங்க..? 

ஃபோட்டோகிராபி தெரிஞ்சவங்க சொல்லுங்கன்னா! சூரியனுக்கு நேர் எதிரா நின்னு படமெடுத்தா இவ்வளவு கிளியரா படம் வருமா? 


 

சந்தேகம் : எந்தப் படத்திலும் கருவானில் ஒரு நட்சத்திரம் கூட தெரியலையே ஏன்?நாசா விமர்சனம்: சந்திரனோட மேற்பரப்பு ஓளியை பிரதிபலிக்கிறது.. (நம்ம சிவா.ஜி அண்ணா மாதிரி) அந்த கிளேர்ல நட்சத்திரங்கள் தெரியலை. அதுவுமில்லாம எடுத்த ஃபோட்டோக்களின் ஷட்ட்ர் ஸ்பீட் 1/150 லிருந்து 1/250 வினாடிகள் வரை. அதனால மங்கலான நட்சத்திரங்கள் தெரியாது..
என்னோட சந்தேகம் : இந்த ஷட்டர் ஸ்பீட்ல ஆல்ட்ரினோட நிழலான பாகம் அவ்வளவு கிளியரா எப்படித் தெரியுது? 


சந்தேகம்: நிலவிறக்கக் கூடு சமதளத்தில இருக்கு. அதற்குக் கீழ இருக்கிற மண் கொஞ்சம் கூட ஒரு விண்கலம் தரையிறங்கியதற்கு அடையாளமா தூசி பறந்தோ, இராக்கெட் எக்ஸாஸ்ட் வெளியேறும் வேகத்தில் பறந்த மண்ணோ கிடையாது.. இராக்கெட் எஞ்சின் மூலம் இறங்கி இருந்தா சிறு குழியாவது எஞ்ஜின் எக்ஸாஸ்ட் பக்கம் இருக்கும்நாசா சமாளிப்பு: ஹாலிவுட் படத்தில வருகிற மாதிரி எல்லாம் எறிஞ்சுகிட்டு எல்லாம் இது இயங்காது. இறங்குவதற்கு சற்றே முன்பு பே த்ராட்டில் என்னும் எதிர் திசையில் எஞ்சின் இயங்குவதால் பள்ளம் உண்டாகாது..
எனது சந்தேகம்: இராக்கெட் எஞ்சின் விதி

ராக்கெட் இயங்கும் முறை.
Rocket thrust is caused by pressures acting on the combustion chamber and nozzle

ஒரு நுண்துளை (nozzle) வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் (fluid) ஒன்று பீய்ச்சப்படும்போது, அதற்கு எதிர்வினை ஒன்று இருக்கும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. படகு ஓட்டும்போது, துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறீர்கள். படகு முன்னோக்கிச் செல்கிறது. ராக்கெட்டில் எரிபொருளும், ஆக்சிஜனும் இருக்கும். இது திட வடிவில், தூளாக இருக்கலாம். அல்லது திரவமாக இருக்கலாம் (பெட்ரோல் போல). அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக்குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கிச் சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபொருள்தான் மிக மிக அதிகச் செயல்திறன் கொண்டது. ஹைட்ரஜனை கடுங்குளிரில், கடும் அழுத்தத்தில் திரவமாக்கி, அத்துடன் ஆக்சிஜனையும் அதேபோல திரவமாக்கி எரிபொருளாகவும் ஆக்சிஜனேற்றியாகவும் எடுத்துச் செல்வதுதான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சினுக்கு கிரையோஜீனிக் எஞ்சின் என்று பெயர்.

நிலவின் ஈர்ப்பு விசையை கடைசி வினாடி வரை எதிர்க்கும் திறனுடனும், விண்கலத்தின் எடையை விட சற்றே குறைந்த அளவு எடையைத் தூக்கும் திறனுடனும் இராக்கெட் செயல்பட்டால்தான் பத்திரமாக இறங்க முடியும். அப்போது வெளிப்பட்ட வாயு, டால்கம் பௌடரை விட மென்மையான மணல் துகள்களை தூக்கக் கூட சக்தியில்லாதது என்பது காதுல பூந்தோட்டத்தையே சுத்தற விஷயம். ஃபாக்ஸ் ஒளிபரப்பிய வீடியோவை பார்த்தீங்கன்னா கால் பகுதியில் கொஞ்சம் கூட தூசு படாம தொடைச்சு வச்ச மாதிரி இருப்பது தெரியும். 


தொடரும்.

.

5 comments:

  1. எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா????

    ReplyDelete
  2. யோ.... சிக்கறாங்கதானே!!!!

    ReplyDelete
  3. இன்னும் இருக்குதைய்யா.. தொடர்ந்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள்

    ReplyDelete

The Mahabharat Chronology: Dr. K.N.S. Patnaik

The present European calendar came into vogue around 7 A.D. India, since ancient times, has been following the lunar calendar. The Western...