Tuesday, June 29, 2010

தாமரை பதில்கள் - 148

கேள்வி எண் 148:



கேட்டவர் : பரஞ்சோதி



ஒருவரை பார்க்காமல், பேசாமல், மற்றவர்கள் சொல்வதை வைத்து நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிக்கிறோமே அது ஏன்?


அது நம் மூளையின் தாகம். இது நமது ஆறாவது அறிவின் விளைவாகும். எதையும் ஆராயப்படாத, பிரிக்கப்படாத பொதுத்தகவலாக நினைவில் கொள்வது என்பது கடினம்.


எந்த ஒரு சின்ன பெயருக்கும் பண்புகளைச் சேர்த்து பலபரிமாண தகவலாக நம் மூளை வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதற்காக அத்தனை புலன்கள் கொடுக்கும் உள்ளீடுகளையும் உள்வாங்கிக் கொள்வது உட்பட. முகாம்பே என்றுச் சொன்னவுடன் மனம் ஒரு ஆப்பிரிக்க இனத்தவரை உடனே மனதுக்குள் வரித்து விடுகிறது. (ஏனென்றால் அதற்குத் தெரியும் இது ஆப்பிரிக்கப் பேரென்று). 


ஒருவர் பெயரைத் தெரிந்து கொண்டவுடன் நாம் நல்லவரா கெட்டவரா என் ஆராய்வது இல்லை. ஆனால் இவர் நம் வாழ்வில் எவ்வகையிலாவது (குறைந்த பட்சம் பொழுது போக்கிற்காவது) இடறுவார் எனத் தெரியும்பொழுது பண்புகளைப் பற்றி அறிய விளைகிறோம். நமது ஐந்து புலன்கள் மட்டுமல்ல உள்ளுணர்வு என்றுச் சொல்லப்படும் ஆறாவது புலன் மூலமும் அவருக்கு பண்புகளை கொடுக்க விழைகிறோம். ஏனென்றால் நமது வாழ்வில் இவர் சில மணிகளாவது பங்குபெறப் போகிறார். மற்றவர்களிடன் கேட்பதையும் எங்கோ படித்ததையும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி அறியும் போதும் அந்தத் தகவல்களை ஏற்றுக் கொள்கிறோம்.


வெகுசிலர் மட்டும் மனம் கொடுத்த இந்த உருவத்தை மிகவும் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். சிலருக்கு கொஞ்ச காலமும், அம்மனிதரிடம் உண்டாகும் பழக்கமும் மெல்ல மெல்ல மாற்றும். பலருக்கு ஒரு மிகப்பெரிய நிகழ்வு தேவைப்படும்..
 


மற்றவர் சொல்வதை நாம் ஏன் நம்புகிறோம்? ஏனென்றால் அதை நாம் அவரின் எண்ணம் என்று எடுத்துக் கொள்ளாமல் அனுபவம் என்று நம்புகிறோம்.. அதனால்தான்.
.

No comments:

Post a Comment