Tuesday, June 1, 2010

தாமரை பதில்கள் : 99

கேள்வி எண் 99:
கேட்டவர் : அன்புரசிகன்


அழுகை மாமியார் மருமகள் பிரச்சனை பெண்கள் பிரச்சனை இவற்றை தவிர்த்து இல்லத்திரை மெகாத்தொடர்கள் விளங்காதா???? (எந்த ழ - ள என புரியவில்லை) நிசத்திலும் பெண்களுக்குத்தான் அதிக பிரச்சனையா???



யார் அதிகம் செலவழிப்பார்களோ அவர்கள்தானே அதிகம் கஷ்டப்படணும்.

அது நேரம் பணம் இப்படி எதை வேணும்னாலும் எடுத்துக்குங்க.

ஒரு பக்கம் என்னன்னா சினிமா அடிப்படையிலான நிகழ்ச்சிகள் என்று குற்றச்சாட்டு

இன்னொரு பக்கம் என்னன்னா அழுகை சீரியல்கள் என்ற குற்றச்சாட்டு

இன்னொரு பக்கம் என்னன்னா கோக்கு மாக்கான கிண்டல் கேலிகள், ஆட்டம் பாட்டம், 

சின்னத்திரை நிறுவனங்கள் லாப அடிப்படையில் நடத்தப்படுகின்றன. அவங்களுக்கு ஆதரவு கொடுப்பதே நாமதான். அதனால் நாம டிஸ்கவரி, ஹிஸ்டரி, நியூஸ் இப்படி நம்மளை மாத்திகிட்டா அவங்க சரியாகி விடுவார்கள். அவர்கள் வளைந்து கொடுக்கத் தயார்... நாமதான் மாறத்தயார் இல்லை.

No comments:

Post a Comment