கேள்வி எண் 134:
கேட்டவர் : ஓவியன்
அண்ணா, சர்வக்னர் சிலை தமிழ் நாட்டில் திறந்து வைத்துள்ளனரே ஆனால் எனக்கு சர்வக்னர் என்றால் யாரென்று தெரியவில்லை; அவரைப் பற்றிய விளக்கங்களைத் தர முடியுமா...??
சரியான ஆளைப் பார்த்துதான் இந்தக் கேள்வியைக் கேட்கத் தோணியிருக்கு.
இவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கணக்கிடுகிறார்கள்..இவர் எழுதிய 2000 க்கும் மேற்பட்ட செய்யுள்கள் கிடைத்துள்ளன...
அவருடைய இயற்பெயர் புஷ்பதத்தர். தந்தை சைவ பிராமணர். தாயோ தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த விதவை. காசி யாத்திரையின் போது இவருடைய தந்தை, தாயை தார்வாட் என்ற பகுதியில் சந்தித்து மணந்ததால் பிறந்தவர் புஷ்ப தத்தர். அவருடைய பாடல்கள் சர்வக்ஞா என முடிவதால் அவருக்கு சர்வக்ஞர் என்ற பெயர் உண்டாயிற்று.
சர்வக்ஞர், கன்னடத் திருவள்ளுவர்... எப்படியா?
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இரண்டடி
சர்வக்ஞர் எழுதிய திரிபதா மூன்றடி
உதாரணம் ஒண்ணு,,,
சர்வஞானன் என்பவனு கர்வதிந்து ஆதன்வனே
சர்வரோகல்கொந்து நூடி கலிது வித்யயே
பர்வதவே ஆத நோடா சர்வக்ஞ
பொருள் :
அனைத்தும் அறிந்தவன் என்பவன், கருவிலிருந்தே அனைத்தும் அறிந்து வருவதில்லை. ஒவ்வொருவரிடமும் சிறிது சிறிது பார்த்து, கேட்டு, அறிந்து கற்கும் வித்தைகளினால் மலைபோல் அறிவை வளர்த்துக்கொண்டே ஆகிறான் சர்வக்ஞன் (அனைத்தும் அறிந்தவன்)
கேட்க குறள் மாதிரியே இருக்கு இல்லியா?
இதையும் படியுங்கள்
அவருடைய அனைத்து பாடல்களும் எங்காவது கிடைத்தால் இங்கு பிறகு சேர்க்கிறேன்.
No comments:
Post a Comment