கேள்வி எண் 117:
கேட்டவர் : ஆதி
பாம்பு மாணிக்கம் உகுக்கும் என்கிறார்களே இதெந்த அளவுக்கு உண்மை அண்ணா ?
(இந்த கேள்வியை சிலேடை திரியில் எழுப்பினார் ஆதவா, உங்கள் பார்வைக்கு அந்த கேள்வி படாததால் இங்கே பதிக்கிறேன் அண்ணா)
100 ஆண்டுகள் யாரையும் கொத்தாமல் இருக்கும் நாகத்தின் விஷம் இறுகி மாணிக்கம் ஆகுமாம். இது செவிவழிக் கதை.
நாகமாணிக்கம் என அழைக்கப்படும் இதைப் பற்றி கதைகள் 1000 இருந்தாலும், நாகமாணிக்கம் தன்னிடம் இருக்கிறது. இதுதான் அது என்று யாரும் ஆய்வுக்கு தந்ததில்லை.
எனவே இது கதையா என ஆராய வேண்டிய கட்டாயம்.
1. மாணிக்கம் என்பது சிவப்பு நிறத்தில் உள்ள இரத்தினக் கல். இதன் உள்ளே இருப்பது கார்பன், அலுமினியம் மற்றும் குரோமியம் ஆகியவை. பாம்பு விஷத்தில் இவை கிடையாது.
2. 100 ஆண்டுகள் பாம்பால் விஷம் செலவழிக்காமல் இருக்க முடியாது. நாகங்கள் முதலில் இரையைப் பிடிக்க விஷம் உபயோகிக்கின்றன. கடித்த பின் விஷமேறி இறந்த பிராணிகளை உண்கின்றன. 100 ஆண்டுகள் பட்டினியாய் வெறும் எறும்புகளையும் பூச்சிகளையும் உண்டு வாழ முடியாது. எனவே இது சரியில்லை
எனவே பாம்புகள் மாணிக்கத்தை உமிழும் என்பதை உண்மை என ஏற்றுக் கொள்வதில் சிரமம் உள்ளது.
இலக்கிய விதிகளின் படி கர்ணகதைகள் உண்மையாக கருதலாம். அன்னம் பாலையும் நீரையும் பிரித்து பாலை மட்டுமே உண்ணும் என்பதும் தவறுதான். ஆனால் இலக்கியத்தில் அதை உபயோகிக்கிறோம். அதே போல கவிதையில் வருவதில் பிழையில்லை. ஆனால் அது உண்மை அல்ல என்பதை தெளிவாக அறிந்து வைத்துக் கொள்ளுதல் நல்லது.
இலக்கியங்கள் கதைகளாக மாறிப்போவதும் இதனால்தான். இலக்கியத்தில் உள்ளது என்பதாலேயே அது உண்மைதான் என்பதை யாரும் நம்பாமல் போவதற்கும் இப்படி அடிப்படை உண்மைகள் இல்லாமல் இருப்பதுதான்.
No comments:
Post a Comment