Sunday, June 6, 2010

சீனா தும்மி சா துமி சாச்சா தும்மி சாச்சாச்சா!!!



எங்கயோ கேட்ட மாதிரி இருக்குன்னு பார்த்தீங்களா? இது வேட்டைக்காரன் படத்தில நான் அடிச்சா தாங்க மாட்ட.. என்ற பாடலின் நடுவில வருகிற ஒரு பிட்டு..

இதிலென்ன சுவையான சம்பவம்னு கேட்கறீங்களா? பொறுமையா கேளுங்க...

ஸ்வேதா விஜயோட தீவிர விசிறி.. (அய்யகோன்னு மதி தலையில கை வைக்கிறார் பாருங்க) வேட்டைக்காரன் படம் பார்த்த பின்னால எல்லாப் பாடலையும் வரி விடாம கூட கூடப் பாடுவா..

அப்படி ஒரு நாளு, நாங்க கார்ல போய்கிட்டு இருந்தப்ப, காரில் எம்.பி 3 பிளேயரில் இந்தப் பாட்டு ஓடிகிட்டு இருந்திச்சி..

அப்ப இந்த வரி வர, அவள் மட்டும் திக்காம திணறாம கூடவே பாட.. நாங்களும் பாடிப் பார்த்தா வரவே இல்லை...

அப்ப இது எப்படி உனக்கு தெரியும்னு அவங்க அம்மா கேட்டாங்க. ஸ்வேதா இதை ஸ்கூல் பஸ்ல அவ ஃபிரெண்ட் நிவேதா கூட பாடுவான்னும் சொன்னாள்.

அனிருத்துக்குப் பொறுக்குமா? உடனே இதுக்கென்ன அர்த்தம். இது சும்மா அப்படின்னான்,

உடனே பிரிச்சு மேயற என்னோட இரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிட்டது அப்படின்னு சொன்னா அது ரொம்ப ஓவர்...

ஸ்வேதா வை இரண்டு மூணு முறை பாடச் சொல்லிக் கேட்டேன்,,

அப்புறம் விளக்கம் சொன்னேன்..

சீனா தும்மிச்சா (அதாவது சீனா தும்மினால்)

சாச்சா (அதாங்க மாமா, மாமான்னா யாரு? அங்கிள் சாம் அதாவது அமெரிக்கா)

தும்மி சாச்சாச்சா

அதாவது சீனா தும்மினா அதோட கூட மாமா அமெரிக்காவும் சேர்ந்து தும்மும் அந்த அளவுக்கு சீனா ஆதிக்கம் அதிகமாயிடுச்சி  

அப்படின்னு அனிருத்துக்குச் சொன்னேன்...


அப்புறம் கரிகாலன் காலைப் போல கருத்திருக்கு குழலு பாடல் வர அதையும் ஆராய்ந்தேன்...

அப்புறம் யோசிக்க ஆரம்பிச்சேன்... இந்தப் பாடல்ல என்ன மாதிரி வித்தியாசம் இருக்குன்னு...

முதலில் ஆண் சொல்றான்


"கரிகாலன் காலைப் போல கருத்திருக்கு குழலு"


கரிகாலன் கால் கருகி கரிக்கட்டையா இல்ல இருக்கும் உவமை சரியில்லையே அப்படின்னு பார்த்தா

அடுத்த வரியில் பொண்ணு சொல்றா


குழலில்ல குழலில்ல தாஜ்மகால் நிழலு..


அப்படிச் சொல்லக் கூடாது.. பெண்ணைப் புகழ்வது இப்படிப் புகழனும். தாஜ்மகால் வெண்பளிங்கு.. அதன் மாதிரி அவள் முகம் வெண்மையாய் இருக்க அதன் பின்னால் இருக்கும் கூந்தல் தாஜ்மகாலின் நிழலைப் போல கறுப்பாய் இருக்குன்னு சொல்லணும் அப்படீங்கறா பொண்ணு..

அதாவது ஆண் பெண்ணைப் புகழத் தெரியாம புகழ எப்படிப் புகழணும் என்று அடுத்தடுத்த வரிகளில் பெண் சொல்லிக் கொடுப்பதைப் போல அமைந்த பாடல்..

சேவலோட கொண்டை போல செவந்திருக்கு உதடு, உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு,
இதுக்கு என்ன அர்த்தம்?

அதான் சொன்னனே, பையன் தத்தி, பெண்களை எப்படிப் புகழணும் அப்படின்னு தெரியாதவன்.

பொண்ணு அவனுக்கு எப்படி யெல்லாம் புகழணும் என்று சொல்லித் தர்ரா...

அவன் சொல்றான்..

சேவல் இருக்கே சேவல், அதனோட கொண்டை சிவந்து இருக்குமே அந்த மாதிரி உன் உதடு சிவப்பா இருக்குன்னு சொல்றான்..

அவன் பாவம் என்ன செய்வான்.. கட்டிங் அடிச்சி சில்லி சிக்கன் சாப்பிட்டு விட்டு கவுந்தடிச்சி படுக்கிறவன். அவனுக்கு சிக்கன் ஞாபகம் வர்ரது சகஜம்தான் என்று..

அதை திருத்தி எப்படிச் சொல்லணும் என்று அவள் சொல்றாள்..

இந்தக் காலப் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி சிவந்த உதடு அப்படிங்கறது இயற்கை இல்லை.. லிப்ஸ்டிக் என்று தெரியும். அதனால அதனோட நிறத்தைப் பத்தி பேசாதே.. அதுக்குப் பதிலா அது செய்யற எஃபக்டைப் பத்திச் சொல்லு என்று சொல்லுகிறார்.

இது உதடு இல்லை. இது என்னவோ என் மனசை வசியம் பண்ணுதே.. இதில என்ன வசியம் இருக்கோ தெரியலையே அப்படினு சொல்லணும்..

அதனால

உதடு இல்ல உதடு இல்ல மந்திரிச்ச தகடு..

அப்படின்னு பாடுறா பொண்ணு...
 

எப்பவுமே இப்படி ஆழமா தீவிரமா யொசிச்சு பேசறப்ப நடக்கிற அதுவேதான் நடந்தது...

எங்க பாடலாராய்ட்சி ஒரு பார்வையில் பட்டுன்னு ஆஃபாயிடுச்சி


கொசுறு :

 அப்படியே லாலாக்கு டோல் டப்பிம்மா- ன்னா என்னா?

லாலா - திருநெல்வேலி லாலா ஸ்வீட் கடை
டோல் - மேளம்
டப்பிமா - டப்பிதான்

அதாவது லாலா கடைக்காரர்கள் . டப்பாவைக் மேளம் போல தட்டித்தான் விளம்பரம் செய்வாங்களாம்.

அந்த மாதிரி கண்ணே கங்கம்மா ஏழையான நான் என்னால முடிஞ்ச மாதிரி டப்பாங்குத்து பாட்டு பாடறேன் திரும்பிப்பாரு அப்படீங்கறான் காதலன்.


ஓ மகஸீயா.???

இது கூட தெரியலியா?

ஓம் மக She யா? அதாவது உன் மகள் பெண்தன்மையோட இருக்காளா? இல்லை ஜீன்ஸ் மாட்டிகிட்டு பையனைப் போலத் திரியறாளா? அப்படின்னு கேட்பதா ஆரம்பிச்சு இருக்காங்க

ஹி ஹி ஹி

2 comments:

  1. தலைவா! வாழ்க நின் மொழிப்புலமை!

    :-) ஹப்பா... சிரிச்சு மாளலை! LoL!

    நல்ல நகைச்சுவை நடை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி அந்தோணி முத்து.. ஆனி முத்து உங்க பாராட்டு...

    ReplyDelete