Thursday, December 24, 2009

தாமரை பதில்கள் : 5 to 8

கேள்வி எண் : 5
கேட்டவர் : Aren


குசேலன் படத்தில் ரஜினி உண்மைகளைச் சொல்லி தன் ரசிகர்களின் கனவுகளை ஏமாற்றிவிட்டாரா? ஆம் என்றால் கொஞ்சம் விளக்கம் தேவை



ஒரு வகையில் இந்தக் கேள்விக்கு ஆம் என்ற பதில்தான் சொல்லியாக வேண்டியதாகிறது.

ரசிகர்கள் கனவு கண்டனர். ஆனால் கனவிலிருந்த காலம் எவ்வளவு? 1996 முதல் 2008 வரை, பனிரெண்டு ஆண்டுகாலம்.

நான் வெகுகாலம் யோசித்தேன். இது எனக்குச் சரிப்பட்டு வருகிற மாதிரி தெரியலை, அதனால் இனி வரமாட்டேன் எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் திடீரென அதை நான் சொல்லலை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இதைப் பற்றி பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன். ஒரு சிலரின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக பலரின் கனவுகளை வளர்ப்பது சரியில்லைதான். அதே சமயம் நானா சொன்னேன் என பல்டியடிப்பது மிகவும் தவறு.

எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகளைச் சரியாய் வைத்துக் கொள்வது மிக முக்கியம். இந்த டயலாக் வச்சம்னா குறைந்த பட்சம் 10 லட்சம் லாபம் வரும் சார் என மற்றவர்கள் சொல்லி இருக்கலாம். அதே போல் என்ன ரியாக்ஷன் வருகிறது என நாடி பிடித்தும் பார்த்திருக்கலாம். 


ஆனால் பாபா, ராகவேந்தர் ஆன்மீகம் என்று ஒரு புறம் ஒருமுகம் காட்டி குறுகிய கால ஆதாயத்திற்காக எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது சரியல்ல.


=======================================================

கேள்வி எண் : 6
கேட்டவர் : தீபன்


காதலித்து கைப்பிடித்த கன்னி இடைநடுவே இறந்துவிட்டால் இன்னொரு காதல் செய்வது முதல் காதலுக்கு செய்யும் துரோகமாகுமா...?


இன்னொருத்தியை மணந்து கொண்ட பிறகு முதல் காதலியையே நினைத்துக் கொண்டிருத்தல், அவளிடம் முதல் காதலியையே காணமுயற்சித்தல் போன்றவையே துரோகம் ஆகும். காதலி இறந்த பிறகு இன்னொரு காதல் செய்வது துரோகமில்லை.


=======================================================


 கேள்வி எண் : 7
கேட்டவர் : அமரன்


அண்ணே!நையாண்டி எப்படி இருக்க வேண்டும்?


மூணு முக்கிய மூலப் பொருட்கள் இருக்கணும்

1. உண்மை இருக்கணும்
2. நன்மை இருக்கணும்
3. தன்(ண்)மை இருக்கணும்

இவற்றைக் கருத்துடன் கலந்து கெட்டியாப் பிசைந்து உருண்டையாக்கி நகைச்சுவையில் முக்கி எடுத்து வார்த்தை நயம் என்கிற எண்ணெயில் சுட்டுப் பாருங்க, நையாண்டி போண்டா ருசியாய் இருக்கும்.

இன்னும் எளிமையாய் உதாரணம் சொல்லப்போனால் ஆர்.கே.ல்ஷ்மண், மதன் போன்றவர்களின் கார்ட்டூன்கள்


=======================================================

கேள்வி எண் : 8
கேட்டவர் : ஓவியன்


அண்ணா, ஒருவர் தன்னுடைய பல்துறை ஆற்றலை (ஆல் ரவுண்டர் எனலாம்..! ) வளர்த்துக் கொள்ள என்ன, என்ன செய்ய வேண்டும்...??



1. முதல்ல ஒரு துறையிலாவது ஆழமான அறிவை வளர்த்துக்கணும்.

2. பல விஷயங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை கூர்ந்து கண்காணிக்கத் தெரிஞ்சிக்கணும்.

3. இது நமக்கு வரவே வராது என என்றும் துவளக் கூடாது. நிறைய பரிசோதனை செய்து பார்க்கணும்.

4. நிறைய படிக்கணும். படிக்கிற விஷயங்களை அப்படியே நம்பாம பல கோணங்களில் சிந்திச்சுப் பார்க்கணும்.

5. தைரியமா நினைப்பதைச் சொல்லவும், தவறிருந்தால் ஒத்துக்கொண்டு திருத்திக்கவும் மன உறுதி இருக்கணும்.

6. அதுக்கு மேல ஒரே விஷயத்தில் அளவுக்கு மிஞ்சி மூழ்காமல் அளவு தெரிந்து வெளிவரக் கத்துக்கணும்.

இவை எல்லாம் கத்துகிட்டா, எதை வேணும்னாலும் கத்துக்கலாம்.
 
 

தாமரை பதில்கள் : 1 to 4

கேள்வி எண் : 1
கேட்டவர் : tamilanbu


'உலகமயமாதல்' - தமிழர்களைப் பொறுத்தவரையில் நன்மையா? தீமையா? ஏன்?


கத்தியால் நன்மையா தீமையா? அதை உபயோகப்படுத்தும் விதத்தில்தானே இருக்கிறது.


ஒரு குடும்பத்திலேயே அதுவும் கணவன் மனைவி இருவர் இருக்கும்போதே விட்டுக் கொடுத்தல் மிக அவசியம். 

எல்லோரும் தன் நன்மையை மட்டுமே நோக்கினால் உலகமயமாக்கல் என்பது வீண். வளங்களைப் பகிர்ந்து கொள்வோம் என்ற நோக்கினில் மட்டும் அமைந்தால் உலகமயமாக்கல் பயன் தரும்.


=======================================================


கேள்வி எண் : 2
கேட்டவர் : ஓவியா



தேய்ங்காய்ப்பால் உடலுக்கு நல்லதா? கெடுதியா? 

அதுவும் வேக வைத்த தேங்காய்ப்பாலில் கெடுதி மிக அதிகமா? 




கச்சான் எண்ணை, நல்ல எண்ணை இவைகளைவிட தேங்காய் எண்ணையில் கொழுப்பு குறைவு என்பது சரியா?





தேங்காய் 80-90 சதவிகிதம் நீரால் ஆனது. தேங்காயில் கொழுப்பு இருந்த போதிலும் அது நடுத்தர அளவிலானது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி.ஈ, சோடியம். மக்னீசியம், தாமிரம், கந்தகம், குளோரின், சர்க்கரை மற்றும் இரும்புச் சத்துக்கள் தேங்காயில் உள்ளன.


தேங்காய்பாலை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நல்லெண்ணையில் இருக்கும் கொழுப்பு வேறுவகையானது, நல்லெண்ணெய்யை விட தேங்காய் எண்ணெய் அதிகத் தீமை தரும்.


=======================================================


கேள்வி எண் : 3
கேட்டவர் : Aren


விலைவாசி அதிகம் என்று வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்டு கட்சியினர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?



அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பது அரசின் கடமைதான். அதைச் செய்யத் தவறும்பொழுது அதை எடுத்துரைப்பது அரசியலில் ஈடுபட்டோரின் கடமையும் கூட.


வேலை நிறுத்தங்கள் முதலாளித்துவ கம்பெனிகளில் நடத்தப்படும் ஒத்துழையாமைப் போராட்டம். அதை பொதுத்துறையில் செய்வது நல்லதல்ல. வேலை நிறுத்தம் செய்தால் விலைவாசி இன்னும் உயரத்தான் செய்யும்.

கம்யூனிஸ்ட் ஒரு அரசியல் கட்சி. எனவே என்ன செய்யவேண்டும் என்பதை திட்டமாய் வரையறுத்து அதை அரசின் பார்வைக்குத் தரவேண்டும். எப்படியாவது விலைவாசியை குறைக்க வேண்டும் என்று போராடுவது ஒரு அரசியல் கட்சிக்கு அழகல்ல. எங்களால் நல்லாட்சி தரமுடியும் என்பவர்கள் நல்ல திட்டங்களை எடுத்துரைத்தல் தானே அழகு.

எந்தத் திட்டங்கள் தவறாய்ப் போய்க்கொண்டிருக்கின்றன, எந்தத் திட்டங்கள் செய்யப்படவேண்டும் என பாராளுமன்றங்களிலும் சட்ட மன்றங்களிலும் விவாதம் நடைபெறாமல்... ஆளுங்கட்சியின் செயல்களை விமர்சித்தல் மாறவேண்டும்

அதே போல் ஆளுங்கட்சி, முந்தைய ஆட்சியின் மேல் பழிபோடுதலும் எதிர் கட்சிகள் சொன்னதைச் செய்தால் அவமானம் என்று நினைக்கும் எண்ணமும் இல்லாமல் இருத்தல்

இவை விலைவாசிக் கட்டுப்பாட்டுக்கு மட்டுமல்ல, நல்ல நாட்டிற்கு முக்கிய அரசியல் தேவைகள்.



=======================================================

கேள்வி எண் : 4
கேட்டவர் : Aren


சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமா அல்லது இன்னும் தொடரலாமா? விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்


சச்சின் டெண்டுல்கரின் உடல் தற்பொழுது ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால் அவர் தன்னுடைய பங்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.


என்னைப் பொருத்தவரை அவர் தற்போது தன்னுடைய ஆட்டத்தின் இறுதி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை அடைந்து, வெற்றித் திருப்தியுடன் ஓய்வு கொள்ள வேண்டும். அதற்காக அவர் தன்னைத் தயார் செய்து கொள்ளுதல் நன்று. (கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் சில கனிகளைப் பறித்தல் நல்லது. அவற்றை இன்னொரு இந்தியன் அடைய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!!!)


எல்லாவற்றையும் அறிந்திருப்பது ஒருபகுதிதான். அறிந்தவற்றை மற்றவர்களுக்கு பயிற்றுவித்தல் மிகமுக்கியம். அது எல்லோருக்கும் கைவராது. ஆடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் ஒரு பயிற்சியாளராக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
 

வினாடிக் கவிதைகள் - 2





பிரம்மச்சாரிகள்  ஒற்றுமையாய்..
ஒருவருக்கொருவர் உயிர் கொடுத்து
காதல் வளர்த்து
கல்யாணம் செய்து
பிரிந்தார்கள் 


-------------------------------------------------------------------------- --


என்னவோ ஏதோ 
எனக் கலங்காதே
நான் கடைபிடிப்பது
ப்ரம்மச்சாரியம்
நீ
ப்ரம்மத்தின் ஆச்சர்யம்


------------------------------------------------------------------------------------


படிகள்
ஏறி இறங்கிய கால்களில்
மிதிபட்டு ..


காலால் இடறியவன்
படிகட்டைப் பார்த்துச் சொன்னான்
சனியன் 


----------------------------------------------------------------------------------- 

தலைச் சுற்றல்
வாந்தி மயக்கம்
மசக்கை அல்ல
வீட்டில் இருந்து
அலுவலகம் செல்வதற்குள்
காற்றில் மாசு 


---------------------------------------------------------------------------

திருமணம்
நல்ல பல்கலைக் கழகம்
இங்கிருந்து தான்
எத்தனை சாதனையாளர்கள்
தத்துவ வாதிகளாய்
கவிஞர்களாய்
வியாபாரிகளாய்
அரசியல்வாதிகளாய்
திருமணம்
நல்ல பல்கலைக் கழகம்


----------------------------------------------------------------------------------

வாழவைக்கிறது
உன் தூரத்துப் பார்வையும்
என் கிட்டத்துப் பார்வையும்
கண்ணாடிக் கடையை  


---------------------------------------------------------------------------------------



மனிதம் சுயம்
மௌனம் நலம்
கொட்டிய வார்த்தைகளில் உரசி
மனம் காயம்.


-----------------------------------------------------------------------------

வினாடிக் கவிதைகள்

முதல் வார்த்தையைக் கொண்டு நொடிப்பொழுதில் எழுதிய கவிதைகள்

அழுதழுது வற்றிய கண்கள். ஒரு துன்பத்தில் இறுகிப் போய் அழ மறந்து மரத்துப் போனால் நீலிக் கண்ணீர் வடிக்கும் கண்களின் இடிப்புரை:

கண்ணீர் கண்கள்
அழுது
வற்றிப் போன கண்களைப்
பார்த்து சொல்லின
என்ன அழுத்தம் இவளுக்கு!




ஓடிப்போன கணவன். ஒற்றைக் கொம்பாய் பொறுப்பறியா மகன். அன்னையின் ஏக்கம் இங்கே

வந்தாயோ
இன்னும் ஒருமுறை!
செல்லமாய் அதட்டலிட்டு
வட்டிலில் அன்னமிட்டு
துளிர்க்கும் கண்களுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
நீயாவது
வீட்டில் இரு.. 


 ஒரு முதிர் கன்னியைப் பெண்பார்க்கும் பொழுது அவளுக்குள் எழும் எண்ணங்கள்.


காண்பதற்காக
ஏறிட்ட விழிகள்
ஏறிட்ட விழிகளில்
ஊறிட்ட எண்ணங்கள்
கண்ணீரில்

எனக்குப் பிடிக்குமா
என்ற கவலைகள் போய்
இவரா இவர்தானா என்ற
எதிர்பார்ப்புகள் போய்
இவருக்காவது என்ற
வருத்தங்கள் போய்
விரக்தியில்

மெல்ல பார்க்கின்றேன்
என்னில் என்ன தேடுகிறாய்
இளமையா
பத்து வருடங்கள்
தாமதித்து விட்டாய்

இதயமா
நசுங்கி கிடப்பது
காண முடிகிறதா

இல்லை பணச்செழிப்பா?
அது இருந்திருந்தால்தான்
என்றோ செல்லுபடி
ஆகி இருப்பேனே!

காஃபிக் கோப்பையில்
இதழ் பதித்து பார்த்த ருசி
உன் கண்கள்
எனில் பதிந்து பார்த்த ருசி

எச்சில் பாத்திரம்
மறுபடி கழுவ வேண்டும்
ஆம்
நீ சென்ற பின்னே
உன் பார்வை எச்சில் பட்ட
என்னையும்தான்


.

யுடிலிட்டி ஆட்டக்காரர்கள்!!!



ஒரு நாள் போட்டிகளில் முளை விட்டு வளர்ந்த ஒரு தனி இனம் இவர்கள்.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள், பௌலர்கள், விக்கெட் கீப்பர்கள் என மூன்று இனங்கள் இருந்தனர்.

இதில் ஆல்ரவுண்டர்கள் என புதிய இனம் உண்டானது. ஆல்ரவுண்டர்கள் என்றால் அவர்கள் பேட்டிங்கிலும் சிறந்தவர்கள். பௌலிங்கிலும் சிறந்தவர்கள்.

அதாவது எந்த ஒரு வீரர் தன்னுடைய பேட்டிங்கால் மட்டுமோ அல்லது பௌலிங்கால் மட்டுமோ ஒரு டீமில் இடம் பிடிக்கும் அளவிற்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள்.

போட்டியின் கடுமை அதிகமாகிக் கொண்டே போக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மென் என்ற புதிய இனமும் உற்பத்தியானது.

இந்த வரிசையில் ஒரு நாள் போட்டிகளில் கடைசியாக உருவானவர்கள் தான் இந்த யுடிலிட்டி பிளேயர்கள். இவர்கள் நல்ல பேட்ஸ்மேனும் அல்ல. நல்ல பௌலரும் அல்ல.
 


கொஞ்சம் பேட்டிங்
கொஞ்சம் பௌலிங்


ஒன்றாய் சேர்ந்தார்
யூ-டி-லிட்டி!!

ஆவரேஜ் பேட்டிங், ஆவரேஜ் பௌலிங், நல்ல ஃபீல்டிங் திறமை கொண்ட குட்டி ஆல்ரவுண்டர்கள் இவர்கள். ராபின் சிங் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

நான்கைந்து ஓவர்கள் பந்து வீசி, ஏழாவது அல்லது எட்டாவது பாட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக்கு வழி வகுப்பவர்கள் இவர்கள். இவர்களிம் ஃபீல்டிங் 20 ரன்களை சேமிக்க, இவர்களது பேட்டிங் ஒரு 20 ரன்களை சேர்க்க, அவ்வப்போது பந்து வீசி நல்ல பௌலர்களின் ஓவர்களைச் சேமித்து தேவையான நேரத்தில் உபயோகப்படுத்த உதவுபவர்கள் இவர்கள்.

பலசமயம் பிரேக் த்ரூ கொடுத்து அணியினைக் காப்பாற்றுபவர்கள்.

ஆனால் இப்பொழுது புகழ்பெற்று வரும் 20 / 20 போட்டிகளில் இவர்களின் பயன் என்ன?

யுடிலிட்டி பிளேயர்கள் 20 / 20 போட்டிகளில் இதுவரை எந்த எதிர் பார்ப்பையும் ஏற்படுத்த வில்லை. யுடிலிட்டி பிளேயர்கள் 20 / 20 போட்டிகளுக்குத் தேவையில்லை என்ற கருத்து உருவாக நிலைபெற்று விட்டது.

ஒரு நாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர்கள் பஞ்சத்தை இந்த யுடிலிட்டி பிளேயர்கள் தீர்த்து வந்தனர். 6 பேட்ஸ்மேன்கள் + 4 பவுலர்கள் + 1 விக்கெட் கீப்பர் என்ற விகிதம் சரியாக அமைய யுடிலிட்டி பிளேயர்கள் ஒரு காரணம். 5 பேட்ஸ்மேன்கள் + 1 ஆல்ரவுண்டர் + 1 விக்கெட் கீப்பர் + 4 பவுலர்கள் என்பதை 4 பேட்ஸ்மேன்கள் + 1 ஆல்ரவுண்டர் + 1 யுடிலிட்டி பிளேயர் + 1 விக்கெட் கீப்பர் + 4 பௌலர்கள் என மாற்றி அமைத்து பல அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால் 20 / 20 போட்டிகளில் யுடிலிட்டி பிளேயர்களின் பந்து வீச்சு பலவீனமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றிரண்டு ஓவர்களில் அணி வெற்றியை இழந்து விடலாம். இதனால் யுடிலிட்டி பிளேயர்கள் 12 வது இடத்தை விட்டு நகருவது கடினமாக இருக்கிறது.

வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் ஒழிய யுடிலிட்டி பிளேயர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

இதற்கு மத்தியில் சேவாக், ரெய்னா, பதான் சகோதரர்கள், கிறிஸ் கெய்ல், ஜாகீர்கான், ஜெயசூர்யா போன்ற செமி ஆல்ரவுண்டர்கள் வேறு இவர்களின் வயிற்றில் புளியைக் கலக்குகிறார்கள். இவர்கள் ஒரு துறையில் பிராகாசிப்பவர்கள். யுடிலிட்டி பிளேயர்கள் போலவே இன்னொரு துறையில் அவ்வப்போது உதவுவதால் யுடிலிட்டி பிளேயர்களுக்கு வாய்ப்பு வெகுவாக குறைகிறது.

எனவே 20 / 20 போட்டிகளில் வாய்ப்பு வேண்டுமானால் எதாவது ஒரு துறையில் பிரகாசித்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது.

ஏழைகளின் ஆல்ரவுண்டர் என வர்ணிக்கப் படும் யுடிலிட்டி பிளேயர்களின் வாழ்க்கையில் ஒளி வரவேண்டுமானால் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்.

ஜோகிந்தர் ஷர்மா ஒரு யுடிலிட்டி பிளேயர்தான்.

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரை மறக்க முடியுமா? ஆனாலும் பாருங்க ஐ.பி.எல் சென்னை கிங்க்ஸ்ல தான் அவரும் இருக்கார். அதே தோனிதான் கேப்டன். ஆனாலும் அவருக்கு விளையாட வாய்ப்பு சரியா கிடைக்கலியே..

சாதாரணமா இந்த மாதிரி சாதனை செஞ்சவங்களுக்கு கொஞ்ச நாள் தொடர்ச்சியா வாய்ப்பு கொடுப்பாங்க. மொகம்மது கைஃப் இது மாதிரி ஒரு மேட்சை ஜெயிச்சு குடுக்கிற மேட்ச் வின்னர்களுக்கு பத்து மேட்சுக்காவது வாய்ப்பு கொடுப்பாங்க. ஆனால் ஜோகிந்தர் ஷர்மா?

பந்துவீச்சில் எந்த அணியும் 20/20 ல் சற்றும் கவனக் குறைவாக இருக்க விரும்புவதில்லை. ஏனென்றால் 4 ஓவர்களில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிடுவார்கள். இப்போதைக்கு நாலு ஸ்பெஷலிஸ்டு பௌலர்கள், ஒரு ஆல்ரவுண்டர், 5 பேட்ஸ்மேன்கள் ஒரு விக்கெட் கீப்பர் என்னும் ட்ரெடிஷனல் அணியாக இருக்கு, அல்லது இரண்டு ஆல்ரவுண்டர்கள் மூன்று பந்து வீச்சாளர்கள் என்பதும் உண்டு.

ஒண்ணுக்கு மேல ஆல்ரவுண்டர் இருப்பது கடினமான விஷயம். செமி ஆல்ரவுண்டர் வேணும்னா ஈஸியா கிடைக்கிறாங்க. ஒண்ணுக்கு மேல ஆல்ரவுண்டர்கள் பலமா பலவீனமா என்பது டெக்கான் சார்ஜர்ஸோட முதல் வருஷ ஆட்டத்தைப் பார்த்து முடிவு பண்ண முடியாது. ஸ்காட் ஸ்டைரிஸ், சைமண்ட்ஸ், அஃபிரிடி என மூணு ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் ஆல் - ரவுண்டாகிப் போச்சுது.. அதே சமயம் போன வருஷம் ஆல்ரவுண்டர்கள் கொண்டு வலிமையாக இருந்த சூப்பர் கிங்க்ஸ் சொதப்பிருச்சி. ஆனால் சைமண்ட்ஸ் டெக்கானுக்கு உதவினார். கல்லீஸ் ராயல் சேலஞ்ஜர்ஸூக்கு இதமா பதமா இருந்தார்.


இதனால 20/20 பிரகாசிக்கணும்னா, பேட்டிங் அல்லது பௌலிங் இரண்டில் ஒன்றில் கண்டிப்பா பிரகாசிச்சே ஆகணும்..

Wednesday, December 23, 2009

தமிழாக்கம் எதுவரை?



போத்தல் - தமிழில் எப்படிச் சொல்றதுங்கோ.

பாட்டில் - ஆங்கிலம்

குப்பி - சிறிய பாட்டில்
குடுவை - பெரிய பாட்டில்

நறுமணக் குப்பி
கண்ணாடிக் குடுவை

ஆனால்

தாமஸை - தோமையர் என்பதாலோ, சேவியரை - சவேரியார் என்பதினாலோ யூசூஃபை யாக்கோபு என்பதனாலோ தமிழில் சொல்வதாக அர்த்தம் எடுத்துக்காதீங்க
நம்ம திருநெல்வேலி டின்னவேலி, திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன், பூவிருந்தவல்லி பூனமல்லி ஆன கதையா இருக்கு பாட்டிலை போத்தல் என்பது..
 
ஏற்கெனவே இருக்கும் சொல்தான் குப்பி, குடுவை என்பது..

நான் சொன்னது பாட்டிலை போத்தல் என்று சொல்லி விட்டு அதைத் தமிழாக்கம் என்பது...

இதற்கு பாட்டில் என்றே சொல்லிவிட்டுப் போகலாம்..

தமிழுக்கு ஒரு தனித்தன்மை இருக்குண்ணா! ஒவ்வொரு வார்த்தை உருவாக்கும் பொழுதும் அந்தத் தனித்தன்மையை மனசில வாங்கி செய்யணும்..

இல்லைன்னா மொழிச்சிதைவுதான்,,


ஈழத்தில் போத்தல் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள் என எனக்குத் தெரியும். ஆனால் குப்பி, குடுவை போன்ற வார்த்தைகள் மறக்கப் பட்டுள்ளனவே அதைக் கவனித்தீரா? அதனால்தான் சொல்கிறேன்...

ஒரு குரூப்பே திரியுது. இதுவரை நீங்கள் சந்திச்சிருப்பீங்க.. ஆனால் அடையாளம் கண்டிருக்க மாட்டீங்க. எல்லோரும் தனித்தமிழில் தான் பேசணும் என்று.. அவங்க மொழியைப் படுத்துகிற பாடு இருக்கே ஆஹாஹா...

பெயர் என்பது ஒருவருடைய உரிமை. நாம் எப்படி ஒருவரால் அறியப்பட வேண்டுகிறோம் என்ற உலகுக்குப் பறை சாற்றுவது.

ஒரு பொருளை நாம் கண்டு பிடிக்கும் பொழுது அதற்கு ஒரு பெயர் சூட்டுகிறோம். அதை அந்தப் பெயரால் அழைப்பதை கண்டுபிடிப்பாளனுக்குக் கொடுக்கும் மரியாதையாக நான் கருதுகிறேன்.

இராமன் விளைவு - அதுதானே மரியாதை, அதை ரேமாண்ட்ஸ் எஃபக்ட்(Raymand's effect) எனச் சொன்னால் சரியா? ஒரு அமெரிக்கன் இப்படிச் சொன்னால் கோபம் வருமா வராதா?

நாம் கண்டுபிடித்தால் தூயத் தமிழில் பெயர் வைக்கலாம்.. சரியா!!! மொழி வளரணும் என்றால் கூடவே இது மாதிரி கொஞ்சம் ரோஷமும் இருக்கணும்.

பாட்டல் என்பதைப் போத்தல் உச்சரிப்பதில் என்ன தவறு?

பாட்டல் என்பதை போத்தல் எனச் சொல்லக் காரணம் என்ன? தமிழனால் பாட்டல் என உச்சரிக்க இயலாதா? முடியும். ஆனால் போத்தல் என்பது அவன் பேசும் மொழியில் பொருந்த ஆரம்பித்தது..

ஒரு 100 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டல் - ஆங்கிலம் போத்தல் - தமிழ் என்ற நிலை கண்டிப்பாய் வரும்..

குப்பி, குடுவை போன்றவை வழக்கொழிந்து போகும்.. அதாவது பாட்டல் என்பதைக் கண்டுபிடித்தவனுக்கும் மரியாதை இல்லை, அதே சமயம் இருக்கும் வார்த்தைகளையும் இழந்து நிற்போம்..


கண்டுபிடிப்பாளன் வைத்த பெயர் பாக்டீரியா! . நுண்ணுயிர்க் கிருமி தமிழன் மாற்றிய பெயர். அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டது வைரஸ்.. இதுக்குத் தமிழன் வைத்த பெயர் என்ன? நுண்ணுயிர்கிருமிதான். அப்ப பாக்டீரியா? அது கிருமி.. அப்ப கண்ணுக்குத் தெரியும் கிருமிகள்? ஹி ஹி இப்படியெல்லாம் குடைஞ்சா நான் தமிழ் துரோகியென அறிவிக்கப் படுவேன்.

இருக்கிற வார்த்தைகளையும் இழக்க வைக்கும் இப்படி உச்சரிப்பு மாற்ற வார்த்தைகள் முழுமையான வேற்றுமொழி வார்த்தையை விட மிகக் கொடியவை..


சும்மாச் சும்மா மொழிமாற்றம் செய்து கொண்டிருக்காமல் உருப்படியா நம்ம பேர் சொல்ற மாதிரி எதாவது கண்டுபிடிக்கலாமா?


ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கும் பொழுது "கபடி" என்று அழைக்கப் பட விரும்புகிறோம்.

ஜப்பானில் சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கப்படும் பொழுது சிலம்பு என அழைக்கப் பட விரும்புகிறோம்.

இட்டாலியில் இட்லி இட்லி என்றே அழைக்கப்பட விரும்புகிறோம்..

தோசை ஃபிரான்ஸில் தொசை என்றே அழைக்கப் படட்டும்..

ரெயின்போ யாரும் கண்டு பிடித்ததல்ல இயற்கையான ஒன்று. அதற்குப் பலமொழிகளில் பல பெயர் இருக்கட்டும்..

ஆனால் புளூட்டோவும் இயற்கையானதுதான். ஆனால் அதை உலகிற்கு அறிவித்தவன் கொடுத்தப் பெயரைக் கொண்டே அழைப்போம்..

 சரிதானே!.. இப்ப உலகம் தானே ஒரு குடும்பமாக ஆரம்பித்து விடும்..


.

நானும் தமிழும் பாகம் - 22

முந்தைய பாகங்கள் :






டீம் - என் வாழ்வின் உபயோகமான நாட்கள்

2000 ஆம் ஆண்டு தொடங்கினப்ப ஒரு நாள் என் காலேஜ் நண்பன் தட்சிணா மூர்த்தி ஃபோன் செஞ்சான். டேய் என்னுடைய மச்சான் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, நானு இன்னும் சிலபேர் சேர்ந்து நம்ம நாட்டுக்கு எதாவது செய்யனும்னு நினைக்கிறோம். அதுபத்தி டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கோம். நீ அவரை மீட் பண்ணு என அன்புக்கட்டளை போடவே, நானும் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தியை கால்பண்ணினேன். மார்ச் மாசம் முதல்வாரம் மீட்டிங் போடலாம்னு இருக்கோம்,, வாங்க பேசலாம்னு சொன்னார்.

சொல்லப் போனா டீமை ஆரம்பிச்சது ஈரோடு, சேலம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள். ஒரே பிண்ணனி இவர்கள் எல்லாம் ஏழைக் குடும்பத்தில இருந்து படிப்பு என்ற ஒரே ஏணியின் மூலம் மேல வந்தவங்க. எதாவது நம்ம நாட்டுக்குச் செய்யணும்னா அதைப் ஆரம்பப் பள்ளியில இருந்துதான் ஆரம்பிக்கணும்னு ஒரு ஒத்த கருத்து எல்லார்கிட்டயும் இருந்தது.

ஆனா பணமா குடுத்தா நம்ம மக்கள் அதை அமுக்கத்தான் பார்ப்பாங்க. அதே தனி மனிதனுக்கு உதவினா அதனால சமூகம் எப்படி பயன்படும்?

சில பல விவாதங்கள். அந்த விவாத முடிவில உதிச்சதுதான் டீம்.




இது டீமுக்காக நான் எழுதிய முதல் இதழ். இந்த இதழில் டீம் எப்படி உருவானது என விரிவா எழுதி இருக்கேன்,.


இன்னும் டீம் நல்ல முறையில் செயல்பட்டுகிட்டு இருக்கு. இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க


இங்க போய் பாருங்க.


கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, ஒரு தனித்துவமான மனிதர். இவரைப் போன்ற மனிதரை இன்றும் நான் கண்டதில்லை. அனைவரிடமும் நயமாய் பழகும் பாங்கு, அர்ப்பணிப்பு உணர்வு. சிந்தனைத் தெளிவு, அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு.

எனக்கு ஒரு ஆசை உண்டு.. அமெரிக்காவில் இருந்து வந்த பின்னர் டீமில் பங்கு பெற இயலவில்லையே என்ற வெறுமை உணர்வு. எனக்காக என் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்கிற உணர்வு.. எப்படி ஆரம்பிப்பது, எப்போது ஆரம்பிப்பது என்று புரியவில்லை, ஆனால் ஆரம்பித்துதான் ஆக வேண்டும்.. கூடிய விரைவில்.

இந்த ஒரு பதிவின் மூலம் டீமை மன்ற மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெருமைப் படுகிறேன்..

தய்யவு செய்து ஒருமுறையேனும் அந்த இணைய தளத்திற்ற்குச் சென்று முழுமையாய் வாசியுங்கள். டீம் செய்த பணிகள், அது எந்த அள்விற்கு வளர்ந்திருக்கிறது என்ற விவரங்கள், நாங்கள் செய்த நற்பணிகள்..


தமிழ் காத்திருக்கும் ஓரிரு நாட்கள்...

தொடரும்
 .

தொழிலும் சமுதாய நோக்கும்!!! - பாகம் 2



மென்பொருள் நிபுணன் - அதீத சம்பளம் என்ற என்பதை விடுங்கள். இந்தக் கம்பெனியை விட அந்தக் கம்பெனியில் 30% அதிகச் சம்பளம். என் எக்ஸ்பீரியன்ஸூக்கு அந்தக் கம்பெனியில் 40% அதிகச் சம்பளம் என விலையேற்றிக் கொண்டே போகிறோமே தவிர நமது அறிவை முழுமையாக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகிறோமா என்றுதான் கேள்வி.

நான் செய்யும் வேலை இவ்வளவு மதிப்பு மிக்கது என ஒருவரும் அதன் பயன்பாட்டினைச் சொல்லி இதுவரை ஊதிய உயர்வு கேட்டதில்லை. ஒரு கம்பேரிசன். இண்டலில் இவ்வளவு தருகின்றார்கள், மைக்ரோசாஃப்டில் இவ்வளவு தருகிறார்கள், ஹெச் பி யில் இவ்வளவு தருகிறார்கள் என ஒப்பீடுதான்,,

கம்பெனி என் வேலையால் இவ்வளவு பலன் பெறுகிறது.. அதனால் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என யாருக்கும் சொல்லத் தெரிவதில்லை..

சொல்லப் போனால் கணிணிக் கல்வி இன்னும் 10-15 வருடங்களில் மேம்பட்டு நிறைவு பெறும் பொழுது தானே புரியும்..

தான் செய்யும் பணியின் அடக்க மதிப்பு தெரியாதவன் போட்டிகள் குவியும் பொழுது காணாமல் போய்விடுகிறான்.


நமது சந்தோஷத்திற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம் என்பதே பொழுது போக்கிற்கு நாம் செலவழிப்பது சுட்டிக் காண்பிக்கிறது. நாம் ஆக்க பூர்வமாக பணி செய்யும் காலங்களை விட பொழுது போக்கும் நேரங்கள் அதிகரித்து வருகின்றன.


ஆனால், வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப் பாருங்கள்.. அவர்கள் பொழுது போக்கிற்காக செலவிடும் நேரத்தைப் பாருங்கள்.. சூட்சமம் அங்கே தான் இருக்கிறது.

புகழ் போதை, சொகுசுத்தனம், கர்வம் இவை அதிகரிப்பதால்தான் நாம் இந்த வலையில் அகப்பட்டுக் கொண்டுள்ளோம். இதனாலேயே எளிதில் பணம் செய்யும் வழிகளை தேடுகிறோம். ஏமாற்றவும் தயங்குவதில்லை.

எந்த ஒரு தொழிலும் நமக்கு இப்பொழுது முழுமையாகத் தெரிவதில்லை. ஒரு சிறு பகுதியையே செய்கிறோம்.. மற்ற பகுதிகளைப் பற்றிய அறிவின்றியே நாம் செய்யும் வேலை கிரேட் என மார்தட்டிக் கொள்கிறோம்...

ஆனால் எளிமையானவை என நாம் கருதும் பல தொழில்கள் உண்மையிலேயே முக்கியமானவை. இதைக் கருத்தில் கொள்ளவேண்டும்..

இன்னும் சில தொழில்கள், புகையிலைத் தொழில்கள் / மதுபானத் தொழில்கள், இவை அளவற்ற தீமை தருபவை.. இவற்றை அங்கீகரித்து மிகப்பெரிய தொழிற்சாலைகள் இதன் மூலம் இயக்குகிறோம். இதனால் மனித சமுதாயத்திற்குக் கேடுதானே.

தொழில்களை நான்கு விதமாக பிரிப்போம்.

1. அன்றாடத் தேவைகளுக்கான தொழில்கள், உணவு, குடிநீர், இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து, தொலைதொடர்பு என தினம் தினம் நமக்கு தேவையைத் தீர்க்கும் தொழில்கள்.

2. நீண்ட நாள் திட்டங்களுக்கான வேலைகள் - மருந்து ஆராய்ட்சி, விண்வெளி ஆராய்ட்சி.. தொழில் நுட்ப ஆராய்ட்சி போன்றவை.. இதைச் செய்பவருக்கு செய்முறை கிடையாது.. மிகுந்த அறிவு தேவைப்படும் தொழில்கள். கணிணிப் பொறியாளர்களாகிய பலர் முதலாம் வகை தொழில் செய்தாலும், அதை இரண்டாம் வகைத் தொழிலாக காட்டிக் கொள்கிறார்கள். அந்தக் குட்டு உடையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

3. பொழுதுபோக்கு.. முதலிரண்டு தொழில் புரிவோர் மனம் உற்சாகப்பட, அவர்களின் மனதை புத்துணர்வு ஊட்டும் வகையில் கலைகளைக் கொண்டு பணிபுரிவது.. மகிழ்ச்சியுடன் சம்பந்தப் படுவதினாலேயே, இவர்களின் வருமானம் அதிகமாக இருக்கிறது.. சந்தோசமா இருக்கும் பொழுது வாரி வாரிக் கொடுக்கும் வள்ளல் மனம் கொண்ட அடிப்படை மனோதத்துவம் தான் இவர்களின் அளவுக்கு மீறிய வருமானத்திற்குக் காரணம்

4. கெடு தொழில்கள். சமுதாயத்திற்கே எதிரான தொழில்கள்.. சிகரெட் தயாரிப்பு சொன்னேனல்லவா அது மாதிரி..


முதல் வகைத் தொழில் செய்பவர்கள் இவ்வுலகில் மிக அதிகம்.

இரண்டாம் வகைத் தொழில் செய்பவர்கள் நீங்கள் சொல்லும் அந்த அறிவு, மற்றும் டெடிகேசனுக்காக அதிக ஊதியம் பெற வேண்டியவர்கள்..


மூன்றாம் வகைத் தொழில் செய்பவர்கள் எண்ணிக்கையில் இரண்டாம் நிலையில் இருக்கிறார்கள்


ஆனால் இவர்களை எல்லாம் விட, இந்தத் தொழில்களை இணைக்கும் வியாபாரிகளே அதிக லாபம் பெறுகின்றனர் இல்லையா?


எங்கு எது தேவை? எங்கு எது கிடைக்கிறது?

டிமாண்ட் அண்ட் சப்ளை..

இதை சரியான முறையில் இணைக்கும் வியாபாரிதான் அதிகம் சம்பாதிக்கிறான்..

சமுதாயத்தினால் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மறக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் இது..

சமுதாயத்தை இப்பொழுது நம்முடைய ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்..

நாம் சமுதாயத்தின் ஒரு பகுதி என்பதை மெல்ல மெல்ல மறந்துகொண்டு..




.

தொழிலும் சமுதாய நோக்கும்!!! - பாகம் 1

சமுதாயத்திற்கு தேவையான ஒன்றைக் கூட கொடுக்காமல், சமுதாயத்தில் இருந்து பெற்று மட்டுமே வாழ்வது தவறு..

ஒவ்வொரு தொழிலும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள எதாவது ஒன்று உண்டு. அப்படிப் பகிர்ந்து கொள்ளாதது தொழிலல்ல

நாம் செய்வது தொழிலா இல்லையா யோசித்துப் பார்க்க வேண்டும்..

சட்டென்று சிதறி விழுந்த இந்த எண்ணத் துளிகள் ஆராயத்தக்கவை.. நம்மையே எடுத்துக் கொள்வோம். நமது பணி சமுதாயத்திற்கு எப்படி பலனளிக்கிறது?

நான் செய்யும் மென்பொருள் உலகமக்களை இணைக்கிறது. பரிமாற்றங்கள் நடக்க உதவுகிறது.. அறிவியலார் தங்கள் கண்டுபிடிப்பை உலகின் எக்கோடியில் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது..

வீட்டின் ஒரு மூலையில் இருந்து கொண்டே, ஒருவர் தான் கண்டுபிடித்த நுட்பங்களை மற்றவருக்கு கற்றுக் கொடுக்கவும், மேலும் கற்கவும் உதவுகிறது.

இப்படி "நெட் ஒர்க்" என்பது மக்கள் வாழ்க்கையில் பிணைந்துள்ளது.. மக்களுக்கு பயன்படக் கூடியது..

ஆனால்...

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், பொழுது போக்குகளான சினிமா, கலைகள் போன்றவை ஆராயப்படல் வேண்டும்..

ஏனென்றால் இவைகளில் ஈடுபட்டோருக்கு சமுதாயத்தில் உள்ள நாம் அள்ளிக் கொடுக்கிறோம். அரிசி விலை 20 ரூபாய் என்றால், விலையேறிப் போச்சு என புஜம் தட்டி போராடும் நாம், இது போன்றவற்றிற்கு கொடுக்கும் பண மதிப்பு அதிகம்தான். ஆனால் அந்த மதிப்பிற்கேற்றார் போல் இவையின் பங்கு சமுதாயத்திற்கு இருக்கிறதா?
இல்லை அல்லவா?

விஞ்ஞானி ஆகி விட வேண்டும், பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்று கனவு காண்பவர்களை விட இந்த பொழுது போக்கு துறையில் புகழ் பெற வேண்டும் என துடிப்பவர்களே அதிகம்..

காரணம் சொன்னேனே .. புகழ்.. மற்றவர்களால் போற்றப்படுதல்..

அப்படியானால்..

அப்படியானால், தொழிகளுக்கு நாம் அளிக்கும் மதிப்பும், அதன் சமுதாயப் பலனும் ஒத்துப் போகவில்லையா? ஏன் ஒத்துப் போகவில்லை..

உற்பத்தி செய்பவனை விட வினியோகிப்பவன் அதிக லாபம் பெறுகிறான்.

அந்த லாபத்தை உற்பத்தி செயபவனுக்கு கடனாய் கொடுத்து வட்டியும் பெறுகிறான்

எங்கே தோன்றியது இம்முரண்? காரணம் என்ன?

கொஞ்சம் விவரித்தால் இன்னும் ஆழமாக சிந்திப்பிர்கள் என நினைக்கிறேன்..

கலெக்ஷன் ஆஃப் நாலெட்ஜ் - அறிவு!!!!!

காட்டு மிராண்டிகளாக மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்து சமுதாயமானது வரை உயிர் வாழவும், பசியாறவும், இனம் காக்கவும் மட்டுமே நேரம் இருந்திருக்கும்..

சமுதாய அமைப்பு உண்டான பிறகு, இத்தேவைகளுக்காக எல்லா மனிதர்களும், எல்லா நேரங்களிலும் உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று..

மனிதனுக்கு நேரம் மிச்சமானது. அந்த மிச்சமான நேரத்தை என்ன செய்வது? மனிதன் அதை உபயோகமாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் கழிக்க விரும்பினான்

இதனால் உண்டானவை, பொழுது போக்குகள். இந்தப் பொழுதுபோக்குகளின் பக்க விளைவுகள் கலாச்சாரம் பரப்புதல், எது நல்லது எது கெட்டது என எடுத்துக் காட்டல், இப்படி எவ்வளவோ உண்டு. சொல்லப் போனால் நாடகங்கள் வரலாற்றை சுமந்து நின்றன்.. நல்ல சிந்தனைகளைத் தூண்டின. இதனால் மக்களுக்கு பல செய்திகளைக் கொடுக்க முடிந்தது..

ஒரு பக்கம் பொழுது போக்கு. அதனால் சிறிது பயணும் கூட. சந்தோஷமான மனம் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் வேலை செய்ய பலன் கூடியது..

சந்தோஷமான மனதில் கோபம் குறைகிறது. களைப்பு குறைகிறது.. இப்படி பல விளைவுகள் உண்டு, அப்படி இருக்க பொழுது போக்கு ஒரு தொழிலில்லை. அதனால் சமுதாயத்திற்கு பலனில்லை என்று எண்ணுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

அந்தத் தொழிலை நாம் நேர்மையாக்ச் செய்கிறோமா என்று கேட்டால் அதில் தான் விவாதம் வரக் கூடும்.

இப்போ சொல்லுங்கள்.. சினிமா தொழிலில்லை என்று நானா சொன்னேன்?

நான் கேட்ட கேள்வி என்ன?

ஒரு விஞ்ஞானி வாழ்நாளில் சம்பாதிப்பதை ஒரு சினிமாக் கலைஞன் ஒரு நாளில் பெற்று விடுகிறானே!!!

சமுதாயத்தில் தொழில்களின் இந்த மதிப்பு வேறுபாட்டைக் கேட்கிறேன் விவாதிக்க..

விளையாட்டிற்கும் இதே மாதிரி சமூக பலன்கள் உண்டு. ஆனால் அத்துறையில் முக்கியமாக் கிரிக்கெட்டில் உள்ளவர் பெரும் வருமானத்தையும், சமுதாயம் அதனால் அடையும் பயனையும் ஒப்பு நோக்கும் பொழுது விவசாயியை பட்டினி போட்டு நாம் இவர்களை தலையில் தூக்கிக் கொண்டு ஆடுகின்றோமே இது ஞாயமா எனக் கேட்கிறேன்.


நான் சினிமா / விளையாட்டு போன்றவை தொழில் அல்ல எனக் கூறவில்லை. ஆனால் நாம் அவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் / அதில் ஈடுபட்டோருக்கு கிடைக்கும் வருமானம் சரியா எனக் கேட்கிறேன்.


30000 ரன் அடிச்ச டெண்டுல்கரை தலையில வச்சுகிட்டு ஆடற நமக்கு, ஒரு ஹெக்டேரில் ரெகார்ட் விளைச்சல் என்னன்னு தெரியாது..

உற்பத்தி செய்பவன் முதலீடு செய்கிறான். விற்கா விட்டால் நஷ்டம் அதிகம். ஆனால் இடைத்தரகன் அப்படி அல்ல. அவனுக்கு விற்பவன் விற்றாக வேண்டிய கட்டாயம். வாங்குபவனுக்கு தேவை இருக்கு.. அதனால் பேரத்தில் இடைத்தரகன் கை ஓங்கி இருக்கு..

இதை மாற்றணும் என்றால் உற்பத்தி செய்பவனுக்கு தேவை எவ்வளவு என்று புரியணும். சப்ளை டிமாண்ட் - சரியாய் மெயிண்டெய்ன் செய்யணும். உற்பத்திப் பொருளை நீண்ட நாட்ளுக்கு பாதுகாக்கவும், தன் வட்டத்தை விட்டு வெளியில் வரவும தெரிய வேண்டும்.

அளவுக்கு அதிகமாக லாபம் வைப்பது, அதனால்தான் சில மதங்களில் பாவமாகச் சொல்லப்பட்டுள்ளது,

தொழில் போட்டி சமுதாயத்திற்கு நன்மைதான், விலை குறைகிறது..

ஆனாலும் செய்யும் தொழிலில் அநியாய லாபம் பார்ப்பதுதான் தவறு..


கொஞ்சம் அப்படியே ஒரு ஸ்டெப் பின்னாடி வருவோம்..

மேனேஜர் கிட்ட போய் ஊதிய உயர்வு கேட்கிற நாம் எந்த எந்த அடிப்படையில் கேட்கிறோம்? 

ஞாயமான கோரிக்கைகள் தானா?


(இதுக்கு பேரு ஆப்பு என்று யாராவது அர்த்தம் சொன்னால் அது ஹி ஹி)

தொடரும் .
.

Tuesday, December 22, 2009

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி!

தொடரை வென்றவுடன் தொடர் முடிவில் மாற்றமேதும் ஏற்படுத்தாத கடைசிப்போட்டியை Dead rubber/Dead match என்று அழைப்பார்கள்.

ஆனால் இந்திய அணி அண்மையில் இரண்டு dead rubberகளை இழந்தது. இலங்கையில் வைத்து முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்றபின்னர் ஐந்தாவது போட்டியில் தோற்றது. அந்தப் போட்டியை வென்றிருந்தால் ICC ஒருநாள் தரப்படுத்தலில் முதலாமிடத்தைப் பிடித்திருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாகப் பத்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற மைக்கல்லையும் கோட்டை விட்டார்கள்.


இலங்கையில் வைத்து White wash அடிப்படையில் ஒருநாள் தொடரை முதல் தடவையாக வென்ற பெருமையையும் பெறமுடியாமல் போனது.

இப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.

இதனால் இம்முறை இந்தியா இழந்திருப்பது ICC யின் தரப்படுத்தலில் முதலாம் ஸ்தானத்தை மட்டுமல்ல – பெறுமதிவாய்ந்த பணப்பரிசையும் தான்!


இப்படி எல்லாம் என்னுடைய நண்பர் லோஷன் ரொம்பவே கவலை தெரிவித்து இருந்தார். அவருக்கு நான் சொன்ன ஆறுதல் மொழிகள் கீழே


1. தொடரை ஜெயித்து விட்டுதான் ஓய்வெடுப்பது என்று தீர்மானத்துடன் இதுவரை இந்தியா ஆடியதில்லை. தற்பொழுது அந்த பழக்கம் வந்து விட்டிருக்கிறது. இதுவே மிகப்பெரிய மாற்றம்.

2. எல்லா மேட்சுகளையும் வென்றால் அப்புறம் அந்த நாடுகளில் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடும். அப்புறம் அந்த நாட்டுப் பணம் கிரிக்கெட் மூலமாக இந்தியாவிற்கு எப்படி வரும்??  

3. இவங்களை அடுத்த முறை வென்றுவிடலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை எதிரி அணியின் மனதில் உருவாக்குவதன் மூலம், அடுத்த தொடருக்கு அச்சாரம் போட்டு விடலாம். இல்லையென்றால் அடுத்த முறை நம்மோட விளையாட மாட்டாங்க இல்லையா?

4. அடிச்சா வலிக்காத மாதிரி அடிக்கணும். வலிச்சதுன்னா அந்த அணிக்கு ரோஷம் வந்திடும். அப்புறம் அவங்க தீவிர பயிற்சியெல்லாம் எடுத்து நம்மளை துவைச்சு எடுத்திடுவாங்க. அதிரடி மாற்றமெல்லாம் செய்வாங்க. இதெல்லாம் தேவையா?

5. எப்பவுமே டாப்பில் இருக்கறவங்களை பல பேர் குறைசொல்லிகிட்டே இருப்பாங்க. பொறாமை நிறைய இருக்கும். அரசியல் அதிகமா விளையாடும். அதனால கொஞ்சம் அடக்கி வாசிச்சா, நல்ல பேர் கிடைக்குமில்ல..
இப்போ ஆஸ்திரேலியா இந்தியாவை ஜெயிச்சா அது செய்தி.. இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சா அது வரலாறு. எதுக்கு அதிக விளம்பரம் கிடைக்கும் யோசிச்சுப் பாருங்க.

6. இப்போ ஆஸ்திரேலியா நம்பர் 1 என்றால் இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் நடக்கறப்ப ஆஸ்திரேலியா தோக்கணும் என்பதற்காக இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ண மத்தவங்க வருவாங்க. பரிசுகளை அள்ளி வீசுவாங்க. அவங்களைப் பொறுத்தவரை இந்திய அணிதான் கதாநாயகன். ஏன்னா மத்த அணிகளை புழுமாதிரி நசுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா சரிசமமா ஆடி ஜெயிக்குது. அதே இந்தியா எல்லா அணிகளையும் நசுக்கினா அப்போ இந்தியா வில்லனாகிடுமே. அப்புறம் சப்போர்ட்டெல்லாம் ஆஸ்திரேலியா பக்கம் போயிடும்.

7. இன்னார்தான் ஜெயிப்பாங்க அப்படின்னு தெரிஞ்சு பார்க்கிற போட்டி போர்

8. இப்படி எல்லா டீமும் கொலை வெறியோட (கில்லர் இன்ஸ்டிங்க்ட்???) விளையாடினா எப்படி கென்யா, பங்களாதேஷ், ஸ்காட்லாண்ட், நெதர்லேண்ட், நமீபியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், அமீரகம் இப்படிப் பலப் பல புது அணிகளை வளர்ப்பது? தோல்விகள் அவங்களைத் துவளச் செய்யாதா? அப்புறம் கிரிக்கெட் எப்படி மத்த நாடுகளில் வளரும்?

9. வெற்றியே சலிச்சுப் போயிடும் தோல்வி இல்லாவிட்டால். அப்புறம் சோம்பேறித்தனம் வந்திடும்.

10. ஜெயிச்சுகிட்டே இருந்தா அரசியல் உள்ளே நுழையும். நம்ம மக்களைப் பற்றிதான் தெரியுமே.. ஜால்ரா போடறவங்களை அணியில் நிலைக்க வைக்கவும், எதிர்கருத்துள்ளவங்களை ஒதுக்கவும், களத்தில் ஆடாம அறையில் ஆடுறவங்க ஆட்டம் ஆரம்பமாகும். அப்புறம் அடுத்த தலைமுறை அணியை எப்படி உண்டாக்கறது?

11. கிரிக்கெட் விளையாட்டை விட பெட்டிங்லதான் அதிக பணப்புழக்கம் இருக்கு. அப்பப்போ தோக்காட்டி அப்புறம் இப்படி இருக்கிற ஒரு தொழிலே நசுங்கி பொருளாதாரம் நசுங்கிடாதா?

12. ஹார்த்தே ஹார்த்தே ஜீத்னே வாலேக்கோ பாஜிகர் கஹதேஹேன்..அப்படின்னு ஒரு டயலாக் இருக்கு. தோல்வியின் மூலம் வெற்றி பெறுபவன் தான் பாஜிகர் என்று அர்த்தம். (பாஜிகர் அப்படின்னா என்னப்பா? ஹிந்தி நல்லா தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்).. இந்த மாதிரி சில தோல்விகளை பெருந்தன்மையா ஏற்றுக் கொள்ளுதலை விட்டுக் கொடுத்தல் அப்படின்னு சொல்வாங்க. இந்தப் பொன்னான மனசை புரிந்து கொள்ள வேண்டும்.


13. விளையாட்டை விளையாட்டா எடுத்துக்கணும். ஜெயிக்கணும் என்கிற சீரியஸ்னஸ் எதுக்கு?

14. கடைசிப் பந்தில ஹார்ட் அட்டாக் வந்து ரசிகர்கள் அவுட் ஆகி இருக்காங்க. அப்படி இருக்க, கொலைவெறி எதுக்கு?


15. நம்மிடம் மீண்டும் மீண்டும் தோற்பவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிச்சா நம்ம வீரத்திற்கு என்ன மரியாதை? நீ அடிச்சது ஒரு புள்ளைபூச்சியை என்று வடிவேலு மாதிரி டயலாக் பேசமாட்ட்ங்களா?

16. ஏற்கனவே டஃப் ஃபைட் குடுக்கறப்ப, அவர் குரங்குன்னு சொன்னார், இவர் முறைத்தார், இவர் கைதட்டினார் அப்படின்னு எக்கச்சக்க கோள்மூட்டல்கள். இதில மத்தவங்க கைஜாலம் காட்ட வாய்ப்ப்பளிக்கலன்னா, வாய்ஜாலம் இன்னும் அதிகமாகிடாதா?

17. இஃப் அண்ட் பட்ஸ்.. அதாவது அப்படி நடந்திருந்தா இப்படி நடந்திருந்தா அப்படிங்கற சுவாரஸ்யமான விவாதங்களுக்கு வழியே இல்லாம போயிட்டா அப்புறம் நாங்க எதைத்தான் வச்சு டைம்பாஸ் பண்ணறது?

18. இந்தியா மட்டும் நியூசிலாந்துடன் கடைசி ஒரு நாள் போட்டியைத் தோக்கலைன்னா இப்படிப்பட்ட வாதங்களை நாம் யோசிச்சுதான் இருப்போமா?

19. நம்மால ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கைதான் வளர்ச்சியின் வேர்.. அந்த நம்பிக்கையை அத்தனை அணிகளுக்கும் இந்திய அணி தருவதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் விளையாட்டுக்கே நன்மைதானே

20. ஐ.பி.எல் ஆடறதால பணம் கொழிக்குது. ஐ.பி.எல் ஆடறதால இந்திய அணி கூட விளையாடறப்ப காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறாங்க என்ற அவப்பெயர் வீரர்களுக்கு வராம தடுக்குது இல்லையா? இந்திய அணியினருக்கு மத்தவங்களோட பலவீனம் தெரிஞ்சிட்டது. இனிமே வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடக் கூடாது அப்படின்னு யாராவது குரல் கொடுத்தா என்னாவது?

21. பழைய சாதனைகளால் டீமில் அசைக்க முடியாத சக்தி படைத்தவர்களை ஆட்டிப் பார்க்க வழி வேணாமா?

22. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. அப்புறம் வெற்றி மட்டும் எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்?


வாஸ்தவந்தானுங்களே????


.

மின்னணு இயந்திரமா? வாக்குச் சீட்டா?

தமிழ்நாட்டு பிரச்சனையாக இருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் புகார், இப்போது தேசிய அளவில் உயர்ந்து விட்டது..

மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களித்தவர்களே!

எப்படி வாக்களித்தீர்கள் என விளக்க முடியுமா?

மின்னணு இயந்திரத்தைப் பற்றிய தகவல்கள்..

http://www.indian-elections.com/electoralsystem/electricvotingmachine.html


http://www.andhrapradeshstate.in/how-to-cast-vote-using-evm-in-india-casting-vote-with-electronic-voting-machine/

முக்கியமான விஷயம். இதில் உள்ள ஃபர்ம்வேர் மைக்ரோகண்ட்ரோலர் உற்பத்தி ஆகும் பொழுதே ப்ரோக்ராம் ஆனது. இதை மாற்ற முடியாது..

http://toastmasterspeeches.blogspot.com/

இதையும் படித்துக் கொள்ளுங்கள்..

நான் கொடுத்த சுட்டிகளின் மூலம் எப்படி ஓட்டுப் போடுவது என்று படித்து இருப்பீங்க..

1. வோட்டுப் பதிவு ஆரம்பம் என்பதற்கான பொத்தானை அழுத்தி வாக்குப் பதிவு ஆரம்பமாகும்.

2. முதலில் அலுவ்ல்ர் ஒரு பட்டன் அமுக்குவார். இதனால் எந்திரம் வாக்கைப் பதிவு செய்து கொள்ளத்தயாராகிறது.

3. வாக்குப் பதிவு செய்பவர் தனது விருப்பமான சின்னத்திற்கான நீலப் பொத்தானை அழுத்தினால், அந்தச் சின்னத்திற்கு ஒரு ஓட்டு பதிவாகும். பீப் ஒலி வரும். அந்தச் சின்னத்திற்கு எதிராக சிவப்பு விளக்கு எரியும்.

4. மறுபடி அலுவலர் அடுத்த வாக்காளருக்கு அனுமதி அளித்து பொத்தானை அமுக்குவார். அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்.

சிவா.ஜி சொல்வது போல நடந்திருந்தால், அலுவலர் பொத்தானை அமுக்கியவுடன் உதயசூரியனுக்கு எதிரான விளக்கு எரிய ஆரம்பித்திருக்கும்..

ஓட்டுப் போட வந்தவர் மாற்று கட்சியைச் சேர்ந்தவர் என்னும் பட்சத்தில் அனைத்து விளக்குகளும் அணையாமல் நான் ஓட்டுப் போட மாட்டேன் என்று அடம் பிடிக்கலாம். அலுவலர் மாட்டிக் கொள்வார்...

இப்படி நடக்கிறது என்று தெரிந்தாலே அந்த அலுவலரை கண்ணி வைத்துப் பிடித்து அவர் வேலைக்கே உலை வைத்து விட முடியும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வன்முறையாளர்கள் உள்ளே நுழைந்தால் வாக்குப்பதிவை உடனே மூடிவிட பொத்தானைக் கொண்டுள்ளது. அதை மறுபடி எப்படி ஓபன் செய்வது என்று அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. அதனால் வன்முறையின் மூலம் வாக்குச்சாவடியை பிடித்து ஓட்டுப் பதிவு செய்வதை தடுக்க முடியும்.

இதை ஏன் செய்வதில்லை? இது மாற்று கட்சியினருக்குத் தெரியாதா என்ன?

முதலில் பதிவான ஓட்டுகளுக்கும் எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றன என்கிறார்களே, அதை நிரூபிக்க வேண்டும் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு பதிவானது என்று ஏஜெண்டுகளுக்குத் தெரியும் அல்லவா? அதைக் கூட்டினாலே போதுமே.. ஆனால் இதை எல்லாம் ஏன் புகார் கூறுபவர்கள் செய்வதில்லை என யோசிக்க வேண்டும்.

1. அவர்களிடம் ஆதாரம் இல்லை.

2. ஓட்டுப் பதிவு முறையை குறையற்றதாக்க அவர்களுக்கு எண்ணமில்லை. அப்படிச் செய்தால் பிற்காலத்தில் தான் முறைகேடு செய்ய முடியாது என்று நம்புகிறார்.

நான் இரண்டாவதையே சரியான காரணம் என்று நினைக்கிறேன்,

முக்கிய விஷயம்.. இன்று உபயோகிக்கும் இந்த வாக்கு இயந்திரத்தை வடிவமைத்தவர்.. அமரர் சுஜாதா...

இந்த இயந்திரத்தைப் பற்றி அவர் தெளிவாகவே விளக்கி இருக்கிறார். அது மட்டுமல்ல. இதை முறித்துக் காட்ட சவால் கூட விட்டிருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு.

இதைப் பற்றி சுஜாதா ஒரு வார இதழில் எழுதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையைப் பற்றிய கட்டுரை கிடைத்தால் பதிகிறேன். படித்தால் இன்றைய எதிர் கட்சிகள் எப்படி எல்லாம் பொய் சொல்கின்றன எனத் தெரியும்.

உதாரணமாக பா.ம.க மென்பொருள் மாற்றம் என்று சொன்னார்கள்.

1. மென்பொருள் மாற்றவேண்டுமானால் வாக்குப் பதிவு இயந்திரத்தை திறக்க வேண்டும். அதன் பிறகு அதில் இருக்கும் மைக்ரோ கண்ட்ரோலரை டி-சால்டர் செய்து எடுக்க வேண்டும். அதற்குப் பின் அந்த தொகுதிக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலரை அங்கே சால்டர் செய்ய வேண்டும். எந்தப் பொத்தான் நம்ம கட்சிக்கு என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் சிறப்பு உபகரணங்கள் வேண்டும்.. சுஜாதாவின் மூளையில் உருவான பாதுகாப்புத் திட்டங்கள் மிகவுமே சிக்கலானவை.

உள்ளே என்ன இருக்கிறது என்று அறியாமலேயே 2012 ல் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்களே அதைப்போலத்தான் மின்னணு இயந்திரம் மாற்றம் செய்யப்படுகிறது என்பதும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கே உரிய முறையில் ஓட்டுப் பதிவு நடக்கும். ஆனால் இந்தியா முழுவடும் ஒரே முறைதான் என்பது மிகப் பெருமையானது. அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் ஜெயிக்கக் காரணம் என்ன? ஃ புளோரிடா மாநிலத்தில் பஞ்ச் கார்ட் என்ற முறையில் நாம் வாக்களிக்கும் வரிசைக்கு எதிராகா முதலிலேயே குறியிடப்பட்ட இடத்தை துளையிட்டு ஓட்டு செலுத்த வேண்டும். பலஎ துளையை முழுமையாக இடாமல் விட்டதால் பல ஓட்டுகள் செல்லாததாகி விட்டன. இதனால் புஷ் ஜெயித்தார். இருந்தாலும் அவர்கள் ஓட்டுப் பதிவு முறையை மாற்ற வேண்டும் என கதறவில்லை,


நம்முடைய மின்னணு எந்திரத்தில் இந்தக் குளறுபடி இல்லை. இது மட்டுமல்ல, இன்னும் பல குளறுபடிகள் இல்லை,


எங்கள் வீட்டினருகில் ஒரு அரசு உழியர் இருக்கிறார். சம்பளம் என்னவோ ஏழாயிரம்தான். ஆனால் கார் பங்களாவோடு மிக வசதியாக வாழ்கிறார். பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. சரி விஷயத்துக்கு வருகிறேன்,

அவர் என்னிடமே ஒருமுறை அதாவது போன சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சொன்னார். என்னை ஹொசூருக்கு அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் வாக்குச்சாவடி பணிக்கு அனுப்பியிருந்தார்கள். அந்த கிராமத்துமக்களில் பெரும்பாலோனோர் எழுதப் படிக்கத்தெரியாதவர்கள். வாக்கு இயந்திரத்தை கையாளத் தெரியாமல் என்னிடம் வந்து கேட்பார்கள். நானும் எழுந்து சென்று இப்படித்தாம்மா அழுத்தனும் என்று சொல்லி உதயசூரியனுக்கு அழுத்தி வாக்கை பதிவு செய்துவிட்டு வந்து ரீசெட் செய்யாமல் இருப்பேன். அவர்களும் அவர்களுக்குப் பிடித்த சின்னத்தில் அழுத்துவார்கள். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதால் ஒரு எர்ரர் சத்தம் கேட்கும். அதை தங்கள் வாக்கு பதிந்துவிட்டதாக நம்பி திருப்தியோடு போய்விடுவார்கள். நானும் சளைக்காமல் அவர்களுக்கு ”உதவி” செய்துகொண்டேயிருந்தேன்.

என்று சொன்னார். நானும் உங்களைப் போலவே கேட்டேன். கட்சியின் பிரதிநிதிகள் இருப்பார்களே என்று. அவர்கள் வாக்குப் பதிவு செய்யுமிடத்துக்குள் வரமாட்டார்கள், அதனால் பிரச்சனையில்லை என்றார்.

மேலும் எங்கள் கிராமத்திலும் அந்தமுறை தி.மு.கவே நிறைய வாக்குகள் வாங்கியிருந்தது. அதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். எங்கள் கிராமத்திலிருப்பவர்களுக்கு இரட்டை இலையைத் தவிர எதற்கும் வாக்களித்து பழக்கமில்லை. அவர்களும் ஆச்சர்யப்பட்டு போனார்கள். எப்படி நிகழ்ந்தது இது என்று.

மீண்டும் அந்த அரசுஉழியரை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு எப்படியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது. வந்தால் எங்களுக்குத்தான் ஆபத்து. அதனால் எங்களுக்குள் முடிவு செய்து இப்படி செய்தோம். என்றார்.

அதே போலத்தான் எல்லா கிராமங்களிலும் தி.மு.கவும், நகரங்களில் மற்ற கட்சிகளும் நிறைய வாக்குகள் வாங்கியிருந்தன. எங்கள் மாவட்டத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் மிக அதிகம் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறேன்.

இது அத்தனையும் உண்மை. என்னால் எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கமுடியும்

1977 -ல் இந்திரா காந்தி இரஷ்யாவில் இருந்து மை வரவழைத்து ஓட்டுச் சீட்டுகளில் காங்கிரஸீற்கு முத்திரையை அந்த மையால் பிரிண்ட் செய்து தயாரித்து இருக்கிறார் ஓட்டு எண்ணும் நாளன்று நாம் குத்திய முத்திரை மறைந்து போய் அந்த முத்திரை வெளிவரும் என்றார்கள்.

எப்படி ஓட்டுப் போடுவது என்று அரசியல் கட்சிகள் மேடையில் அப்பாவி ஜனங்களுக்கு விளக்கலாமே? அதை ஏன் யாரும் செய்வதில்லை?

வீடு வீடாக போய் கவர் டெலிவரி செய்ய ஒரு கட்சிக்கு நேரமும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்றால், வீதி வீதியாகச் சென்று எப்படி ஓட்டளிப்பது என்று விளக்க வேண்டியதுதானே? அதுவும் நாட்டிற்கு செய்யும் தொண்டுதானே மக்கா.. வாழைப்பழத்தை நாங்க உரிச்சு வைக்கணும் என்று எதிர்பார்த்தால் எப்படி.. இவர்களுக்கு ஓட்டு வேணும்னா இவங்கதான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எப்படி ஒரு சிஷ்டத்தை உடைக்க முடியுமோ அதே மாதிரி சதித்திட்டத்தையும் உடைக்க வழி இருக்கு. அதைச் செய்யாமல் இருப்பதாலேயே நாட்டை ஆளும் திறமை இவர்களுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியுமே!

எப்படி ஓட்டுப் போடுவது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு இல்லையா? வாக்கு பதிவு இடத்தில் பணி செய்யும் அதிகாரிகள் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் செய்யும் தவறை இது தடுக்குமே!!!

வாக்குப் பதிவு எந்திர மாடலை ஒரு தொகுதிக்கு 10 செய்தால் கூட (அதிகம் லாஜிக் தேவையில்லை.. சிம்பிளா செய்தால் போதும், ஆட்சி அவங்க கையில்தானே? ஏன் செய்யவில்லை? ஏன் வெறுமனே குரல் கொடுக்கிறார்கள்?

யார் மேலேயாவது பழியைப் போட்டு அவர்களைத் திட்டுவதால் எதுவும் என்றும் சரியாகப் போவதில்லை. இதை யோசிக்க எனக்கு 5 நிமிடம் கூட ஆகவில்லை. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்?

அரசு ஊழியர்களை சலுகையும் பாதுகாப்பும் தந்து தி.மு.க ஓட்டு வாங்க முயற்சிக்கிறதென்றால் அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று யார் யோசிக்கிறார்களோ அவர்கள்தான் தி,மு,க வை வெல்ல முடியும்.

உலகில் எல்லாவற்றிற்கும் வழி இருக்கிறது,...திட்டுவதால் என்றும் எதுவும் சரியாகப் போவதில்லை...

சிவா.ஜி என் கருத்துக்களை ஆழச் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

எந்த எதிர் கட்சியினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது பிதற்றல். அதைச் செய்ய அவர்கள் முயற்சிக்கவில்லை என்பதுதான் உண்மை...

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் கற்பனை..

அரசு அதிகாரிகள் மீது சும்த்தும் குற்றச்சாட்டு சோம்பேறித்தனம்.. எஸ்கேப்பிஸம் என்னும் நழுவல்...

சிவா.ஜி இந்தக் குற்றச்சாட்டைச் சொன்னால் அவரால் எதுவும் செய்ய முடியாது என ஒப்புக் கொள்வேன்.

ஆனால் இந்த நாட்டை நங்கள் ஆளுவோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் புலம்பினால்...

அப்புறம் அவங்களுக்கு எதுக்குங்க நாங்க ஓட்டுப் போடணும். இதையே, அதுவும் அவங்க ஆதாயத்துக்கு, மாற்றத் திட்டமிட முடியாதவர்கள் எப்படி நாட்டை வழிநடத்தப் போகிறார்கள்?


தாமரையின் விளக்கம் அருமை. நானும் இதையெல்லாம் நெட்டில் படித்தேன். AVM ஐ ஒன்றுமே செய்ய முடியாது என்பது உண்மையல்ல. ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஐந்தாவது வாக்கும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழுமாறும் ப்ரோகிராம் செய்ய முடியுமென்று.


EVM கட்டமைப்பு புரியாமல் அவர் பொதுப்படையாகச் சொல்லி இருக்கிறார். எந்தப் பொத்தானுக்கு எந்த வேட்பாளர் என்பது தொகுதிக்கு தொகுதி மாறும். போட்டியிடும் வாக்காளர் எண்ணிக்கை, பெயரின் அகரவரிசையை வைத்தே இது முடிவு செய்யப்படுகிறது, ஆகவே ஒரு தொகுதியில் தி.மு.க. விற்கு எந்தப் பொத்தான் என்பது வேட்பாளர் இறுதிப் பட்டியல் வந்தப் பின்புதான் தெரியும்.

அடுத்ததாக EVM கட்டமைப்பின் படி மென்பொருளில் மாற்றம் செய்ய மைக்ரோ கண்ட்ரோலரைப் பெயர்த்தெடுத்து மாற்ற வேண்டும். எந்தத் தொகுதிக்கு எந்த EVM என்று தெரியாத நிலையில் மாற்ற முடியாது, எந்திரங்கள் தேவை நிர்ணயிக்கப்பட்டு மத்திய குடோனிலிருந்து அவை அனுப்பப் பிரிக்கப்பட்ட பின்னரே இதைச் செய்ய முடியும். ஆனால் அதற்கான கால அவகாசம் கிடையாது.


பொத்தான்களில் எதோ சங்கேதம் இருக்கிறது என்பது மொக்கைத்தனமானது. EVM எந்திரத்தை கணினி மயமாக்காமல், இணையத் தொடர்பு இல்லாமல் தனிப்பட்ட கருவியாக செய்ததின் காரணம் அதுதான். படம் பார்த்தீர்கள் அல்லவா அந்தப் பொத்தான்களைத் தவிர வேறு உள்ளீட்டு முறை இல்லை. அதில் சங்கேதக் கோடு என்பது யார் செய்ய முடியும்? அதை மென்பொருள் அல்ல, மைக்ரோ கண்ட்ரோலர் சப்போர்ட் செய்ய வேண்டும்.

ஒரு EMV ஐப் பெற்று அதை உடைக்காமல் தவறாக பணிசெய்வதை நிரூபிக்க மனு செய்யலாமே... ஒரு நிபுணர்.. பல கட்சி பிரதிநிதிகள்..

நிபுணர் பலவாறு அதைப் பரிசோதனை செய்யலாமே.. ஏன் இந்த ஹேஷ்யங்கள் எல்லாம்? எதிர் கட்சிகள் இதை கேட்க உரிமை உண்டு. ஆனால் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் EVM அரசியல்வாதிகளால் வடிவமைக்கப்பட்டது அல்ல. ஒரு நாட்டு நல விரும்பியால் வடிவமைக்கப்பட்டது.


அரசுஊழியர்கள் செய்தது படிப்பறிவில்லாத கிராமத்து மக்களிடம்தான். லைட் எரியவில்லையென்றாலும் கேட்பதற்கு தைரியமில்லாத அப்பாவிகளிடம்தான்.

இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்பவர்கள் எப்படி ஓட்டுப் போடுவது என்றுச் சொல்லிக் கொடுக்க வேண்டுமல்லவா? எதிர் கட்சிகள் ஏன் எப்படி ஓட்டுப் போடுவது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யக் கூடாது?


அரசு அதிகாரிகள், குடும்பத்துடன் தி.மு.க.விற்கு ஓட்டளிப்பது அவர்களின் ஜனநாயகக் கடமையை அவர்களின் விருப்பப்படி நிறைவேற்றுவ்து ஆகும். தேர்தல் கமிஷன் பரிசீலித்து அங்கீகரித்த வேட்பளருக்குத்தானே ஓட்டளிக்கிறார்கள் அதில் தவறில்லை. மற்றவரின் ஓட்டு தவறுதலாக தனது விருப்பமான கட்சிக்கு விழுமாறு செய்பவரை கண்ணி வைத்துப் பிடித்து தண்டனை பெற்றுத் தருவதுதான் எதிர் கட்சிகள் நியாயமாக செய்ய வேண்டிய காரணம். ஆந்திராவில் இது போன்ற சில பூத் ஏஜெண்டுகள் EVM எந்திரத்தில் ஓட்டுப் பதிவு செய்த்து கண்டுபிடிக்கப்பட்டு மறுதேர்தலுக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது. அலுவலர் கூட மாட்டி இருக்கிறார்.


இப்படி ஒரு வழி இருக்கே அப்பு... நம்ம நாட்டிலேயே இருக்கே.. ஏன் இதை வலியுறுத்தலை. ஏன் ஓட்டுச் Cheat? விலை போகும் ஏஜெண்டுகளை நம்பி கட்சியின் எதிர்காலத்தையே ஒப்படைத்தால் எப்படி?



காகித வாக்களிப்பு இருந்தபோது ஒருமுறைகூட ஜெயிக்காத சில அ.தி.மு.க கோட்டைகளிலும், முழுக்க இயந்திரம் அறிமுகப்படுத்திய பிறகு தி.மு.க ஜெயித்திருப்பது எதைக் காட்டுகிறது?

இது காகித ஓட்டுப் பதிவில் அதிமுக அந்தத் தொகுதிகளில் தில்லுமுல்லு செய்ததாகக் காட்டுகிறது?

இப்படியும் பார்க்கலாம் அல்லவா?

புலம்புவதால் பிரயோசனும் இல்லை என்பது ஒருபக்கம். இவர்களைப் பார்த்துக் கொதித்து உங்க உடம்பை கெடுத்துக் கொள்ளாதீங்க. நமக்கு எக்கச்சக்க ஆசை இருக்கத்தான் செய்யும்.

ஆனால் நாம இறங்கி வேலை செய்யாம எல்லாம் மாறிடனும்னு ஆசைப்படறது தவறு... நம்மால ஒண்ணும் செய்ய முடியலையே என்பது இன்னும் அதிகமான ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் கொடுக்குமே தவிர அதனால் நன்மை எதுவுமே விளையப் போவதில்லை..

ஆனால் சின்னதா எதையாவது செய்து சின்ன மாற்றத்தை உண்டாக்கி சின்னச்சின்ன சந்தோஷம் பட ஆரம்பிச்சோம்னா ஆரோக்யமும் நல்லா இருக்கும், நாட்டுக்கும் நல்லது.

மின்னணு இயந்திரம் வாக்குச் சீட்டை விட நல்லது என்பதால்தான் நான் இவ்வளவு சொல்கிறேன். வாக்குச் சீட்டுகளில் பலப்பல முறையில் ஏமாற்ற முடியும்.. மின்னணு எந்திரத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. வாக்கு எண்ணும் பொழுது கூட செல்லாத ஓட்டுக் கணக்கிலும், 50 வாக்குக் கட்டுகளில் 49ம் 51 மாய் கட்டுகளைக் கட்டுவதாலும், வாக்குச் சாவடியில் அடாவடியாய் புகுந்து கள்ள ஓட்டுக்களை மானாவாரியாய் போடுவதாலும் இப்படிப் பலப்பல வகையிலும் நடந்த தவறுகள் குறைந்திருக்கின்றது. அதை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவர நடக்கும் முயற்சியே வாக்குச்சீட்டுக்கு மாறக் கேட்பது என நம்புகிறேன்.

வாக்குச் சீட்டுதான் வேண்டும் என்று சொல்பவர்கள் மின்னணு இயந்தியரம் பற்றி பயம் கொண்டவர்களாக இருக்கிறார்களே தவிர வாக்குச் சீட்டு விஷயத்தில் என்ன ஸ்பெஷல்?

1. செல்லாத ஓட்டு போடலாம். அனைத்து சின்னங்களிலும் முத்திரை இட்டு.
2. அழகா இலட்டர் எழுதி கூடப் போடலாம். நாட்டுக்கே தகவல் சொன்ன மாதிரி இருக்கும்.


இப்படி சிறப்புகளை எடுத்துச் சொல்லலாமே..


பொதுவாகவே பிறரைக் குறை சொல்வது, திட்டுவது போன்ற விஷயங்களை நான் ஆதரிப்பதில்லை . அப்படிச் சொல்றதா இருந்தாலும் அதை எப்படிச் சரி செய்வது என்ற கருத்தையும் சேர்த்துதான் சொல்வேன்..

பல இடங்களில் என்னோட குறை சொல்ற பதிவுகளைப் படிச்சீங்கன்னா, அது இது போல சும்மா திட்டுவதை எதிர்த்தே இருக்கும். பல விசயங்களை ஒழிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதுதான் முக்கியம்.

கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கேட்டுக் கேட்டு காது புளித்து விட்டது.

நீங்க ஓட்டு போட்டா நாங்க செய்வோம் என்பது நல்ல அணுகுமுறை அல்ல.

நாங்க செய்யறோம்.. உங்க ஆதரவு அதிகரிச்சா இன்னும் பலப்பல நல்லதுகளைச் செய்வோம் என்பதோ கட்சிகளின் சரியான அணுகுமுறையா இருக்கும். உழைக்க உழைக்க ஆதரவு அதிகரிக்கும்..

எங்களில் ஒருவரைத்தான் நீங்க தேர்ந்தெடுத்தாகணும் என்ற "கெத்து" தான் அனைத்திற்கும் காரணம். அதை மாற்றணும்னா அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே மாற்றணும் அல்லது இது போன்ற எண்ணம் கொண்ட கட்சி வரணும். 

 இதுவரை வந்து விழுந்த வாதங்கள்

மின்னணு எந்திரம்

நல்ல விஷயங்கள்

  • எளிமையானது
  • செலவு குறைவு
  • எண்ணுவதும், மறு எண்ணிக்கையும் சுலபம்
  • அடுத்த தேர்தல் வரை வாக்குகளை எளிதாக பாதுகாக்கலாம்
  • செல்லாத வாக்குகள் கிடையாது
  • வன்முறை மூலம் வாக்குச் சாவடியில் திடீரென நூற்றுக்கணக்கில் ஓட்டுக்களை குவிக்க முடியாது

சந்தேகத்திற்கிட்மான விஷயங்களும் தெளிவும்
  • அங்கே இங்கே என்று மக்கர் ஆகிவிடுது. நினைச்ச இடத்தில் அதை திறந்து சரி செய்றாங்க.
  • 10 இலட்சம் எந்திரங்களில் 1800 எந்திரங்கள் பழுது என்று தகவல் சொல்கிறது. எந்திரம் நல்ல முறையில் பணி செய்கிறதா என்று ஆராய்ந்த பின்னரே அதுவும் அனைத்து பூத் ஏஜெண்டுகளும் ஒப்புக் கொண்ட பின்னரே ஓட்டுப் பதிவு ஆரம்பமாகிறது.
  • கிராமத்துமக்களில் பெரும்பாலோனோர் வாக்கு இயந்திரத்தை கையாளத் தெரியாமல் இருப்பதால் அரசு அலுவலர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்கள்
  • தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் தேர்தல் கமிஷனும் அனைத்துக் கட்சிகளும் எப்படி ஓட்டளிப்பது என மக்களுக்கு விளக்கலாம்.
  • பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் ஓட்டளித்தவர் எண்ணிக்கையும் சில இடங்களில் வித்தியாசப்படுகிறது.
  • ஓட்டளித்த உடனே எண்ணிக்கை உயர்ந்ததா இல்லையா என பூத் ஏஜெண்டுகள் சரி பார்த்துக் கொள்ளலாம். ஓட்டளித்தவர்களின் பட்டியல் எண்ணிக்கையுடனும் சரிபார்க்கலாம். இல்லையென்றால் உடனே புகார் கொடுத்து மறுவாக்குப் பதிவு கோரலாம்.
  • ஒவ்வொரு ஐந்தாவது வாக்கும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழுமாறும் ப்ரோகிராம் செய்ய முடியும்.
  • ஆனால் கட்டமைப்பின் படி வாக்குப்பதிவு எந்திரத்தின் மைக்ரோகண்ட்ரோலரை பெயர்த்தெடுத்து சரியான மென்பொருள் கொண்ட இன்னொரு மைக்ரோ கண்ட்ரோலரை பொருத்தும் வரை முடியாது. இது வெறும் ஹேஸ்யம்.
  • அரசு ஊழியர்கள் நினைத்தால் குறிப்பிட்டக் கட்சியை ஜெயிக்க வைக்க முடியும்
  • இது எல்லாவகை ஓட்டுப்பதிவிற்கும் பொதுவானது. மின்னணு இயந்திரத்தின் மீதான விழிப்புணர்வு உண்டானால் அரசு ஊழியர்களால் ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய முடியாது..

காகித வாக்குச் சீட்டு

நல்ல விஷயங்கள்

எதிர்கட்சிகள் கேட்கின்றன


தீமைகள்
  • செலவு
  • செல்லாத ஓட்டு ஆகும் நல்ல ஓட்டு
  • வன்முறையால் கள்ள ஓட்டு
  • எண்ணுவதில் தாமதமும் குழப்பமும்
  • போலி வாக்குச்சீட்டுகள் வெளியில் அச்சடிக்கப்பட்டு ஒன்றிற்கு மூன்றாக ஒருவர் வாக்களிக்க முடியும்

புதுமுறைக்கு ஆலோசனைகள்
  • நவீன அடையாள அட்டை
  • வாக்கு இயந்திரத்தின் தர உயர்வு
கடைசியா ஒரு ஆலோசனை!!!

காகிதசீட்டை விட கணினிச்சிட்டு வரவேற்கத்தக்கதே!

அதை அறிமுகப்படுத்தியவர்களுக்கு அதனைப் பாவிக்கும் அறிவை மக்களுக்குப் புகட்டும் கடமையும் இருக்கிறதல்லவா. இதனைச் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு யாருக்கு உண்டோ அவர்கள் அதைச் செய்ய முன்வராதது ஏன்? என்மீது சுமத்தப்படுவது குற்றமல்ல பழியே என்று எடுத்துக் காட்டுவது என் நடவடிக்கைதானே. அதனை அறிந்து நான் பொறுப்புடன் நடக்கவேண்டாமோ? தேர்தல் நேரம்தவிர்த்து மற்ற நேரங்களில் ஆணையம் தூங்குகிறதேன்?
இது பலமுறை நடத்தப்பட்டாலும் யாரும் இதற்கு வருவதில்லை. நான் ஒரு முறை போய் கலந்து கொண்டிருக்கிறேன். வாக்குச் சாவடியிலும் எப்படி ஓட்டுப் போடுவது என்று படங்களுடன் கூடிய விளக்கங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

ஏன் அனைத்து டி.விகளும் தேர்தல் நேரத்தில் எப்படி ஓட்டுப் போடுவது என்ற விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது?

எப்படி ஓட்டுப் போடுவதென டி.விகளில் விளம்பரம் செய்தால் பலனிருக்கும். எலக்சன் கமிசன் இணையதளத்தில் சென்று ஆலோசனை கொடுத்து வைக்கிறேன். (டி.வியை பார்க்காதவர் உண்டோ?)

அனைத்து டி.வி களும் இலவசமா இதை ஒளிபரப்பலாமே!!!




இங்க போய் ஒர் மெயில் போடுங்களேன். என்ன நடவடிக்கை எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

.

வாரிசு அரசியல் சரியா? தவறா?



அரசியலில் அடிக்கடிச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு வாரிசு அரசியல். இது தவறு என்போர் சிலர். தகுதி வாய்ந்தவர் என்றால் சரியே என்பவர்கள் சிலர்.

கவனிக்க வேண்டிய விஷயங்களும் உண்டு.


தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருக்கச் செயல்


என்ற வள்ளுவனின் வாக்கும் மகனை லைம் லைட்டிற்குக் கொண்டு வருவது தந்தையின் கடன் என்கிறது.

அரசியல் என்பது மிகப் பெரிய கடல். அதில் ஒரு கட்சியை வளர்ப்பது என்பது ஒரு தனி மனித முயற்சி அல்ல. இலட்சக் கணக்கான தொண்டர்களின் முயற்சி. தகுதி உள்ளோரின் வாய்ப்பு தட்டிப் பறிக்கப் பட்டால் அது நாட்டின் நன்மைக்கு பங்கமாகும். அந்தக் கட்சியின் வலிமைக்கும் பங்கமாகும்.

தலைவனாக உருவெடுப்பது என்பது புதிதாய் ஆரம்பித்த கட்சியில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஏனென்றால் தலைவனை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே அக்கட்சியில் இணைகிறார்கள். அடுத்த அடுத்த தலைவனாக வருபவன் பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாக இருக்க வேண்டும். அப்படியானால் அதற்குரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

ஒரு தலைவனின் கடமைகளில் ஒன்று தனக்கு பின் யார் என்பதை அடையாளப் படுத்துவது மட்டுமல்ல, அவரை அந்த ஸ்தானத்திற்குத் தயார்ப்படுத்தலும்தான், ஆக தலைமைக்கு என்று சிலரை அடையாளம் காணுதலும் அவர்களுக்கு உரிய வாய்ப்புகளும் பயிற்சிகளும் தருதலும் அவர்களில் ஒருவரைக் கட்சித் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருக்கும் உளப்பாங்கை வளர்ப்பதுமாகும்.

இப்படி நடக்காத போது கட்சி உடைந்து வலிமை குறைந்து மீண்டும் ஒரு தலைவன் தலையெடுத்து வரும் வரை தடுமாறி விடுகிறது. யாரும் தலையெடுக்காவிட்டால் அக்கட்சி அழிந்தே விடுகிறது.

இதில் வாரிசுகள் கட்சிப் பெரும்பான்மையோரால் ஒப்புக் கொள்ளப்படுபவரில் ஒருவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பயிற்சிக்கென்று வாய்ப்புகள் எளிதாக்கப்படுவதை எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் என்று தூற்றத்தயங்குவதில்லை,

இதற்கு அடிப்படைக் காரணம் கட்சித் தலைமை இராஜதந்திரமாக பிறரை தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொள்வதில் தட்டி வைப்பது ஆகும்.

இப்படி ஆழமாய் சிந்திக்க சிந்திக்க வாரிசுகளுக்கு அரசியலில் அதிகப்படியான வாய்ப்புகளை ஏற்படுத்துவது முற்றிலும் தவறு என்று சொல்லவும் முடிவதில்லை..

இன்னும் கொஞ்சம் ஆழமாக...

கட்சிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது குறுகிய அளவில் இருப்பதால் தலைமை ஏற்றல் என்று வரும் பொழுது அவர்களின் பரந்த செல்வாக்கில்லாமை வெளிப்பட்டு விடுகிறது.

வாரிசில்லாத தலைவர்களின் மறைவின் போது கட்சிகள் அடைந்த நிலைமையை ஆராய்ந்து பார்த்தால்...

ஸ்தாபன காங்கிரஸ், அதன் தாய்கட்சியோடு இணைந்தது. கொள்கை மாறுபாடுள்ள கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அடுத்த தலைவர்களை அடையாளம் கண்டது. அ.தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்களும், அனுபவம் இல்லா வாரிசும் மறைந்து செல்வாக்கு பெற்ற ஜெயலலிதாவின் பின்னால் நின்றது..

கட்சிகளின் அடிப்படைக் கொள்கை, ஆளுமைத் தன்மை உள்ள அடுத்த தலைமுறை இரண்டும் இல்லாக் கட்சிகள் காணாமல் போய்விடுகின்றன.

அ.தி.மு.க வின் கொள்கை கலைஞர் எதிர்ப்பு. ஜனதாதள் கொள்கை காங்கிரஸ் எதிர்ப்பு..ம.தி.மு.க வும் அப்படித்தான், ஆக வைகோ விற்குப் பின்னால் ம.தி.மு.க - தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டிலும் கலந்து விடும். இப்படி இன்னொருத்தரை எதிர்ப்பதற்காகவே உண்டாகும் கட்சிகளுக்கு ஆளுமை நிறைந்தவர்கள் இல்லாத போது அந்தக் கட்சி அதன் ஒத்த கொள்கை உள்ள கட்சியுடன் கலந்து விடுகிறது.

ஆக கொள்கை அளவில் வித்தியாசம் குறைவாக இருக்கும்பொழுது வாரிசுகள் இல்லா விட்டால் கட்சி - காணாமல் போகக் கூடிய வாய்ப்பு அதிகம்.

ஆனால் வாரிசுகள் அராஜகம் என்பது வேறொரு பகுதி. அதை எதிர்ப்பதுதான் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக திரிந்து விட்டது என்று எண்ணத் தோன்றுகிறது..

வாரிசுகள் வளர்வதால் பிரச்சனை அதிகம் இல்லைன்னே தோணுது..

ஆனால்

வாய்ப்பு கிடைக்காமல் திறமை எப்படி வெளிவரும்? என்னதான் பிரதமரின் மகன் என்றாலும், மக்கள் ஓட்டளிக்காமல் மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. அடுத்த பிரதமரும் ஆக முடியாது. எஸ்.வி. ஜானகி அவர்களால் எம்.ஜி.ஆரின் வாரிசாக நிலைக்க முடிந்ததா? இல்லையே.

அரசியலில் வெகுப் புதிதாய் நுழைபவர் வேறு, அரசியல் குடும்பப் பிண்ணனியுடன் நுழைபவர் வேறு. இராகுல் காந்தி கட்சி விளம்பரங்களை ஒட்டி, பொதுக்கூட்டங்களில் பார்வையாளராக கைதட்டும் வீர்ராக பொது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமா என்ன?

அரசியலில் பதவிகள் பெற முக்கியமானவை செல்வாக்கு, செல்வம், ஆளுமை, திறமை போன்றவை. இதில் முதல் மூன்றும் வாரிசுகளுக்கு எளிதில் கிடைத்து விடுவதால் அவர்களால் சட்டென்று உயர்ந்து விட முடிகிறது.

ஜனதாதள் என்ற கட்சி என்ன ஆனது? துண்டு துண்டாய் உடைந்து விடவில்லையா? முலாயம் சிங்கிற்குப் பின்னால் சமாஜ்வாடி கட்சியின் கதி? வைகோ விற்குப் பின்னால் ம.தி.மு.க?

இது சுதந்திரப் போராட்டக் காலமல்ல. அரசியலில் பங்கேற்பது முக்கியம் பலன் எதிர்பார்ப்பது முக்கியமல்ல என்றுச் சொல்வதற்கு, நான் மாவட்டச் செயலாளர் பதவிக்குத் தகுதியானவன் என தனக்குள் 20000 பேர் எண்ணிக் கொண்டிருக்கலாம், ஆனால் இருக்கும் பதவிகள் எத்தனை? 50?

எல்லோரும் வரிசைப் படிதான் வரவேண்டும் என்றால், அதாவது அடிப்படை உறுப்பினர், வார்டு மெம்பர், பஞ்சாயத்துத் தலைவர், நகராட்சித் தலைவர், எம்.எல்.ஏ, மந்திரி, முதன்மந்திரி என வந்து சேருவதற்குள் தொண்டு கிழமாகி விடமாட்டார்களா என்ன?

அடிப்படை உறுப்பினர் அ- சொன்னால் ஒரு நாலு பேர் கேட்பார்கள். ஆனால் அரசியல் வாரிசு அடிப்படை உறுப்பினராக சேரும் அன்றே அவர் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் தயாராகி விடுகிறார்கள். அப்படியென்றால் வாரிசுக்கு வாய்ப்புக் கொடுப்பது முக்கியமாகி விடுகிறதல்லவா?

தகுதியில்லா வாரிசை திணிப்பதின் மூலம் ஒருவர் தனது கட்சியை அழித்துக் கொள்கிறார் அல்லவா? வாரிசு பதவி பெறுவது என்பது எளிது, ஆனால் அதிலே நிலைப்பது என்பது அவரின் கையில் அல்லவா இருக்கிறது?

தகுதியில்லா ஒருவரைத் திணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதன் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு வேறு சாய்ஸ்கள் இல்லை என்பதுதானே அர்த்தம். மு,க.அழகிரி தகுதி இல்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். வீரபாண்டி ஆ.ராசா தகுதியில்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். என்.கே.கே.பி.ராசா தகுதியில்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். நீ நிறுத்திய வேட்பாளர் சொத்தை என மக்கள் நிராகரிப்பதுதான் சரியான முறையாகும்.

50 வருடம் கட்சி கட்சி என உழைத்த என் மகனும், நேற்றுதான் கட்சியில் சேர்ந்து அரசியல் என்பதை அறியத் தொடங்கிய இன்னொருவனும் சரிநிகர் சமானம் என்றால் எந்தக் குடும்பத்தாரும் அந்த அரசியல்வாதியை கூடச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆக அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆரம்பத்தில் இருந்தே தங்களை நிரூபித்துத்தான் மேலே வரவேண்டும் என்றால் அது தவறுதான்.

ஒரு நடிகர் அரசியல் கட்சியில் இணைகிறார் என்றால் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு ஏற்ப உடனடியாக பதவியும் பொறுப்பும் கிடைக்கிறது, ஒரு தொழிலதிபர் இணைந்தால் அவருக்கு இருக்கும் செல்வம், செல்வாக்கிற்கு உரிய பதவியும் பொறுப்பும் உடனே கிடைக்கிறது. வாரிசுகளுக்கும் அதே போல் செல்வம், செல்வாக்கு இருக்கிறது.. பதவியும் உடனே கிடைக்கிறது.

அதற்கு மேல் நிலைத்திருப்பதற்கு அவர்கள்தான் கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது. வாரிசு வளர ஒரு அரசியல்வாதை பலிகடா ஆக்குவது தனது செல்வாக்கையும், தனது கட்சியையும்தான் என்பதை நன்கு உணரவேண்டும். நிராகரிக்கும் உரிமை மக்கள் கையில் இருந்து கொண்டே இருக்கிறது அதை உபயோகிக்காமல் வாரிசு அரசியல் தவறு என்று புலம்புவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது?

கள்ள ஓட்டு, வன்முறை மூலம் ஒருவர் திணிக்கப்படுகிறார் என்றால் ....

அங்கே வாரிசா? இல்லையா? என்பது பிரச்சனை அல்ல..

இவற்றை எதிர்ப்பதும் களைவதும் தான் முக்கியம். மக்கள் ஆதரவு பெற அடுத்த கட்சியினர் தவறும்பொழுது மட்டுமே இவை பலிக்கும் என அறியவேண்டும்.

பின்கதவு வழியே வாரிசை நுழைப்போரும் உண்டு. அதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் வாரிசுகளை நிராகரிக்கும் உரிமை மக்கள் கையில் இருக்கத்தான் செய்கிறது. அதை உபயோகிக்காமல் வாரிசு அரசியல் தவறு என்று புலம்புவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது?

அரசியல் வாழ்க்கைக்கு தகுதிகள் தேவையில்லாமல் போய்விட்டதன் காரணம் யார்? ஓட்டுப் போடுபவர்களா? இல்லை அரசியல் கட்சித் தலைவர்களா? நாமதானே ஓட்டுப் போடறோம், நாம தகுதி பாக்காம தராதரம் பாக்காம ஓட்டுப் போடுவதால்தானே இந்தப் பிரச்சனை. இலட்சிய தி.மு.க துணைத்தலைவர் யார் என்று யாராவது கவலைப் படப் போறீங்களா இல்லை கொள்கைப் பரப்புச் செயலாளர் யார் என்று யாராச்சும் கவலைப்படப் போறீங்களா? இல்லைதானே.

வாரிசுகளை வளர்ப்பது என்பது வேறு, திணிப்பது என்பது வேறு. அன்புமணி கேபினட் மந்திரி ஆனதற்கும் அழகிரி மதுரையில் வென்றதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரே வாரிசுகளை முன்னால் கொண்டுவரமுடிகிறது. சுப்ரமணிய ஸ்வாமி ஜனதா கட்சியின் தலைவராக அவருடைய மகனை அறிவிக்கலாம். யாரும் கவலைப் படப் போவதில்லை.

அதே சமயம் தி.மு.க வில அண்ணாவிற்குப் பிறகு என்று பார்த்த பொழுது கலைஞர் எழுந்து நின்றார். வென்றார். நெடுஞ்செழியன் மூத்தவர்தான். ஆனால் அரசியல் சாணக்யம் இல்லை.

அதே எம்.ஜி.ஆர் இறந்த போது ஜானகியை வாரிசாக்கினர் சிலர். நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோர் நால்வரணி அமைத்தனர். ஜெயலலிதா தனிப்பட்டுப் போனார். யாரிடம் ஆளுமைத் திறமை இருந்ததோ அவர் வென்றார். அரசியலில் மிகவும் இளையவரான ஜெயலலிதா வென்றார்.

ஸ்தாபன காங்கிரஸ் காமராஜ் இறந்தபின் இந்திரா காங்கிரஸூடன் இணைந்தே விட்டது. ஏன்? தலைவர்கள் வளர்க்கப்படாததால் தானே.

ஆக வாரிசை திணித்தாலும் ஆளுமைத் திறமை உள்ள அரசியல் சாணக்கியர்கள்தான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும். வாரிசு சரியில்லையென்றால் அந்தக் கட்சியே கவிழ்ந்துவிடும்.

தெலுகுதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். என்.டி.ராமாராவ் என்ன ஆனார்? சாணக்கியர் சந்திரபாபு நாயுடு லஷ்மிபார்வதி விஷயத்தில் ராமாராவையே மண்ணைக் கவ்வ வைக்கவில்லையா?

ஒரு கட்சியில் வாரிசு திணிக்கப்படுகிறார் என்றால், அங்கு உள்ள அரசியல் முதிர்ச்சி உள்ளோருக்கு ஆளுமைத் திறமை குறைச்சலாக இருக்கிறது என்றுதானே பொருள். அது மக்கள் பிரச்சனை அல்லவே. ஏன் கலைஞரை சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்து கண்டிக்கலாமே மக்கள்.

வாரிசு வளர்க்கும் தலைவரின் வலிமை, தன்கட்சியில் யாருக்கும் பரவலான செல்வாக்கு இல்லாமல் இருப்பதே ஆகும். நெடுஞ்ச்ழியன் போல பழுத்த அரசியல்வாதியாக இருந்து 514 ஓட்டுகள் வாங்கினால் அதை வைத்துக் கொண்டு எப்படி கட்சி நடத்த முடியும்?

தன் செல்வாக்கை தன் மகனுக்கு கடன் கொடுக்கிறார் தலைவர். மகன் ஜெயித்தால் அவர் செல்வாக்கு அதிகரிக்கிறது. இல்லாவிட்டால் அவர் செல்வாக்கு சரிந்து விடுகிறது. அவர் செய்த தவறுக்கு மக்கள் தண்டனை அளித்து விடுகிறார்கள். எனவே படப் போவதும் அவர்தான்.

தன் வாரிசுகளை அரசியலில் நுழைக்காமல் இருப்பது சரியா தவறா என்பது பார்க்கும் கோணத்தில் இருக்கிறது.

சரி என்பதற்கும் உதாரணங்கள் உண்டு. தவறு என்பதற்கும் உதாரணங்கள் உண்டு.

யார் யாரை நுழைத்தாலும் கடைசியாக அதை "அப்ரூவ்" செய்யும் அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது,

1. அடுத்த கட்டத் தலைவர்களை உருவாக்குதல்
2. அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாதல்

இரண்டும் வெவ்வேறுதானே.

அறிவியல் ரீதியாக ஜீன்களின் வழியே வாரிசுகளுக்கு சிலபல தகுதிகள் உண்டுதானே?

பாஜாக, பல தலைவர்கள் உள்ள கட்சிதான், வாஜ்பாய், அத்வாணி, வெங்கைய்யா நாயுடு, நரேந்திரமோடி இப்படி பல அடுக்குகள் கொண்டதுதான். ஆனால் சூட்சுமக் கயிறு?

தலைவனாகும் தகுதியை வளர்த்துக் கொள்வது அரசியலில் ஈடுபடுவோரின் கடமை அல்லவா? அவரும் அதில் ஈடுபாட்டைக் காட்டி வளரவேண்டும். மக்கள் விரல்நீட்டும் திமுக வில் மூன்று முறை பிளவு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் தனிக் கட்சி ஆரம்பித்தார் வென்றார். அவர் இருந்த வரை கலைஞரால் முதல்வர் கனவு மட்டும்தானே காண முடிந்தது. ஆக எம்.ஜி.ஆர் தகுதியானவர். தள்ளி வைக்கப்பட்டபொழுது உயரமுடிந்தது என்பது நிரூபணம் ஆகிறது. வாரிசு திணிப்பு மு.க.முத்து எடுபடவில்லையே!

அதே வைகோ, விஜய டி.ஆர் விஷயங்களில் வாரிசு வளர்ப்பு வென்றது. காரணம் அவர்கள் கட்டி இருந்த ஆகாயக் கோட்டை மணற்கோட்டை. விஜய டி ஆர் விஷயத்தில் வெறும் மனக்கோட்டை.

ஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவில்லை என்றே கூறலாம். எனவே அங்கு வெற்றிடமே நிலவுகிறது.

மன்மோகன்சிங் - சோனியா - இராகுல் காந்தி போல இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே சரி என்று சொல்ல முடியாது அல்லவா.

சோனியாவும் இராகுலும் அரசியலில் தலையிடாமல் இருந்திருந்தால் காங்கிரஸின் கதி?

1991 மே 21, இந்தத் தேதி இல்லாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க கதி என்ன ஆகி இருக்கும்? அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் தோற்று, காங்கிரஸின் நட்பை இழந்து அ.தி.மு.க உடைந்து காணாமல் போயிருக்க மிகப் பெரிய வாய்ப்பு இருந்தது ஞாபகம் இருக்கிறதா?

இரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்ப்பதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. அவர்களுக்கு ஆளுமைத் தன்மை இருக்க வேண்டும்.

தலைவனாக உருவெடுப்பவன் மிகப் பெரிய அறிஞனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தலைவனாக உருவெடுப்பவன் மிகச் சிறந்த உழைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தலைவனாக உருவெடுப்பவன் மிகச் சிறந்த வல்லுனனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஒரு குறிக்கோளை நோக்கி நடைபோட வைத்து அதற்கு தகுந்த வாய்ப்புக்களை உருவாக்கித் தந்து உறுதுணையாக இருந்து பொதுமக்களின் ஆதரவைப் பெறவேண்டியவனாக இருக்கிறான்.

அதே தலைமைப் பண்பை,அரசியலில் அவனுடன் இருக்கும் பலர் பயிலாமல் போகிறார்கள். எல்லைகளைத் தாண்டிய அங்கீகாரம் பெறுவது என்பதில் அறிவாளிகளும், உழைப்பாளிகளும் கவனம் காட்டாததால் சார்புத் தன்மைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இதனாலேயே சோனியா தலைமை ஏற்க வேண்டி வந்தது. இராகுல் உள்ளே வரவேண்டி இருந்தது என்பதை மறக்கக் கூடாது. இராகுல் மந்திரிப் பதவி ஏற்காதது கூட ஒரு தந்திரோபாயம் தான். இதனால் அவரின் செல்வாக்கு கூடுகிறது. அவரின் அரசியல் வாழ்க்கை ஸ்திரமாகிறது.


பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
வேதனையை பங்கு வச்சா சொந்தமில்ல பந்தமில்ல


என்பது அரசியலில் மிகமிகச் சரியான ஒன்று. தி.மு.க வில் ஆட்சி, அதிகாரம், பதவி பணம் இருப்பதால் பலப்பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன் எல்லையைத் தாண்டி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் மிகமிகக் குறைவு. அப்படிப் பார்க்கும்பொழுது கனிமொழியை மட்டுமே திணிப்பு என நாம் கூற இயலும். ஆனால் திணிக்க முடிந்ததா என்ற கேள்விக்கு பதில்?

இல்லை என்பதுதான்.


வாரிசுகளை கவனியுங்களேன்.


சரண்சிங்கின் லோக்தள் - வாரிசு > அஜீத் சிங் --> கட்சி எங்கே?

அ.தி.மு.க  வாரிசு - எஸ்.வி.ஜானகி -- என்ன ஆனார்?
தெலுகுதேசம் லஷ்மி பார்வ்தி - என்ன ஆயிற்று கட்சி?
தேவிலால் - கட்சி என்ன ஆயிற்று?



இதே போல் வென்றவர்களும் உண்டு


பிஜூ பட்நாயக் - நவீன் பட்நாயக்
நேரு குடும்பம்
கலைஞர் குடும்பம் - மு.க.முத்து தோல்வி, ஸ்டாலின் வெற்றி, அழகிரி வெற்றி, கனிமொழி -??
முரசொலி மாறன் - தயாநிதி மாறன் நல்ல பெயர் எடுத்தார்
தேவேகௌடா - முத்துக்குமாரசாமி - அப்பா அவுட் - மகன் இன்


ஓட்டப்பந்தயத்தில் முதலில் யார் ஆரம்பிக்கிறார் என்பது முக்கியமில்லை. கடைசியாக யார் முன்னால் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

வாரிசுகளை திணித்து அவர்களுக்கு சற்று முண்ணனி பெற்றுத் தருவதை அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அப்படிச் செய்யா விட்டால் அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல தியாகிகள்.

திருவள்ளுவரே சொல்லி இருக்கார்னு சொன்னனே கவனிக்கலையா?


தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருக்கச் செயல்

மகன்தந்தைக் காற்றும் உதவி யிவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்


அவரே மகனை அவைகளில் முக்கியத்துவம் தரத்தானே சொல்லி இருக்காரு...

வெள்ளென எழுப்பி சபைக்கு சீக்கிரம் போன்னு திருவள்ளுவர் சொல்லச் சொன்னதா நான் நினைக்கலை.

தனக்குத் தெரிந்ததை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்தலும் அவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தருதலும் ஒரு தந்தையின் கடமை என்பதை மறுக்க இயலாது அல்லவா?

தவறுகள் என்பது எல்லா இடங்களிலும் இருக்கு. தவறு இல்லா இடம் என்று ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

தகுதியில்லா சில நபர்கள் திணிக்கப்படுகிறார் என்பதால் வாரிசு அரசியல் என்பதே தவறு என்பது எந்த விதத்தில் ஞாயம்?

குடும்பம் முழுதும் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. அரசியலில் ஈடுபடுவதே சுரண்டத்தான் என்னும்பொழுது தனியா திருடுனா என்ன குடும்பத்தோடு சுரண்டினா என்ன?


உண்மை நிலையைச் சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ஒரு கட்சி என்பது தலைவரின் சொத்தல்ல. பல லட்சம் தொண்டர்கள் இணைந்ததுதான் கட்சி. - இது தியரி.

அதை அதிமுக விஷயத்தில் நன்றாகவேப் பார்த்தோம் இல்லையா? நெடுஞ்செழியனுக்கு 500 ஓட்டு, திருநாவுக்கரசருக்கு ஒரு தொகுதி, சாத்தூராருக்கு ஒரு தொகுதி, வானளாவியவருக்கு ஒரு தொகுதி இன்னபிற முக்கிய உறுப்பினர்களுக்கு ஒரு தொகுதி கூட பூரணமாய் ஆதரவில்லை. ஒரு கட்சியின் தலைமைக்காகத் தான் நம் மக்கள் முக்கியமா ஓட்டுப் போடறாங்க. தலைவர் என்பது அப்படி ஒரு தனித்துவம் பெற்ற இடம். - இதான் பிராக்டிகல். ஆக இலட்சககணக்கான் உறுப்பினர்கள் இருந்தாலும் மக்கள் வாக்களிப்பது தலைமையை நம்பித்தான்.

துடிப்பும் தகுதியும் உள்ளவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து வெல்வதை யாரும் தடுக்கவில்லையே! தி.மு.கவில் இருந்துதான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லையே.தலைவர் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி விட்டு தன் ஆதரவாளர்களுடன் வந்து தனிக்கட்சி நடத்துபவர்கள் இல்லையா என்ன? அவர்கள் தங்கள் திறமையை இராஜதந்திர்த்தைக் கொண்டு வென்று காட்டலாமே.. திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பா இல்லை? இதைத்தான் சொன்னேனே செல்வாக்கு.. தன்வாக்கு - பேச்சு செல்லுபடியாவது அரசியலில் மிக மிக முக்கியம் என்று.

செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் தகுதியுள்ளவரை அரசியலில் பயிற்றுவிக்க வேண்டும். வாய்ப்புக் கொடுத்து, அனுபவம் வளர்க்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. உறவினரோ இல்லையோ இந்த வகையில் செல்வாக்கை உப்யோகப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு.

ஆனால் இப்படிப் அடுத்தகட்டத் தலைவராக வருபவர் மரத்தை வெட்டும் கோடாரிக் கைப்பிடியாய் மாறாமல் இருப்பார் என்பதற்கு யாராலும் உத்திரவாதம் தரமுடியாது. கன்ஷிராம் மாதிரி ஆகிவிடாமல் இருக்கணுமே..

வாரிசு அரசியலை ஒத்துகிட்டோம்னா, சின்ன வயசில் இருந்தே அவங்களும் அரசியலில் ஈடுபட்டு அட்லீஸ்ட் கஷ்டப்பட்டு தலைவரா வருவாங்க.

இல்லைன்னாதான் இப்படி திடீர் திணிப்புகள் நடக்கும். திணிப்புகளுக்குக் காரணம் எதிர்ப்புதான். அன்புமணி திடீர்னு இராஜ்ய சபா மெம்பர் ஆகி மெம்பர் ஆனார்னா அதுக்குக் காரணம் வாரிசு அரசியல் தவறு என்று இருந்த எண்ணம்தான். செல்வாக்கை வளர்க்கும் தேவை இருந்த வரை வாரிசு அரசியலா? உவ்வே என்று சொல்லிவிட்டு செல்வாக்கு வளர்ந்தவுடன் குறுக்கு வழியில் மந்திரியாக்கியது,

இதுக்கு என் குடும்பத்தையே அரசியலுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றுச் சொல்லி ஆரம்பத்தில் இருந்து மனைவி, மச்சான் சகிதம் பாடுபடும் விஜய்காந்தின் வாரிசு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை. நாம வாரிசு அரசியலை தவறுன்னு சொல்லலைன்னா அட்லீஸ்ட் இப்படி உழைக்கவாவது செய்வார்களே. அதை முக்கியமா கவனிக்கணும். நீங்க தப்புன்னு சொல்றதாலதான் வளரும் காலத்தில் வாரிசுகளை அடக்கி வாசிக்க வச்சு, இப்படித் திடீர் திணிப்புகள் செய்யப்படுகிறது.

அழகிரியைப் பொருத்தவரை தேர்தலில் போட்டியிடவில்லையே தவிர பல ஆண்டுகளாக அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டு வருபவர்தான். அரசியலைப் பற்றி தெரியாதவர்கள் யாரிடமாவது முந்தா நேத்துதான் அவர் முதன் முதலா அரசியல் மேடையில் பேசினார் என்று சொல்லலாம். இதுவரை பல தேர்தல்களில் அவர் பணியாற்றி இருக்கிறார், ஏன் தி.மு.க ஆதரவில் சென்ற முறை வென்று, இன்று அழகிரியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற் மோகன் அவர்கள் சொல்லட்டுமே போன தேர்தலில் அழகிரி மோகனுக்காக களப்பணியாற்றவில்லை என..

அரசியல் அனுபவம் என்பது எம்.எல்.ஏ, எம்.பி., மந்திரிப் பதவி வகிப்பதில் மட்டுமே வருவதா என்ன? கட்சியில் பதவியே வகிக்கா விட்டாலும் பணியாற்றியவர்தான் அழகிரி.

வாரிசு அரசியலை அங்கீகரிப்போம். தகுதி இல்லா வாரிசுகளைத் நிராகரிப்போம் தகுதி இல்லாதவரை திணிப்பவரை தோற்கடிப்போம் என்பதே சரியான பார்வை.,

இந்த எண்ணம் வெளிப்பட்டு இருந்தால், நல்ல அரசியல்வாதிகளுக்கு இந்த உறுதியை நாம் அளித்தால் அவர்கள் தைரியமாக எதிர்காலத் தலைவர்களை பிரத்யேகப் பயிற்சி கொடுத்து தயாராக்குவார்கள், அன்புமணி போல திடீரெனத் திணிக்கப்படாமல் ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் அனைவரும் பங்குபெறுவார்கள்,


மற்றபடி வாரிசு அரசியல் தவறு என்றால் ----

அது நல்ல வாரிசுகளை அரசியலில் இருந்து விலக்கி வைக்க மட்டுமே உதவும். ஏனென்றால் இவர்கள்தானே தர்மத்தை, ஞாயத்தை மதிப்பவர்கள்.


அதை மதிக்காத வாரிசுகள் திணிக்கப்படுவதை தடுக்க முடியாமல் திராணியற்றவர்களாக இருக்கிறோம். அதாவது நல்லதை மட்டுமே தடுக்கிறோம்.

ஒரு சட்டமோ தர்மமோ தீமை விளைவதைத்தான் தடுக்க வேண்டும். ஆனால் வாரிசு அரசியல் தவறு என்றுச் சொல்வதால் நாம் நன்மை விளைவதை தடுக்கிறோம். தீமை நடப்பதை தடுக்க இயலாதவர்களாக இருக்கிறோம் என்னும்பொழுது நல்ல வாரிசுகள் வர வழிவிடுவதுதானே தர்மம்,

பரம்பரை ஜனநாயகம் என்பது எந்தக்காலத்திலும் வராது. இயற்கைச் சமச்சீர் மாதிரி அளவு மீறிச் செல்லும்பொழுது தானாகவே கட்டுப்படும்.

நல்லதோ கெட்டதோ ஒரு அளவிற்கு மேல வளரமுடியாது. சமச்சீர் தானே வந்துவிடும். இதுதான் இயற்கை.

இதில நாம சில நாமதான் சும்மா கவலைப்பட்டு கோவப்பட்டு இரத்த அழுத்தத்தை உயர்த்திக்கிறோம்.

இலஞ்சத்தை, வாரிசு அரசியலுக்கு ஒப்பிடுவது தவறு. இலஞ்சம் என்பது குற்றம். வாரிசு அரசியல் குற்றம் ரேஞ்சுக்கு கிடையாதுங்க. அதில நல்லதும் நடக்கலாம்.. தீமையும் நடக்கலாம் என்பதை எல்லோருமே ஒத்துக் கொண்டு இருக்கீங்க.

வாரிசு அரசியலில் ஈடுபடுவதால் எந்த நன்மையும் எப்பவுமே நடக்கலை என்று யாராலும் சொல்ல முடியாது,

அப்படி இருக்க, வாரிசு அரசியல் தவறு என்று சொல்ல முடியாது, அதை அரசியல்வாதிகள் தவறா உபயோகிக்கிறாங்க என்று மட்டும் சொல்லலாம்,


ஒரு சுயநலத் தலைவனின் மோசமான வாரிசுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 

ஒரு நல்ல தலைவனின் நல்ல வாரிசிற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.


இதுதான் வாரிசு அரசியல் தவறு என்பதன் மூலம் நாம் பெறக்கூடிய ஒன்று.

ஆகவே வாரிசு அரசியல் தவறில்லை. வாரிசுகள் தவறானவர்களா இருக்கக்கூடாது என்பது சரின்னு சொல்றேன்..


இதனாலும் மீண்டும் சொல்கிறேன்..


வாரிசு அரசியலை அங்கீகரிப்போம். தகுதி இல்லா வாரிசுகளைத் நிராகரிப்போம் தகுதி இல்லாதவரை திணிப்பவரை தோற்கடிப்போம் என்பதே சரியான பார்வை.,

.