Tuesday, December 8, 2009

படிச்சதும் கடிச்சதும்


படிச்சது :
மொக்கை தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருட்களை சரிபார்த்தார்.

மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.

மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.

மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..

" ஹையா...!!!!!!... டாடி வந்தாச்சு.. டாடி... அம்மா எங்கே..? காரில் காணோமே..?"

கடிச்சது :

மொக்கை சொன்னார்.. அப்பாடா.. இப்பவாவது ஞாபகமா மறந்துட்டேனே!

படிச்சது :

கேபிம்ரிட்ஜ் யுவர்னிட்சிடி செய்த ஆய்ராச்சிபன்யிடி, எதுழுத்கள் எபப்டி அமைப்பக்கட்டிதாந்ருலும் சரி, முதல் எதுழுத்ம் கடைசி எத்துழும் சயாரிக இகுருக்குயானாமேல், மதனிமூளை அற்வறை எதாளிக இனம் கண்டுவிமாடும்..!


கடிச்சது :இது தெரிஞ்ச பாஷைக்கு மட்டுமா? இல்லை தெரியாத பாஷைக்குமா???

படிச்சது :


வாழ்க்கை என்பது பனை மரம் மாதிரி...

ஏறினா நுங்கு...
விழுந்தா சங்கு.
.

கடிச்சது : மாட்டினா நொங்கு!

படிச்சது :

'ரயில கண்டுபிடிச்சது நல்லதா போச்சு..'


'ஏன்'

'இல்லைனா தண்டவாளம் எல்லாம் வீணா போயிருக்கும்...'

கடிச்சது ; போயிருக்காது.. ஏத்தி விடத்தான் நிறைய வண்டவாளம் இருக்கே!!!

படிச்சது : அக்னி : தூக்கத்திலே கொசு கடிக்காம இருக்க என்ன பண்ணனும்..

கண்மணி : ரொம்ப சிம்பிள்.. கொசு தூங்கின பிறகு நீங்க தூங்கணும்.. கொசு கடிக்காது....

கடிச்சது : கொசு தூங்கும் போது கொசுவால எப்படிக் கடிக்க முடியும்?
தூக்கத்தில் நடக்கிற வியாதிதான் இருக்கு.. தூக்கத்தில கடிக்கிற வியாதி இருக்கா என்ன?

படிச்சது :

1 மில்லிகிராம்
1 செண்டிகிராம்
1 கிராம்
1 கிலோகிராம்
1 டன்
1 குவிண்டால்


...
...
...

என்ன முழிக்கிறீங்க..
நாங்க எல்லாம் ஒரு மெஜெஸ் போட்டாலும் சும்மா வெயிட்டான மெஜெஜா தான் போடுவோம்..

கடிச்சது :

உங்க வெயிட் கார்டை இப்படியெல்லாம் பப்ளிக்கா காட்டக் கூடாதும்மா மலரு

படிச்சது : இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.
ஆனால் நாளைக்கு தூங்கினா
இன்னைக்கு எத்திரிக்க முடியுமா!!

தூக்கத்தில் யோசிப்போர் சங்கம்

கடிச்சது :

வட இந்தியாவில முடியும்,,

ஏன்னா ஹிந்தியில

நேற்று என்பதற்கும் கல் தான்
நாளை என்பதற்கும் கல் தான்.

படிச்சது : * பூமிக்குக் குறுக்கா ஒரு பள்ளம் தோண்டி, அதுக்குள்ள நீங்க குதிச்சீங்கன்னா புவி ஈர்ப்பு உங்களை எங்கு கொண்டுபோய் விடும்..?

கடிச்சது :

அதானே, காத்தில நீங்க கையை ஆட்டிகிட்டு யோசிக்கும் போதே நினைச்சேன்.. இவரு யாருக்கோ குழிபறிக்கிறாருன்னு.,. கடைசியில பூமிக்கேவா?

(பூமிக்கு குறுக்கே பள்ளம் தோண்டனும் பூமியிலதான் தோண்டணுமா? பூமி போற பாதையிலும் தோண்டலாம்.. அப்பவும் குறுக்கே தோண்டினதாத்தான் அர்த்தம்..(என்ன இது, இந்தப் பூனை குறுக்கே போகுதேன்னு யோசிக்காதீங்க... ) அப்ப நாம் அந்தப் பள்ளத்தில விழுந்தாலும் பூமி மேலதான் இருப்போம்.. ஏன்னா பள்ளத்தை பூமி கிராஸ் பண்ணறப்ப ரன்னிங்கிலயே ஏறிக்கலாம்.. ஹி ஹி... )

படிச்சது :
* சாத்தானோட அப்பா அம்மா பேர் என்ன..?

கடிச்சது :

பைபிளின் படி சாத்தான் அதிகாலையின் மகன். குரானின் படி அக்னியின் மகன்.. ஆகமொத்தம் இனிசியல் "அ" தான். அ.சாத்தான் அசத்துரானில்ல.
படிச்சது :
* சினிமா கொட்டாய்ல சேர்ல இருக்கற கை வைக்கும் இடத்தில் எது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கு..?

கடிச்சது :
அது பக்கத்துச் சீட்டில உட்கார்ந்திருக்கிறவங்களைப் பொருத்தது.. (அவங்க எடை, மணம், பார்வையின் வெப்பநிலை, அழகு இப்படிப் பலவிஷயங்களைப் பொருத்து ஹி ஹி..) ஒண்ணு அவங்களா ஒதுக்குவாங்க.. இல்லைன்னா நாமளா ஒதுக்கிருவோம்.. அப்புறம் சிலசமயம்..
படிச்சது :
* பல் டாக்டருக்கே பல் சொத்தையா பூடுச்சுன்னா அவரே பிடுங்கிப்பாரா.. இல்லே வேற பல்டாக்டர்ட்ட போவாரா..?

கடிச்சது :
பல் டாக்டர் கிட்டப் போயிட்டு வந்து அந்தப் பல்டாக்டர் என் சொத்தைப் பிடுங்கிட்டாருன்னு வாய் கூசாம சொல்லுவார்.

படிச்சது :

ஆமி பாஷர். இந்த 45 வயது அம்மணி. டெக்சாஸ், சான் அண்டோனியோவில் கைது செய்யப்பட்டார்.

குற்றம்..?

18 பொட்டலங்கள் போதைப்பொருளை, கார் பானட்டுக்குள் மறைத்துவைத்திருந்தாராம். தன் காருக்கு ஆயில் மாற்ற கம்மியரிடம் போனபோது, அவர் காவலருக்குப் போட்டுக்கொடுத்துவிட்டார்.

ஆயில் மாற்ற இஞ்சின் பானட்டைத் திறப்பாங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு ஆமி கண்ணீரும் கம்பலையுமா புலம்பியதுதான் இதில் விசேடமான தகவல்..!


கடிச்சது :

பொழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கே..

இப்படி மாட்டினா, ஆளுக்குப் பாதின்னு முதல்ல டீல் பேசி இருக்கணும்.

அதுக்கு ஒத்து வரலைன்னா, உடனே தானும் போலீஸூக்குப் ஃபோன் போட்டு போட்டுக் கொடுத்தவர்தான் அதை யார்கிட்டயோ கொடுக்கச் சொல்லிக் கொடுத்தார் என திருப்பிப் போட்டுக் கொடுக்கணும்.


கோர்ட்டுக்குப் போனா,
எனக்கு பானட்டைத் திறக்கவே தெரியாது. தெரிஞ்சா நான் ஆயில் மாற்றிக்க மாட்டேனா? இவர் தான் பொட்டலங்களை உள்ளே வைத்தார் என வாக்கு மூலம் குடுக்கணும்...

ஆமாம் கிறுக்கிதான் அந்தப் பொண்ணு...

படிச்சது :


கலீலியோ சிறிய எண்ணெய் விளக்கை வைத்து படித்தார்.

கிரஹாம்பெல், மெழுகுவத்தி வெளிச்சத்தில் கற்றார்.

ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில் பயின்றார்..

எனக்கு ஒண்ணுமட்டும் புரியலீங்க.. பகல்நேரத்தில அவங்க எல்லாம் அப்படி என்னதான் பண்ணினாங்க..?

கடிச்சது : பல அறிஞர்கள் பகலில் வெளிய தலை காட்ட முடியாத அளவிற்கு "பாப்புலரா" தானே இருந்தாங்க.

படிச்சது : மனிதர்களைப்போல கைரேகைகள் கோலாக் கரடிகளுக்கும் உண்டாம்..!

கடிச்சது : அப்ப சரி, கைரேகை ஜோசியத்திற்கு இன்னுமொரு வாய்ப்பு.
படிச்சது : உலகில் ஒரு மனிதனுக்கு 20 கோடி என்ற விகிதத்தில் பூச்சியினங்கள் இருக்கின்றனவாம்..!

சைனாவில?படிச்சது : நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை சுமார் இரண்டிலிருந்து மூன்று மிலியன்க*ள்..!

கடிச்சது : நல்ல வேளை ஒரு மூக்கு இரண்டு கைகள் இருக்கு

..

No comments:

Post a Comment