Tuesday, December 8, 2009

மடியில் கனம்!!!

வாத்தியார் கேள்வி!!!
மடியில் கனமிருந்தா தானே வழியில் பயமிருக்கும் நு
சொல்லுவாங்க அதன் அர்த்தம் கிருக்குதனமாக தான் பதில தர வேண்டும்

தாமரை பதில்:




அந்த காலத்தில கத்தியெல்லாம் ரொம்ப கனமா இருக்கும். அவ்வளவு கனமான கத்தியைத் தூக்கிகிட்டு போறவன் பலசாலியாத்தான் இருப்பான்னு திருடனுங்க எல்லாம் ஓரமாப் போயிருவானுங்களாம்..


அதுனாலன்னு நெனச்சீங்களா? அதுதான் தப்பு..

பெண்களுக்கு குழந்தை மடியிலதான் வளரும். மடிக்கனம்னா பலசாலியான குழந்தை.. பலசாலியான குழந்தைன்னா அம்மாவை நல்லாப் பார்த்துப்பான்,. காலம் போறப்ப கண்ல வச்சுக் காப்பாத்துவான் அதனால மடியில கனமிருந்தா வழியில் பயமில்லை அப்படீன்னு சொன்னாங்க..


அப்படீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா அதுவும் தப்பு!..

வயிறு நெறைய சாப்டுட்டு பயணத்தை ஆரம்பிச்சா நடக்க நடக்க ஜீரணம் ஆகும்.. சாப்பாட்டை கையில கொண்டு போறத விட வயித்துல கொண்டுபோறது தான் சுலபம். தொப்பை (மடியில் கனம்) பெரிசா இருந்தா, பாக்கிறவன் இவன் பணக்காரன்னு ஓடி வந்து உதவி செய்வான்.. வீட்டுக்குப் போன பின்னால பெரிய பரிசா கொடுப்பார்.. இல்லைன்னா பெரிய மனுஷன் சகவாசம் என்னிக்குமே உதவும்னு தீர்க்கதரிசியா நெறைய உதவி பண்ணுவாங்க... ஆக தொப்பைங்கறது செல்வத்தின் அடையாளமா இருந்து வழியில இருக்கிற பல தடைகளை நீக்கி உதவி பண்ணும்கிற அர்த்ததிலதான் மடியில கனமிருந்தா வழியில பயமில்லைன்னு சொன்னாங்க,..

அப்படின்னு சொல்வேன்னு நெனச்சீங்களா??

அதுவும் தப்பு!.. ஏன்னா தாமரை எப்பவும் தவறான பழமொழி பக்கம் நிக்க மாட்டான். உண்மையான பழமொழி,

மடியில கனமில்லைன்னா வழியில பயமில்லை..

வாத்தியார் மறுகேள்வி

மன்னிக்கவும் தாமரை தவறை உனர்ந்து திருத்தி விட்டேன். சுட்டிகாட்டியதுக்கு நன்றி. நெத்தியடி பதிலாகவும் எடுத்து கொள்கிறேன் உங்கள் பதிலை.. கேள்வி இப்பொழுது..


மடியில கனமில்லைன்னா வழியில பயமில்லை. என்று ஏன் சொன்னாங்க?

தாமரை பதில்:

ம்ம்ம்.. வாத்தியாரு கேள்வியை மாத்திபுட்டாரு...

நம்ம ஆதவாவுக்கு ரொம்ப கேஸ் டிரபுள்.. அடிக்கடி வயிறு உப்பிக்கும். இருந்தாலும் கொண்டைக் கடலைன்னா அவருக்கு ரொம்ப ஆசை.. அவிச்சு, கொஞ்சம் அப்படியே தாளித்து தேங்காய் சேத்து சாப்பிடறதுன்னா ரொம்பப் பிடிக்கும்.

ஆதாவாவுக்கு எப்பவுமே நாலு பேரு சுத்தி வர பாட்ஷா ஸ்டைல்ல தான் போவாரு. மதி மட்டும் ஓடிப்போயி முன்னாலயோ பின்னாலயோ சூழ்நிலைக்கேத்தவாறு நின்னுக்குவாரு..

ஓவியனுக்குச் சந்தேகம் என்ன மதி, ஆதவாவோட வெளியப் போறப்ப ஏன் அப்படி ஓடிப்பாக்கிறீங்கன்னு கேட்க மதி ரத்னச் சுருக்கமா மடியில கனமிருந்தா தானே வழியில பயமிருக்கும்னு சொன்னாரு..

ஓவியருக்குப் புரியலை.. என்ன விளக்கமாச் சொல்லுங்கன்னு கேட்டாரு..

மதி அதை அனுபவிச்சுப் பாருங்கன்னு சொன்னாரு..

அன்னிக்குச் சாயங்காலம் ஆதவா வெளிய கிளம்ப மதி ஓடிப் போயி முன் பக்கம் நின்னுகிட்டார்.. ஓவியனை பின்னாலயே வரச் சொன்னார்..


ஆத்வா போகப் போக மடியில் கட்டியிருந்த சுண்டலை சாப்பிட்டுகிட்டே போக..

அப்புறம் சொல்லணுமா!!!!

..

No comments:

Post a Comment