Thursday, December 17, 2009

நிழலுக்கு உயிர் கவிதை - 4




மனிதனின் கைகள் தீண்டாததாலே
சிரிக்கும் இயற்கை தெய்வீகம்

பூவின் கழுத்தறுத்து
காதலி கூந்தலில்
தூக்கு போட்டு விடுவது தான்
பூவின் பிறவிப் பயனா?

கார்முகில் தழுவி
கார்குழல் காணததாலன்றோ
இன்னும்
இயற்கையின் சிரிப்பு
இங்கே மிச்சமிருக்கிறது!!!

நாந்தான் சொன்னேனே
உனக்குக் காதல் வந்துவிட்டதென்று
வேண்டுமானால் அந்த
வறண்ட மலையைப் பார்
வண்ணப் பூக்களாய்த் தெரியும்..

மேகக் காதலன்
முகமுரசி இட்டுச் சென்ற
முத்தத்தில்
பூத்துக் கிடக்கிறாள்
மலைக்காதலி..

எத்தனைக் காலம்தான்
வளைந்து கிடப்பது?
முதுகு வலிகொண்ட வானவில்
ஓய்வெடுக்கிறது!!!

இரகசியமாய்
புகைப்படமெடுத்து
பத்திரப் படுத்தினான் கடவுள்
எங்கள் பள்ளியை!

மயிலுக்குப் போர்வையாம்
சிலிர்த்துச் சிரித்தாள்
பேகனைப் பெற்றதற்காய்
கொல்லிமலை!

.

No comments:

Post a Comment