Monday, December 21, 2009

தாமரை பதில்கள்

"மிகச்சிறந்த கவிதைகள் எல்லாம் முன்பே எழுதப்பட்டு விட்டன" என்று சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார்.இந்தக் கருத்தை ஏற்கிறீர்களா? மறுதலிக்கிறீர்களா?

இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்...

இந்த நொடியில் உலகின் எந்த மூலையில் எந்தக் கவிஞன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறான் என்பது யாராலும் சொல்ல முடியாது..

நாளை யார் என்ன எழுதப்போகிறார்கள் என்று தெரியாது.. சமுதாயங்களைப் புரட்டிப் போடும் வல்லமையுள்ள எழுத்தாளர்கள் பிறந்து கொண்டேதான் இருக்கிறார்கள்..

இதே கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன்.

முன்பே எழுதப்பட்டு விட்டன என்பதை வேறுவிதமாகவும் பார்க்கலாம்.. அதாவது ஒரு கருத்து மனதில் ஊறி முளைவிட்டு கிளைவிட்டு மனதிற்கு அடங்காமல் வெடித்து வெளிவரும் பொழுதுதான் உலகிற்குத் தெரிகிறது.. ஆனால் அந்தக் கவிதை அந்தக் கவிஞனைப் பொறுத்தமுறை முன்பே அவன் மனதில் ஆயிரம் முறை எழுதி அழித்து எழுதி அழித்து என முன்பே எழுதப் பட்டதுதானே!

இல்லை இல்லை இந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்.

காளமேகம் என்ற ஒரு புலவர் இருந்தார்.. நினைத்த மாத்திரத்தில் கவிமழை பொழியக் கூடியவர். எண்ணம் எழும் வேகத்தில் கவி எழுதக் கூடியவர்.. நம் மன்றத்தில் கூட பல நல்ல கவிச்சமர் கவிதைகள் வினாடிகளில் உதித்து உதிர்க்கப்பட்டவைகள் தானே.. அப்படி இருக்க அவை எப்படி முன்பே எழுதப்பட்டவை ஆகும்...

இல்லை இல்லை அந்தக் கருத்தை நான் ஏற்கிறேன்.......

சிந்திக்காமல் எழுதி இருக்க முடியாது.. ஒரு கருத்தை இப்படி திருத்தி திருத்தியும் எழுதலாம். மனதில் தோன்றியதைப் தோன்றிய கணத்திலேயும் வெளியிடலாம். எழும் எண்ணங்கள் அவரின் அறிவு.. விழும் வார்த்தைகள் அவரின் திறமை. என்ன எழுதுகிறோம் என்றே தெரியாமல் எழுதிவிட்டு அப்புறம் அது ஒரு நல்ல கவிதை என்று கண்டார்களா என்ன?

இல்லை இல்லை அந்தக் கருத்தை நான் மறுக்கிறேன்.......

ஏனென்றால் இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பது வேறென்னவாம்? என்ன எழுதுகிறோம் என்றே தெரியாமலேயேதானே எழுதிக் கொண்டிருக்கிறேன்,,,

இல்லை இல்லை அந்தக் கருத்தை நான் ஏற்கிறேன்.......

முடியலை.............

அட யாருப்பா அங்க இப்படிச் சொல்றது? ஓவியனா?

.

No comments:

Post a Comment