ஒரே தொல்லை என்னன்னா காலத்தை மட்டும் போய்வா என்று சொல்லி வழியனுப்ப முடிவதில்லை..
காலம் நிற்காமல் செல்ல நாம் நின்று சில நிமிடம் சிந்திக்கிறோம்..
காலம் எதையும் செய்யவில்லை.. மௌனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அதன் வழியே அது பாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறது..
சிலர் எண்களைக் கூட்டி நல்லதென்றனர்.. கெட்டதென்றனர்..
சிலர் ராகு என்றனர் எமகண்டமென்றனர்..
சிலர் அஷ்டமி என்றனர் நவமி என்றனர்.. அமாவாசை பௌர்ணமி, நாள் மாதம் வருடம்..
காலம் பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறது..
காலத்தின் சுவடுகள் மனிதனில் தலையில், முகத்தில், உடலில் என எல்லா இடங்களும் படிந்து போனது..
போன காலத்தை நினைத்து வரும் காலத்தை நினைத்து கடந்து கொண்டிருக்கும் காலத்தை வேடிக்கைப் பார்த்து..
போ காலமே போ உன்னை ஒரு நாள் துரத்திப் பிடிப்போமென ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் சிந்தனையில்...
காலத்தை துரத்திப்பிடிக்கும் நம்பிக்கை இருக்கிறதா உங்களிடம் ?
ReplyDeleteசற்று முரணாக தெரிகிறது.
--