Thursday, December 17, 2009

நிழலுக்கு உயிர் - 3






ஆடும் நாற்காலியில்
ஆடாய்த்தான் முதல்வர்(பிரதமர்???).
ஆட்சித் தொங்கலில் என்றாலும்
மேய்ச்சலில் குறைவில்லை...


"கல்"யாண மேடையில்
அவள் (ஆடு)
பிறந்த வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும்
இடையில்..!!!



உரக்கக் கத்திப் பார்
நானும் கத்துகிறேன்

என் உச்சந்தலையில்
மிச்சச் சிகைகளைக் கோதி
முத்தமிடும் மேகமும் மேடமும்
காலடியில் விளையாடும்
கடலின் கைகளும்
எங்கோ புள்ளியாய்க் கிடக்கும்
மனித மனங்களை விடச்
சந்தோஷமாய்..

காமிராக் கண்பட்டது..
இனி
எந்த ஆபத்து
எந்த ரூபத்தில்
எங்கிருந்தோ

யார் என் உடலில்
ஓங்கி ஆணியடடித்து
உச்சந்தலையேறி
வெற்றிக் கொடி நாட்டுவாரோ?

இருதலைக்கும் இடையே
எல்லைப் போர் மூண்டிடுமோ?

நட்புப் பாலம்
பாதாளத்தில் விழுந்திடுமோ

அலைகளின் அலைச்சல்
இன்று
மலைகளின் மனங்களிலும்..


கற்தூண்களின் ஆதரவில்
நிற்கும் ஆடு
கவலைப் பட்டன
ஆதரவே இல்லாமல் நிற்கும்
மனித மனங்கள்!!!


எந்த மலையின் அகங்காரமோ
உருண்டு விழுந்ததில்
உறவுப் பாலம்...
அமைதித் தூதுவனாய்
ஆட்டுக் குட்டி!


பாறைகள் தேமேவெனக் கிடக்கின்றன!
ஆடு அதுபாட்டுக்கு மேய்ந்து கொண்டு!
அற்பமாயும் அற்புதமாயும்
மனதில் சலனங்கள்!!!


உச்சியில் இருக்கும்
கொஞ்சம் புல் போதும்..
கத்திகள்
தழை அறுத்துப் போடவும் வேண்டாம்
தலை அறுத்துப் போடவும்வேண்டாம்

மக்களின் மத்தியில்
மாறி விட்ட பசுமை
பாறைகளின்
உச்சியில் சற்று
மிச்சமிருக்கிறது
சமாதான ஆட்டிற்காக

.

No comments:

Post a Comment