Wednesday, December 23, 2009

நானும் தமிழும் பாகம் - 22

முந்தைய பாகங்கள் :


டீம் - என் வாழ்வின் உபயோகமான நாட்கள்

2000 ஆம் ஆண்டு தொடங்கினப்ப ஒரு நாள் என் காலேஜ் நண்பன் தட்சிணா மூர்த்தி ஃபோன் செஞ்சான். டேய் என்னுடைய மச்சான் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, நானு இன்னும் சிலபேர் சேர்ந்து நம்ம நாட்டுக்கு எதாவது செய்யனும்னு நினைக்கிறோம். அதுபத்தி டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கோம். நீ அவரை மீட் பண்ணு என அன்புக்கட்டளை போடவே, நானும் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தியை கால்பண்ணினேன். மார்ச் மாசம் முதல்வாரம் மீட்டிங் போடலாம்னு இருக்கோம்,, வாங்க பேசலாம்னு சொன்னார்.

சொல்லப் போனா டீமை ஆரம்பிச்சது ஈரோடு, சேலம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள். ஒரே பிண்ணனி இவர்கள் எல்லாம் ஏழைக் குடும்பத்தில இருந்து படிப்பு என்ற ஒரே ஏணியின் மூலம் மேல வந்தவங்க. எதாவது நம்ம நாட்டுக்குச் செய்யணும்னா அதைப் ஆரம்பப் பள்ளியில இருந்துதான் ஆரம்பிக்கணும்னு ஒரு ஒத்த கருத்து எல்லார்கிட்டயும் இருந்தது.

ஆனா பணமா குடுத்தா நம்ம மக்கள் அதை அமுக்கத்தான் பார்ப்பாங்க. அதே தனி மனிதனுக்கு உதவினா அதனால சமூகம் எப்படி பயன்படும்?

சில பல விவாதங்கள். அந்த விவாத முடிவில உதிச்சதுதான் டீம்.
இது டீமுக்காக நான் எழுதிய முதல் இதழ். இந்த இதழில் டீம் எப்படி உருவானது என விரிவா எழுதி இருக்கேன்,.


இன்னும் டீம் நல்ல முறையில் செயல்பட்டுகிட்டு இருக்கு. இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க


இங்க போய் பாருங்க.


கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, ஒரு தனித்துவமான மனிதர். இவரைப் போன்ற மனிதரை இன்றும் நான் கண்டதில்லை. அனைவரிடமும் நயமாய் பழகும் பாங்கு, அர்ப்பணிப்பு உணர்வு. சிந்தனைத் தெளிவு, அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு.

எனக்கு ஒரு ஆசை உண்டு.. அமெரிக்காவில் இருந்து வந்த பின்னர் டீமில் பங்கு பெற இயலவில்லையே என்ற வெறுமை உணர்வு. எனக்காக என் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்கிற உணர்வு.. எப்படி ஆரம்பிப்பது, எப்போது ஆரம்பிப்பது என்று புரியவில்லை, ஆனால் ஆரம்பித்துதான் ஆக வேண்டும்.. கூடிய விரைவில்.

இந்த ஒரு பதிவின் மூலம் டீமை மன்ற மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெருமைப் படுகிறேன்..

தய்யவு செய்து ஒருமுறையேனும் அந்த இணைய தளத்திற்ற்குச் சென்று முழுமையாய் வாசியுங்கள். டீம் செய்த பணிகள், அது எந்த அள்விற்கு வளர்ந்திருக்கிறது என்ற விவரங்கள், நாங்கள் செய்த நற்பணிகள்..


தமிழ் காத்திருக்கும் ஓரிரு நாட்கள்...

தொடரும்
 .

1 comment:

  1. அன்புத் தாமரை,

    தாங்கள் சொல்லின் செல்வர் மட்டுமல்ல, செயலிலும் எண்ணத்திலும் பெருஞ்செல்வர்தான், தங்களின் இந்தப் பகுதியை இன்று கண்டேன். போற்றுதலுக்குரிய அரும் செயல் நடத்த தளம் கண்ட டீம் நண்பர்களுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நேரம் வரும் போது ஆக்க பூர்வமான என்பங்களிப்பும் இருக்குமென உறுதி கூறி வாழ்த்துகிறேன்.

    எழுத்துப்பணியினூடே பொது நலக் காரியங்களிலும் தாங்கள் ஈடுபடுத்திக் கொண்டிருப்பது வியக்க வைக்கிறது. அன்னயாவினும் புண்ணியம்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற முதுமொழியினுக்கு முகவுரை கண்ட உங்கள் நண்பர்கள் கூட்டத்தினிரது பொறுப்புணர்வு போற்றுதற்குரியது. அனைவருக்கும் என் பாராட்டுதலைத் தெரிவிக்கவும். மேலும் மேலும் இப்பணி சிறக்க அனைவரும் உண்மையான பங்களிப்பை தருவோம்.

    சாலைஜெயராமன்

    ReplyDelete