Monday, December 21, 2009

மரணக் கடி : வாயும் நாயும்!!!

சுஜி : வாயால நாயின்னு சொல்லலாம் நாயால வாயின்னு சொல்லமுடியுமா? ஹா ஹா ஹா... (தலையைச் சிலுப்புகிறார்)

தாமரை : நாய் இருக்கே அதனோட வாய்தானே வாய்ன்னு சொல்லணும். நாயோட வாய் நாய்ன்னும் சொல்ல முடியாது.. வாய்ன்னும் சொல்ல முடியாது.. அப்ப வாயால நாய்ன்னு சொல்லமுடியும்னு சொன்னதே தப்பு.. அப்புறம் எப்படி நாய் வாய்ன்னு சொல்ல முடியும்?

ரைமிங்கா பேசினாப் பத்தாது.. டைமிங்காவும் பேசனும்..

தொபீர்(சுஜி மயங்கி விழுந்த சத்தம்தான்)

பென்ஸ்: இதிலென்ன டைமிங் இருக்கு?

தாமரை : அதுவா! கடிஜோக் அடிச்சா தாமரை இல்லாதப்ப அடிக்கணும். இல்லைன்னா இப்படித்தான்.. அதுதான் டைமிங்!

ஓவியன் : ஆமா நீங்கள் எப்படி இப்படிச் சொல்லலாம்........?
நாயோட வாய் உங்க கிட்ட வந்து செல்வண்ணா, செல்வண்ணா நான் நாய் என்றும் சொல்ல மாட்டேன், வாய்னும் சொல்ல மாட்டேன் என்று எப்பவாச்சும் உங்க கிட்ட சொல்லிச்சா........?

இல்லை எழுதியாச்சும் காட்டிச்சா........?

அப்படி இருக்கையிலே சும்மா, ரைமிங், டைமிங் என்று.............!!!

தாமரை :

சொல்லி இருந்தாதான் பிரச்சனை இல்லியே!!!!

ஓவியன் உணர்ச்சி வசப்படாதீங்க.

நாய் சொல்லிச்சுன்னு நான் சொன்னாத்தான் ஆதாரம் காட்ட வேண்டும்.

நாய் சொல்லலைன்னு நான் சொன்னா சொன்னதுக்கு நாய்தான் ஆதாரம் காட்டணும்.

லொள்ளு வாத்தியார் :

நாயு வாயு போட்டு குழப்பி
என்னை நாய் படாத பாடு படுத்தி
சும்மா இருந்த வாய கிழரி
நாய வாயாகாம வாயா நாயாகாம இருக்க மாட்டீங்களா
ஆனாலு நான் வாய நாயாக்கம நாய வாயாக மாட்டேன்
இறுதியா என்ன சொல்ல வரேன்னா
நாய வாயாக்கலாம் அது நாம நம்ம வாயால சொன்னது
வாய நாயாக்கலாம் அது நாம நம்ம நாயால சொன்னது

தாமரை :
நாயை வாயாக்க எளிய வழி..

நாய்க்கு வாய்ன்னு பேர் வச்சிடுங்க


ஓவியன் :

அப்போ வாய் என்ற பெயர் வைத்த நாயோட வாயை எப்படி அழைப்பது...?

சுகந்தபிரீதன் :

இதுகூட தெரியாதா அண்ணாச்சி...வாயோட வாய்ன்னுதான்...


ஓவியன் :

வாங்க என் செல்லத் தம்பி!
நாய் வாய் ஆனா, அப்புறம் எப்படி வாய் வாயாகும்...?


தாமரை :

வாய் நாயோட வாயானாலும் வாய் வாய் வாய்தானே..

ஓவியன் என்று நீங்க பேர் வச்சுகிட்டா பிக்காஸோவும் டாவின்ஸியும் ரவிவர்மாவும் ஓவியர்கள் இல்லைன்னு ஆயிடுவாங்களா?

தலை ன்னா நம்ம அஜீத்! அவரோட தலையை எப்படிச் சொல்லுவீங்களோ அதே மாதிரிதான்


ஓவியன் :

சரி இப்போ விசயத்துக்கு வாறன், வாய் என்று பெயர் வைத்த உங்க வீட்டு நாயை நீங்க வாய், வாய் என்று அழைப்பதாக வைத்துக் கொள்வோம், அப்போ வாய் என்ற பெயர் வைத்த உங்க நாயும் வாய் என்ற பெயர் வைத்த அந்த நாயோட வாயும் யாரை நம்ம செல்வன் அண்ணா அழைக்கிறாருனு குழம்பிக் கொள்ளாதா..?

தாமரை :
வாய் நாய்க்குத்தான் காதுண்டு..நாய் வாய்க்கு காது கிடையாது..
அதனால வாய்ன்னு கூப்பிட்டா வாய் நாய்க்குக் கேட்கும். நாய் வாய்க்குக் கேட்காது.

சோ!! நோ கன்ஃப்யூஸன்

ஓவியன் :

அப்போ நாய் வாயைக் கூப்பிடணும்னா என்ன பண்ணுவீங்க..?

தாமரை :

உங்க வாயையே யரும் இன்னும் கூப்பிடறதில்லை.. நாய் வாயைக் கூப்பிடனும்னு நினைக்கிறீங்களே இது நாயமா??

இப்போ எப்படி நாய் வாயைக் கூப்பிடறீங்களோ அப்படியே கூப்பிடுங்க.. அது புத்திசாலி.. உங்களை மாதிரி குழம்பாது.

ஓவியன் : நீங்க நாயை வாயாக்கும் போது, நாம வாயை அழைக்கிறது பற்றி யோசிக்கிறதிலே என்ன தப்பு..?


தாமரை : நான் தப்புன்னு சொல்லலியே!.. நாய் தெளிவாத்தான் இருக்கும்,.. நீங்க குழப்பிக்காதீங்கன்னுதான் சொன்னேன்.

நீங்க வாய் ன்னு கூப்பிட்டா நாய் என்ன வாயைக் கழட்டி வச்சுட்டா வரப்போகுது?

ஓவியன் :

நாய் நாயாகத் தானே இருக்க வேண்டும், அது எப்படி தெளிவாக இருக்கும்....

தாமரை :

இதைத்தான் வாய்ச் சுத்தம் வேணும்னு சொல்வாங்க.. தெரியாதா?

அமரன் :

நாய் வால் நிமிர்ந்தாலும் இங்க ரவுசு தீராது போல இருக்கே....!

தாமரை :

ரவுண்டு கட்டி
சுத்தி சுத்தி
அடிக்கறதினாலதானே
ரவுசு..

அடிக்கிறாங்க ரவுசு
அதுக்கு இருக்கு மவுசு
அது சிலபேருக்கு பவுசு

மனோஜ் : நாய் படாத பாடு படுதுபா

தாமரை :

கூடவே ஒரு காயையும் சேர்த்துகிட்டா நல்லா இருக்குமோன்னு யோசிக்கிறேன்.

நாய்க் காய்
வாய்க் காய்
வாய்க்காய் நீ
வாகாய்
வா காய்

(மண்டை காயுதுன்னு ஓவியர் புலம்பற சத்தம் இங்க கேட்குது )

ஓவியன் :

ஹீ,ஹீ!
அதெப்படிக் காயும்...

காயாமல் இருந்தாய்
சொல்லுதே
நாய்க் காய்
வாய்க் காய்
நான் போட்ட
வாய்தா....!


தாமரை :


கேள்வி கேட்க
வாய் தா என்கிறீர்களா

இல்லை
வாயான நாயை
தரச் சொல்லி
வாய் தா என்று கேட்கிறீர்களா

இல்லை யோசிக்க
வாய்தா கேட்கிறீர்களா?

ஓவியன் : யோ சிக்க வாய் எதற்கு, அதற்கு ஒரு வலை போதாதா...?

தாமரை :
பெங்களூர் கோரமங்களா 80 அடி சாலையில் உள்ள சீன உணவகத்தின் பெயர் - யோ சைனா.

அங்கு சிக்க வாய்தான் வேண்டும் வலை தேவையில்லை.


ஓவியன் :

சிக்க வாயா..?
இல்லை
சிக்காதிருக்க வாயோ..?

எதுவேணாலும்
வலையில் சிக்கினால் தான்
கொஞ்சம்
வாயிலும் சிக்கும்...!

தாமரை :

வலையில் சிக்குவதெல்லாம்
வாயில் சிக்குவதில்லை
வாயில் சிக்குவதெல்லாம்
வலையில் சிக்குவதில்லை

என் வாயில் சிக்க
நீர் யார் வலையில் சிக்கினீர்?

வலையில் சிக்குமோ
இலையில் சிக்குமோ
தலையில் சிக்குமோ - என்
கலையில் சிக்குமோ
சிக்கெனச் சிக்கும்
சிரிக்கும் சிக்கல்


ஓவியன் :


வாயில் சிக்கினேன்
நாயில் சிக்கினேன்
வாய் பெயர் வைத்த
நாயிலும் சிக்கினேன்
வாய் பெயர் வைத்த
நாயோட வாயிலும்
சிக்கினேன்........

தமிழ் என்ற வலையில் சிக்கினேன்
யோ சிக்க வைத்த
செல்வ(ர்) கலையில் சிக்கினேன்
தலையில் சிக்கி
சிலையானாலும்
இந்த வலையை விட்டு
வர மனமில்லையே.......!

தாமரை :


சிக்கலில் சிங்கார வேலர்
சிங்காரத்தில் சிக்கிய சீலர்
சிக்கலும் சிங்காரமும்
சீலத்தை சிக்க வைத்து
சுத்தலில்
விட்டுக் கொண்டிருக்கின்றன
ஞாலத்தை


ஓவியன் :

செவ்வாய் பிழைத்ததால்
என் செவ் வாய்
ஆனதோ அகல் வாய்,
ஆனாலும்
அகல்வதாயில்லை
இந்த வாய் நாயை விட்டு....


அமரன் :

நாய் வாயாக
வாய் வாய்க்காய்
நாய்க் காய்
வாய் கொடுத்து
வலையில் சிக்கி
விலையில்லா தமிழில் சிக்கி
சிக்கல் சிங்காரமாகி
சிங்காரம் சிக்கலாகி
சுத்தி சுத்தி
சிக்கி சிக்கி
சுத்தலில் விழ
விட்ட சுத்தலில்
நாக்கை கடித்து
துள்ளிப் பாய்ந்து
காய் காயெனக் காய்ந்து
களைத்து
சித்தம் கலைந்து
தெளிந்து கலைந்து
சுத்தமாக இருக்கிறது
ஞான அறை..!

தாமரை :

ஞான அறை காலியாய்த்தானே இருக்கும்..சாலையண்ணாவையும், நாகராவையும் கேட்டுப்பாருங்களேன்.

ஞானம் நாணம் இரண்டும் தொடர்புள்ளவை. ஞானம் புகழந்தால் நாணும்.
நாணம் புகல்வது ஞானம்.

சிறுபிள்ளை :

எல்லாம் சரிந்தாங்க....
வாயால நாய்ன்னு சொல்ல முடியாது
நாயால வாய்னு சொல்ல முடியும்..... என்ன ஒரு மாதிரியா பாக்குறிங்க... இதுக்கு பதில் சொல்லுங்க... பழசுதான் ஆனா இது புதுசு....

நாயால வால ஆட்ட முடியும் ஆனா
வாலால நாய ஆட்ட முடியுமா??


தாமரை :

டேய் வாலு, அந்த நாயைப் புடிச்சி ஆட்டிக் காட்றா!

எந்த வாலுன்னு சொல்லாம விட்டது உங்க தப்பு..சிறுபுள்ளைதானே பொழைச்சுப் போங்க..


சிறுபிள்ளை :

கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்களாமா அதனால இவங்க புத்திசாலியாமா... எனக்கு சிப்புதான் வருது சிப்பு

வாலுன்னா என்னான்னெ தெரியல இவங்ககூட போயி மோதுரோமோ...... நான் சொன்னது கத்தி கத்தி சண்டை வாலுங்கோ.....

ஆமாம் சிறுபிள்ளை இதுக்கெல்லாம் நீ மசிஞ்சிடுவியா என்ன?

தாமரை :

அதுக்குப் பேர் வாளுங்கோ..
கமுக்கமா இருந்து வாழுங்கோ.
இல்லைன்னா நறுக்கிடுவோம் வாலுங்கோ

அமரன் :

நாயின் வாலைப் பிடிக்க..
அது கத்தி குரைக்க..
பிடித்தவர் கத்தி ஊரைக்கூட்ட..
அட..வாயும் நாயும் தலைப்புடன் பொருந்துதே

No comments:

Post a Comment