Monday, December 21, 2009

தாமரை பதில்கள்

உங்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை என்ன? ஏன்?

இந்தக்கேள்விக்கு டக்குன்னு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சேன். அம்மா, தமிழ் இப்படி சமாளிப்பு பதில்கள் எழுதவேணாம். அடிக்கடிச் சொல்லுற முருகா வேணாம்.. வாழ்க்கையில நான் அதிகம் பிடிச்சு உபயோகிச்ச வார்த்தையை யோசிக்கறேன்...

கல்லூரிக் காலங்களில் நான் மிக அதிகமா கவிதைகளை எழுதிய போது அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை கண்ணே..!

கண் மேல எனக்கு எப்பவுமே ஒரு கண்ணு உண்டு.

கண் என்றால் இடம் என்றும் பொருளுண்டு. இடம் என்றால் இடப்பக்கம் என்றும் பொருளுண்டு. இடப்பக்கம் என்றாலே பெண்மைதான் நினைவுக்கு வரும்..

ஐம்புலன்களில் கண்ணின் பங்கு மிகப் பெரிது. மனிதர்கள் கண்ணிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மற்ற உறுப்புகளுக்கு அளிப்பதும் இல்லை.

ஆமா எனக்கு ஏன் கண் பிடிக்கும்?

அப்படித்தானே அம்மா நம்மளைக் கூப்பிடுவாங்க. அந்த வார்த்தையைக் கேட்கும் போது மனசுக்கு டக்குன்னு தைரியம் வரும்.

நம்மளை கண்ணே என்று அழைப்பவர்களும், நாம கண்ணே என்று அழைப்பவர்களும் நம்ம வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக மாத்தறாங்க

கண் - ரொம்ப எளிமையான வார்த்தைதான்.. ஆனால் அதில் இணைந்து வரும் அன்பு, அக்கறை, பாதுகாப்பு உணர்ச்சி இதுக்காகவெல்லாம் சேர்த்து

கண் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

.

No comments:

Post a Comment