Tuesday, December 8, 2009

"பந்திக்கு முந்தி.. படைக்குப் பிந்தி" - ஏன்?

ஆஹா யவனிகாவோட மருத்துவ ரகசியம் வெளியத் தெரிய வந்திருச்சே!

என்ன சொல்ல.. உண்மை வெளிப்படும் போது அதை மூடி போட்டு பொத்தி வைக்கவா முடியும்..

லொள்ளபுரியில அடிக்கடி விருந்தும் நடக்கும் சண்டையும் நடக்கும்..

லொள்ளபுரி மக்கள் இதனால முன்னால தொந்தி பெருசாவும், சரியா ஓட முடியாததாலே எதிரிங்க பின்னால துரத்தி துரத்தி அடிச்சதால முதுகும் தொப்பை மாதிரியே வீங்கி கன்னிப் போய் கிடக்கும்

எல்லோருக்கும் மருத்துவம் செய்யறதுக்குள்ள யவனிகாவுக்கு தாவு தீந்து போயிடுச்சி.. அதுக்காக ராசாவை தனக்கு உதவியா வச்சிகிட்டாங்க'..

லொள்ளர் ராசாவா இருக்கறப்ப வேற யாரையாவது ராசானு கூப்பிட முடியுமா என்ன? அதனால கமுக்கமா புள்ளின்னு தான் சொல்லுவாங்க.

ஆனா ராசாவுக்கு அந்த அளவுக்கு கற்பூர புத்தியில்லை.. கொஞ்சம் மக்குதான். வலின்னு வர்ரவங்களுக்கு எங்க வலின்னு சொல்லத்தெரியலை.. சுத்தி பக்கமும் வீங்கி இருக்கறதினால எங்க அடிபட்டு வீங்கியிருக்குன்னு தெரியாம சுத்தி முத்தியும் மருந்து பூசுவார்.. விலை மதிப்பில்லாத அந்த மருந்து வேஸ்ட் ஆகறதை விரும்பாத யவனிகா அந்த சூத்திரத்தை ராசாவுக்கு உபதேசம் செய்தார்,,,

"பந்திக்கு முந்தி.. படைக்குப் பிந்தி"


அதாவது வர்ரவங்க கிட்ட இதுக்கு முன்னால என்ன செஞ்ச, எங்க போயிருந்தன்னு கேட்கணும்

பந்தின்னு சொன்னா முன்னால மருந்தை (தொப்பை மேல) தடவணும்
படை (போருக்கு போனேன்) என்று சொன்னால் பின்னால முதுகில அதே மருந்தைத் தடவனும்

இப்படித் தடவித் தடவியே ராசாவும் பெரிய வைத்தியரா ஆயிட்டாராம்..

இப்ப புரியுதா?

..

No comments:

Post a Comment