Sunday, December 20, 2009

நிழலுக்கு உயிர் கவிதை - 7



வைர மோதிரம் கேட்டு
அலைக்கை நீட்டும்
கடல் மனைவியின் மீது
எரிந்து விழுகிறானோ
நிலமகன். 

எரிமலையின் வேஷத்தில்
ஆதவனா?
வேஷப் பொருத்தம் கண்டு
கைதட்டி ஆர்ப்பரித்தன அலைகள்

என்னடா சப்தம் என
எட்டிப் பார்த்தன
சில மீன்கள்
மேலிருந்தும் கீழிருந்தும்

அனலுக்கும் புனலுக்கும்
திருமணம்
அப்பன் சூரியன் மனம்
கிரஹணம்!
சூரியன் கண்மூட
அனல் புனலில்
ஒளிந்து கொள்ள
ஓடிக் கொண்டிருக்கிறது

இயற்கையின் கண்ணாமூச்சி விளையாட்டு
இன்னும் எத்தனையோ!!!...

கிரஹணம் கறையல்ல
நீ சூரியனாய் இருக்கும் வரை..

அனலும் புனலும்
அருகருகில்
ஒளியும் இருளும்
அருகருகில்
ஒன்றையொன்று தழுவிக்கொண்டு
மனிதர்கள் நாம்தான்
தனிப்பட்டுப் போய்
கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு
ஸ்டைலாய் சூரியன்
கொதித்தும் குளிர்ந்தும் பூமிக்காதலி
ஊடலும் கூடலும்
அழகுதான்

சிந்தனைகள் :

இந்தச் சூரியனைக் கண்டால் எப்படியெல்லாம் தோன்றுகிறது..

இருட்டின் கழுத்தை நெரிக்கும் ஒளிவட்டம்.. வெறும் கிரகணத்தை மட்டும் பார்க்கும் பொழுது சரி ஆனால் சுற்றிலும் இரூண்ட வானம், சற்றே தெரியத் தொடங்கி இருக்கும் நட்சத்திரம்???? வெளிச்சத்தின் கையில் இருளா, இருட்டின் கையில் வெளிச்சமா?

சூரியனுக்கு விழுந்தச் சொட்டை???
உண்மையின் பின் தலை???

சூரியச் சொட்டையன் மாட்டிக் கொண்ட பொய் முடி, தொப்பி (விக்) என்று வேண்டுமானால் சொல்லலாம்.. ஹி ஹி ஹி..

..

No comments:

Post a Comment