1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.
காலுள்ளவன் எதுக்கு கால் பண்ணனும்??
2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.
அவருக்கு மிமிக்ரி தெரியாதா?
3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா? (இது கொஞ்சம் பழசு
பாக்கலாமே! அடுத்தவர் முதுகை... சரவணன் எடுத்துச் சொல்லுங்க..
4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயகன்னு சொல்லக் கூடாது.
அப்போ கேன் பிடிச்சுகிட்டு போறவன்???
5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.
நீங்க சேஃப். இல்லியா..
6. தேள் கொட்டினா வலிக்கும் தேனீ கொட்டினா வலிக்கும்?
முடி கொட்டினா வலிக்குமா
வழுக்கும்!!!
இது சாந்தினி சௌக் ரெஸ்டாரண்ட்ல பென்ஸை பார்த்து அனிருத் சொன்னதோட விரிவாக்கம் தானே!!!
7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்
காலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்
ப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா?
பிட் அடிக்க முடியாது.. "பைட்" (கடி) அடிக்கலாம்...
8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா?
பொங்கலுக்கு லீவு குடுத்தா நீங்க ஏன் ஆஃபிஸ் வர மாட்டேங்கிறீங்க.. நீங்க என்ன பொங்கலா? ( நிஜமாவே இப்ப பொங்கிருவீங்க தானே?)
9. கோலமாவில் கோலம் போடலாம்..
ஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா?
போடலாமே.. பென்ஸை கேளுங்க.. கடலை மாவு தேச்சுக் குளிச்சா ஸ்கின் பளபளப்பா இருக்கும், ஸ்கின் டோன் ஒரே மாதிரி பாதாம் பருப்பு கலர்ல மாறும்னு 3 மணி நேரம் கடலை போட்டாரே!.. பிளஷ் பதிப்பை பாருங்க... சாட்சி: சரவணன்
10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்
தலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்
இதைப் படிச்சா உங்களை ஒரு கும்பலே அடிக்கும் .. ஆட்டோவில் வந்து...
1. சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மாக்
லவ்வே பண்ணாட்டி டிஸ்டிங்க்ஸன்
கல்யாணமே பண்ணாட்டி ஹானர்ஸ்
2. போகிக்கும் பொங்கலுக்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருட வித்தியாசம்
என்ன உலகமடா இது?
போகிக்கும் பொங்கலுக்கும் லீவு விடாம பொங்கலிலிருந்து போகி வரை லீவு விடணும்.. பொங்கல் தமிழர் பண்டிகை.. போகி (இந்திரன்) பண்டிகை வட நாட்டார் பண்டிகைன்னு போராட்டம் நடத்துவீங்களா! அதை விட்டுட்டு..
3. என்னதான் டிவியும் ரேடியோவும் விடிய விடிய ஓடினாலும்.
அதுகளால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது..
இதுதானய்யா வாழ்க்கை!
ஓயாம பேசினாலும், ஒரேடியா அழுதாலும் வாழ்க்கையில முன்னேற முடியாதுன்னு அதுங்க சிம்பாலிக்க சொல்றதை புரிஞ்சுக்குவீங்களா? அதை விட்டுட்டு...
4. டீ நகர்ல டீ வாங்கலாம்...
விருதுநகர்ல விருது வாங்க முடியுமோ?
உம்மையெல்லாம் தே.மு.தி.க் ஆந்திரா செயலாளரா போட்டது.. அரசியல்வாதியால வாங்க முடியாத விருதா?
அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
அமெரிக்காவை அமெரிக்கையா தொலச்சதும் அவருதானுங்கோ.. தொலைச்சவர்தானே தேடுவார்..
2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
ஏன் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இப்படி எக்கச்சக்க நியூஸ் வரத்தானே செய்யுது,,,
3. மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?
மாத்து இரை வேணும்னுதானே தண்ணி குடிக்கிறோம்..
மூனத் தொட்டது யாரு?
டைப் பண்ணும்போது நீங்க... 3 இப்ப நானு,
நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவர் ஏப்ரல் மாதம் கட்டிய பில் தொகையை கண்டு மலைத்துப் போனேன்.
இருபதாயிரம் ரூபாய். இதில் 10 சதவிகிதம் வரி மற்றும் ஒரு நிமிடத்திற்கு 1 ரூபாய் என்றால், தோராயமாக ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பேசி இருப்பார்..?
இந்த கணக்கு பலருக்கும் உபயோகப்படும்
கால் கட்டு
காலைக் கட் பண்ணும் முன்ன
பில்லக் கட்டு...!!!!
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்எங்க ஊரு கல்யாணத்துக்கு வந்து பாருங்க நீங்க இல்லாமலேயே செருப்பு நடந்து போயிருக்கும்.
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
(தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
(செருப்பு தொலைத்து நொந்து போனவர் சங்கம்)
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து
யோசிப்போர் சங்கம்)
கடலை மாவும் அழகுக் குறிப்புகளும் என்று ஒரு டாபிக் ஆரம்பிச்சுக் கடலை போடலாமே!
(கடலோரக் கடலை போடுவோர் சங்கம்)
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை
ரயில் நம்ம மேல ஏற பிளாட்பாரத்திற்கு வரத் தேவையில்லை. தண்டவாளத்திற்குப் போனால் போதும்.. இதுதான் நிஜம்.
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா
பஸ்ஸு வரும்.
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
ஓ நப்பாசையிலதான் ஃபுல் ஸ்டாப்புக்குப் பக்கத்திலே வேறு எதுவும் போடாம காத்திருந்தீங்களா? அதை இதுக்கு முந்தின ஃபுல்ஸ்டாப்பிலேயே யாரோ லபக்கிட்டாங்களாம்.
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள்
நிக்கும்.
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?
யோசிக்கனும்.....!!
கொசு வத்தி ஸ்டேண்ட் இல்லியா? நின்னா கொசு வத்திடுமே.. அது புத்திசாலி.. முடிஞ்சா கொசு ஸ்டேண்ட் வச்சுப் பாருங்க.
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
இஞ்சினியரிங் காலேஜ்ல குமுதம் படிச்சாலுமா? சொல்லவே இல்ல,.
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
ஆட்டோ ன்னு பேர் வந்தது அது நம்மளை ஆட்டறதாலே!!!
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!?!)
தூக்க மருந்த சாப்பிட்டா தூக்க முடியாது..இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது. இதாங்க கரீக்டு.
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க
முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
எல்லாத்துக்கும் பீஸை புடுங்கலாம்..
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
ஒரு நாளெல்லாம் காத்துகிட்டு இருக்க முடியாது சண்டே சண்டையிலியே மண்டையைப் போட்டுடுங்க.
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.
பில்கேட்ஸே இன்னும் (காலைக்)கடனைக் கழிச்சுகிட்டேதானே இருக்காரு.
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்டா கொலுசு வருமா?
யாராவது லபக்கறப்ப சத்தம் போட்டா வரும்.
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்
ரிவர்ஸ்ல போனா பேக் வீல்தான் முந்திப் போகும்.. இதுதான் நிஜம்.
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர்
போனா விருது வாங்க முடியுமா?
வாங்கலாமே. கொஞ்சம் காஸ்ட்லி. அவ்வளவுதான். மேடை போட்டு மைக்செட் வச்சு.. காசு வச்சிருக்கீகளா?
என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
அடிக்கிறது வீரமில்ல.. அம்புட்டு அடியையும் தாங்கிகிட்டு அசராம நிக்கரமில்ல.. அதுதான் வீரம் (வடிவேலு இரசிகர் மன்ன்றம்)
உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
உங்க உடம்பில போட்டு பேசமுடியுமோ? ஏனுங்க உடம்பில செல்களே இல்லாட்டி இப்படிப் பேசுவீங்களா என்ன?
ஓடுற எலி வாலை புடிச்சா.
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு
எலி பிடிக்கிறவங்க தான் கிங்கா?...
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
பம்பர் மேல ஏறிக் கூடவா?
வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
ஏன் கட்டை வண்டி டயரோடவா ஓடுது?
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
No comments:
Post a Comment