Sunday, December 20, 2009

டைவ்..




உயரங்களும் ஆழங்களும்
அம்பாய்ச் சீறி இறங்கும்
வேகங்களும்
சிலீரென பூக்கும்
சின்னச் சந்தோஷங்களும்
காதலுக்கு மட்டும்
சொந்தமில்லை
இவர்களுக்கும்தான்!

தன் வீழ்ச்சியில் சந்தோஷம்
எவ்வளவு பெரிய
கர்மயோகி இவன்!!!
ஆயிரம் முறை முங்கியாவது
எடுத்து வருவேன்
அத்தை மகளின்
ஒத்தைக் கொலுசு! 

உன் பாத அழுக்குகள்
தின்ற மீன்களில் ஒன்றுதான்
பொறாமையில்
திருடி இருக்க வேண்டும்
நீ தொலைத்த கொலுசை
ஒவ்வொரு குளத்திலும் தேடுகிறேன்!

ஆழமறியா இடங்களில்
அனாவசியமாய் குதிக்கும் சிறுவன்
அப்படியே இருந்திருக்கலாம்
உருவிலும் அறிவிலும்
வளர்ந்ததால்
பயமாயிருக்கிறது
இப்பொழுதெல்லாம்... 
முதுகுத் தண்டில் சிலீர்
காரணம்
அட்ரினலா
ஆற்றுப் புனலா?


பிழைக்கத் தெரியாதவன்
குதிப்பதைப் பார்த்து
பிழைக்கத் தெரிந்தவன்
செத்துப் பிழைக்கிறான்


ஆறு தரும் ஆறு
மீன்
விவசாயம்
குடிநீர்
போக்குவரத்து
மணல்
மகிழ்ச்சி(பொழுது போக்கு)

இவையெல்லாம் நீ பசியாற...
இன்னும் நிறைய இருக்கிறது பரிமாற
தலைமுழுகு சோம்பேறித்தனத்தை
மூழ்கி எடு தன்னம்பிக்கையை!!!

நான் விழும் பொழுதெல்லாம்
எழுந்தது
என் xxxxxxxxxx

எதைப் போட்டாலும் பொருந்துமே!!!!!

No comments:

Post a Comment