படிச்சது :
ஒரு சாஃப்ட்வேர் எஞ்ஜினியர் எழுதிய காதல் கடிதம்:
கணப்பொழுது கூட கவனம் சிதறாமல் கருமமே கண்ணாய் கண்ணிமைக்கமால் கணினியையே கண்டுகொண்டிருக்கும் காதலிக்கு....
காதல் என்றால் kilobyte என்ன விலை? என்று தான் இருந்தேன் உன்னை பார்க்கும் வரை.என்று உன்னை கண்டனனோ,அன்று தொலைந்த என் மனதை google searchல் தேடியும் கிடைக்கவில்லை.
உன் நுனிவிரல் விளையாடும் கீபோர்டில் நான் ஒரு கீ யா இருக்க கூடாதா? உன் உள்ளங்கை தொட்டதால் mouse க்கு மவுஸ் எறி விட்டது. Printer Ribbon யை பார்க்கும் போதெல்லாம் ribbon வைத்த உன் கூந்தல் தான் ஞாபகம் வருகிறது
Busy Mouse Pointerல் Hour glass காணும் போது உன் உடல்வாகு ஞாபகம்.எத்தனை முறை Restart செய்தாலும் Hang ஆக மறுக்கிறது மனசு.
Intelligent என்று பெயரெடுத்த நான் இப்போது உன்னால் Artificial Intelligence இல்லாத ஜடமாகி போனேனடி.உன் கணினியில் உள்ள வைரஸை Anti Virus கொண்டு க்ளின் செய்தாய்.என் மனம் பாதித்த காதல் வைரஸுக்கு உன் மனம் என்னும் anti virus யை தருவயா...
உன் கணினிக்கு மின் தடை பாதிக்க வண்ணம் UPS Backup வைத்து இருக்காய்.நீ இல்லையேன்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி(தங்கை யாரும் இல்லையா)
உன்னை அழைத்து கொண்டு Drive செய்ய நான் இருக்கும் போது,நி Floppy Drive, CD Drive என்று வாழ்வது சரியா ?
JPEG Formatல் உள்ள உன் படங்கள்,MPEG Formatல் உள்ள உன் அசைவுகள் என்று அனைத்தையும் என் Hard Disk ல் நிரப்பி விட்டேன்.
உன் ஈ-மெயிலுக்காக என் Inbox காத்து கொண்டு இருக்கும்.
பின் குறிப்பு : பழக்க தோஷத்தில் CC to Multiple recipent போட்டு விடாதே.
கடிச்சது :
கிலோபைட்டில் மெமரியை வைத்து "மெகா" பிட்டைப் போடப் பார்ப்பவரே!!
"Goggles" போட்ட கண்களால் கூகுளிலும் தேட முடியா மனதுடையவரே! மனமில்லாமல் எழுதி விட்டு பதிலேன் எதிர் பார்க்கிறீர்.
கீ போர்டும் மௌஸும் லெகஸியிலிருந்து வயர்லஸ் ஆனபின்னும் யூஸ் லெஸ்ஸாய் டாட் மேட்ரிக்ஸ்ஸின் ரிப்பனுக்கும் பின் அலையும் அப்பனே, டச் ஸ்கிரீனாய் என் மனதை டச் செய்ய வில்லையே நீ!
கிளாஸ் கண்டாலே ஆடிப்போகும் நீ, அழுவதை விட தூக்கில் தொங்கி (ஹாங்க் ஆகி) விடுவதே நன்று. காதல் வைரஸை கொல்ல ஆண்டி வைரஸ் கேட்கும் நீ ஆண்டிக்குப் பின்னால் போனால் ஆண்டி ஆவது யார்?
Drive எல்லாம் சேமித்து வைக்கும். உன் drive ஓ ஓசிக்காரில் ஊர்சுற்றும்.
மெகாபைட் , கிகாபைட் வேண்டாம், ஒரு பஜாஜ் பல்சராவது சொந்தமாய் உண்டா?
UPS - இல்லாமல் அப்செட் ஆனவனே, தன் கையை பார்க்காமல் தங்கையைப் பார்ப்பவனே.
CC என்ன BCC யில் கூட உன் பெயரில்லை..
.
No comments:
Post a Comment