முன் அறிவிப்பு!!! இது ஒரு உண்மைச் சம்பவம்..
பின் அறிவிப்பு!!! இதில் சம்பந்தப்பட்டவர் ஒருவர் சொன்னதுதான் இது. மற்றவர்கள் யாரென்று தெரியாது. அவர்கள் மன்றத்தில் இருந்தால் மன்னிக்கவும்.
சைட் அறிவிப்பு!!! இது முற்றிலும் நகைச்சுவைக்காகவே பதிக்கப் படுகிறது
குத்துமதிப்பாய் மைய அறிவிப்பு!!! சிரிக்க மட்டுமே செய்ங்க!!!
கார்த்தி அலுவலகத்தில் சீரியஸாக டீபக்கிங் செய்து கொண்டிருந்தான்.. ரமேஷ் அவன் ரூம்மேட் சுத்த சைவம் என்பதால் மதியம் வீட்டிற்குப் போய்தான் சாப்பிடுவான்,,
கார்த்தி, வர்ரியா வீட்டிற்குப் போய் சாப்டுட்டு வரலாம்?
இல்லைடா.. இங்கயே எதாவது பர்கர் பிட்ஸா சாப்டுக்கறேன்.. கொஞ்சம் அர்ஜண்ட்..
சரி சரி நான் போயிட்டு வர்ரேன்..
வீட்டிற்குப் போன ரமேஷ், ஃபிரிட்ஜ்ல இருந்து சாம்பார் எடுத்து சூடு செய்து, எலக்ட்ரிக் குக்கரில் இருந்த சாதத்தைப் போட்டு சாப்பிட்டான்..
சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு பாத்திரமெல்லாம் கழுவி விட்டு,,, கிளம்பத் தயாரானான்..
இயற்கை அழைத்தது..
பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே போக...
அங்கே அந்த சிவப்பு வண்ணக் கார் நின்று கொண்டிருந்தது!!!
ரமேஷூக்கு ஒண்ணும் புரியலை.. உடனே ஓடி வந்து கார்த்திக்குப் ஃபோன் பண்ணினான்..
கார்த்தி நான் ரமேஷ் பேசறேன்...
சொல்லுடா என்ன ஆச்சு? ஏன் பதட்டமா இருக்க...?
நம்ம பெட்ரூம்ல ஒரு கார் நிக்குதடா!!!
கார்த்தியால் நம்ப முடியவில்லை..
என்னடா உளர்றே?
இல்லைடா உண்மையைத்தான் சொல்றேன்.. செவப்புக் கலர் பழைய நிஸான் செண்ட்ரா!!!
டேய் உளராதடா! அதெப்படி பூட்டி இருக்கிற வீட்டு பெட்ரூமுக்குள்ள கார் வரும்?
அதாண்டா எனக்கும் புரியலை பயமாயிருக்கு,,,
இரு இரு உடனே வர்ரேன்..
கார்த்தி கிளம்பி வர இன்னொரு ரூம்மேட் பாலுவும் வந்து சேர்ந்தான்..
சாத்திய பெட்ரூம் கதவை மீண்டும் திறக்க உள்ளே
சிவப்புக் காரும் இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் இருந்தனர்...!!!
கார்த்தி கொஞ்சம் விவரமானவன் என்பதால் உள்ளெ போனான்..
போலீஸ் அவன் யாரென்று கேட்க, நான் இந்த வீட்டில் குடியிருப்பவன் இங்கே என்ன நடக்கிறதென்று கேட்டான்..
ஒரு வயதான பெண்மணி காரை உங்கள் பெட்ரூம் சுவரில் மோதிவிட்டார்.. சுவர் உடைந்து கார் உள்ளே வந்து விட்டது..
அவர் அவசரமாய் போலீஸ் உதவிக்கு அழைத்ததால் நாங்கள் வந்திருக்கிறோம்...
சம்பவம் நடந்த பொழுது எங்கிருந்தீர்கள்?
ச்xxxxxx கம்பெனியில் பணிச்ய்து கொண்டிருந்தேன்..
உங்களுக்கு தகவல் எப்படிக் கிடைத்தது...
வீட்டிற்குச் சாப்பிட வந்தபோது தெரிந்தது..
சரி இங்கிருக்கும் பொருட்களை ஹாலுக்கு மாற்றி விடுங்கள்.. இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து மதிப்பீடு செய்யும் வரையில் ஒன்றும் செய்ய வேண்டாம்..
சரி..
இருந்த ஒற்றை பெட்ரூம் ஓட்டை பெட்ரூமாக சுவர் வைக்கும் வரை அந்த ரூமை உபயோகிக்க வில்லை..
இன்றும் நண்பர்கள் எங்கே போனாலும் பார்க்கிங் கிடைக்காவிட்டால் கார்த்தி உங்க பெட்ரூம்ல பார்க் பண்ணிக்கலாமான்னு கிண்டலாக் கேட்பார்கள்..
நீதி : இதிலென்ன நீதின்னு கேட்பது புரியுது ஆனாலும் இருக்குங்க...
உங்க பெட்ரூம் ரோடுப்பக்கமா இருந்தா அங்கப் படுக்காதீங்க..
யாருக்குத் தெரியும் எந்தப் பாட்டி பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சிகிட்டிருக்கோ!!!
Interesting episode with good narration!
ReplyDeletehaha....nice one.
ReplyDelete