வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவரை மனிதர்கள் எத்தனை வகையாக இருக்கிறார்கள்?, நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த வித்தியாசமான மனிதரை பற்றி சொல்லுங்கள்?
வாழ்க்கையில் நான் பார்த்த மனிதர்கள் .. ரொம்ப ஜோக்கடிக்கறீங்க மூர்த்தி. ஜெர்க் ஆகாம கேளுங்க. இந்தப் பிரிவினைகள் எல்லாம் தற்காலிகமான பிரிவினைகள். எதாவது ஒரு விஷயம் அல்லது கோணம் எடுத்துகிட்டா அதில தற்காலிகமா மனிதர்களை வசதிக்கேற்ப 2 லிருந்து 10, 15 வகையா பிரிக்கலாம். ஆனால் கோணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
அதை விடக் கொடுமை என்னன்னா, ஒரு மனிதனுக்குள்ளயே பல விதமான மனிதர்கள் இருக்காங்க.. அறிவாளியும் இருக்கான் அப்பாவியும் இருக்கான். தைரியசாலியும் இருக்கான். கோழையும் இருக்கான். அன்பானவனும் இருக்கான். அதிகாரமானவனும் இருக்கான். அதனால் மனிதனை வகைப்படுத்தாம இயல்புகளை, செயல்களை வகைப்படுத்தறது தான் முக்கியம்.
இந்த வித்தியாசங்கள் தான் ஒவ்வொருவருக்கும் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் அளிக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவரே. நாம் அனைவரும் கடவுளின் சிறப்புக் குழந்தைகள்.
இந்தச் சிறப்புகள் நாம் ஒருவர் மற்றவர் மீது மதிப்பும் அன்பும் கொள்வதற்கு காரணமாய் அமைகிறது. எனவே வேறுபட்டோரைக் காணும் பொழுது அன்பு, மரியாதை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்தத் தயங்குதல் கூடாது.
வேறுபாடுகள் நம்மை மற்ற மனிதர்களிடம் இருந்து பிரித்து வைக்க அல்ல. அத்தனை வேறுபாடுகளையும் மனதால் களைந்தால் மட்டுமே உண்மை என்பது தன்னை வெளிப்படுத்தும்.
இது என் மகனுக்காக நான் எழுதியது. வகைகள் தற்காலைகம். நிரந்திரமில்லை. அதனால நிரந்தரமா இங்கச் சொல்ல மாட்டேன்.
மேலே இவ்வளவு சொல்லிட்டு கீழே நான் வித்தியாசமானவராக நினைப்பவர்னு கீழே யாரைச் சொல்ல.
ஆனாலும் நீங்க எல்லாம் வித்தியாசமானவர்னு நினைக்கிற ஒருத்தரா அவருக்கு அளிக்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு ஒரே மூச்சில உண்மையான பதில்களை எழுத முயற்சி செய்யறேன்.
-----------------------------------------------------------------------------------------------
1.மன்றத்தில் குவியும் படைப்புக்களைப் பற்றிய தங்கள் பொதுவான கருத்துக்கள் என்ன? மரபு சார்ந்த படைப்புக்கள் மன்றத்தில் குறைவு என தங்களுக்குத் தோன்றுகிறதா? அவ்வாறெனின் அத்தகைய படைப்புக்களை கொணர நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?2. உங்கள் தமிழறிவு ஊற்றின் மூலம் எது?3. உங்களின் ஸ்டேயிலே தவறு நடந்தால் மட்டும் திருத்துவது தான். நான் அவசரத்தில் செய்த தவறுகளைக் கூட மிக அழகாக எனக்கு சுட்டிக் காட்டுவீர்கள், அடுத்த நிமிடம் எனக்கு ஒரு private message வரும் நிறைய முறை வந்து இருக்கு, நானும் திருத்தி இருக்கேன். ஆனால் ஒரு முறைக்கூட என்னுடைய (யாருடைய) படைப்பையும் நீங்கள் பாராட்டியதில்லை எனக்கு இன்னும் அது வருத்தம் தான். ஏனென்றால் என்னை வழிநடத்தி பாராட்ட நம் மன்றத்தில் பல வாத்தியார்கள் இருக்காங்க, இருந்தாலும் நான் கொட்டி வாங்கிய வாத்தியாரிடம் பாராட்டு வாங்கினால் அதன் பெருமையே தனி தானே. நீங்கள் அந்த மாதிரி ஏன் எல்லாருடைய படைப்பையும் பிடித்து இருந்தால் பாராட்டக்கூடாது?
குவியும் படைப்புகள் எல்லாவற்றையும் பற்றிக் கருத்துக்கள் இல்லை.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
இருப்பதில் இருப்பதை பிரித்துப் பார்க்கிறேன். நல்லதில் நெருடலை சுட்டுகிறேன். மற்றதை அப்படியே விடுகிறேன்.
என்ன சொல்ல வருகிறது என வாசிப்பதில் மனமில்லை.
என்ன சொல்லியாக வேண்டும் என யோசிப்பதில் மனமில்லை.
குவிகிறது பலநூறு, அதில் கவர்கிறது சிறுகூறு,. மரபோ புதுசோ கட்டுகளில் இல்லை வலிமை. சொல்லும் பொருளும் பிணைந்திருகிய கலவை மட்டும் போதும். உலக இயல்பும் இதுதானே.
நான் படித்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் கற்றுக் கொண்டு இருக்கிறேன், எத்தனையெத்தனை கோணங்கள், பாடங்கள் எங்கெங்கெங்கு இருக்கிறதோ தேடிக் கொண்டிருக்கிறேன்.
யாரெல்லாம் என்னைச் சிந்திக்கத் தூண்டுகின்றார்களோ அவர்களிடமிருந்தெல்லாம் கற்கிறேன். யாரெல்லாம் என் சிந்தனைக்கு சவால் விடுகின்றாரோ அவர்களிடமிருந்தெல்லாம் கற்கிறேன். வழமையில் வாழ்க்கை வலிக்கிறது. புதுமையில் மனம் லயிக்கிறது.
வருவதெல்லாம் வரட்டும். தடைகளில்லை, என் வார்த்தைகள் போலியாய் வருவதில்லை. தட்டிக் கொடுக்கம் பெரியவர் மத்தியில் சந்தேகம் கேட்கும் குழந்தை நான்.. குழந்தையிடம் பாராட்டை எதிர்பார்க்கலாமா?
ஒவ்வொருவரிடமும் நான் வியப்பதைக் கற்கிறேன்.. கற்பதை வியக்கிறேன்,
இன்னும் எட்டவேண்டிய தூரம் வெகுதூரம்.
இயல்பாய் என்னை இருக்க விடுங்கள். கேள்விகள் வேண்டாம் ஆய்வுகள் வேண்டாம். சின்னதாய் வாழ்கிறேன், சின்னவை செய்கிறேன், சின்னவள் தானே.. சகித்து விடுங்கள்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டுமா? இது என்ன கொடுமை. இதில் என்ன இருக்கிறது புதுமை.
என்ன புதுசா இருக்கு? ஏக்கத்துடன் சுற்றும் குழந்தையை பல்லாக்கில் ஏற்றி பாதபூஜையா?
தட்டிக் கொடுப்பது பாராட்டுவது எல்லாம் மிகப் பெரிய கலைகள். நான் பெரியவை காணும் பொழுது வியக்க மட்டுமே செய்கிறேன்.
சின்னவள் நான். கற்க வேண்டியது கோடி,.. கற்றுக் கொடுங்கள்.
------------------------------------------------------------------------------------------------
ம்ம்ம் - இவங்க ஒரு வித்தியாசமானவர்தானே. உங்களுக்கு இருக்கலாம்
எனக்கு?
இல்லைங்க....
(மாமனாரே என்று அன்புடன் அழைக்கும் மருமகள் கேள்விக்கு பதில் எழுதச் சங்கடப்படுவார் எனத் தெரியும். விவாதங்கள், தனிமனித ஆசாபாசங்கள் இதெல்லாம் அவருக்குச் சங்கடம் ஏற்படுத்தும். அவர் பதில் எழுதினால் என்ன எண்ணங்கள் அதில் வெளிப்படும் என்பதை என் நடையில் எழுதி இருக்கிறேன். அவர் நடையில் எழுதினால் --
அவர் இதற்காக கோபப்படமாட்டார் எனத் திடமாக நம்புகிறேன். மூர்த்தி நீங்களும் கோவப்படாதீங்க. நான் அதிகப்பிரசங்கித்தனம் பண்ணறேன்னு. )
.
No comments:
Post a Comment