Tuesday, December 8, 2009

தாமரை பதில்கள் - 1

உங்களிடம் விவாதம் பண்ணும் பொழுது எதிர்சாராரை எப்படி அணுகுவீர்கள்?
அப்படி உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற்றதும் தோல்வி அடைந்ததும் எதேனும் உள்ளதா?

எதிர்சாராரா? என்ன நம்பி, அரசியல் கட்சியா நடத்துகிறோம், எதிரியலார் என்று பார்ப்பதற்கு? ஒரு விவாதம்னா நம்ம கருத்து.. மாற்று கருத்து என்றுதான் இருக்கே தவிர எதிராளிகள் என்று யாரும் கிடையாது.

வாதத்தில் எனக்கு எதிராக வாதாடுகிறார்கள் என்று நான் பார்ப்பதில்லை. ஒரு கருத்தைப் பற்றிய நம்முடைய கருத்தைச் சொல்கிறோம். அடுத்தவர் அதற்கு மாற்றான கருத்துகளை வைக்கிறார்கள்.

அவர்களின் கருத்தை பரிசீலனையே செய்து பார்க்காமல் அடுத்தக் கருத்தை வைப்பதை நான் கொஞ்சம் தூரத்திலியே வைத்திருக்கிறேன்.

பலசமயம் நாம பாக்கிற கோணம் பலருக்கு குதர்க்கமா படுது, அப்படி ஒரு கோணம் இருக்குதுங்கறதையே மறுப்பாங்க. அதற்காக அவர்களின் கோணத்திலும் நாம பார்க்காம இருக்க முடியாது.

பாரதியோ, திருவள்ளுவரோ என் காலத்தில இருந்தாலும் மனசுக்குப் பட்டதைச் டக்குன்னு சொல்லுவேன்.. அவர்கிட்ட எப்படிச் சொல்றது அப்படின்னு மென்னு முழுங்க மாட்டேன்..

அவர் மனம் கோணக் கூடாது என்கிற அணுகுமுறை சாதாரண மக்களுக்குச் சரிதான். ஆனால் ஒரு பொது மேடையில் அப்படிப்பட்ட பலகீனம் உள்ளவர்கள் காயப்பட்டுக் கொண்டேதான் இருப்பாங்க. நாம என்னதான் மென்மையாச் சொன்னாலும் அதெப்படிச் சொல்லப் போச்சுன்னு தான் கேட்பாங்க. நா

ன் கடைபிடிப்பது உரலிலே தலையை விட்ட பிறகு உலக்கைக்கு பயந்தா முடியுமா? . பல சமயங்களில் நான் எழுதுவது குறிப்பிட்ட ஒன்றிரண்டு பேருக்கு குத்தலா பட்டிருக்கும். ஆனால் விளக்கம் கேட்டவர்கள் எல்லாம் சந்தோஷமாத்தான் இருக்காங்க. சுருண்டு படுத்த தொட்டாற்சிணுங்கிகளை ஒண்ணுமே செய்யமுடியாது..


சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து அதை மாற்ற யாராலும் முடியாது.
.

கருத்தைப் பற்றியே வாதம் இருக்கும் பட்சத்தில தனிமனிதத் தாக்குதலா சிலர் எடுத்துக்கறது உண்டு. தனிமனிதத் தாக்குதலை கருத்துவிவாதங்களில் கொண்டு வருவதும் உண்டு..

பல பெரிய பண்டிதர்கள் எதிராளி சுண்டைக்காய் என்று எண்ணமிட்டு அகந்தையாய் இருந்து எதைச் சொல்லியும் ஜெயித்துவிடலாம் என்று இருப்பதுண்டு. அதே மாதிரி எதிராளி பெரிய ஆள் நாம ஜாக்கிரதையாய் இருக்கணும் அப்படின்னு பதுங்கிப் பதுங்கி வாதாடறவங்களும் உண்டு..

ஆனா இந்த ஆளுங்களையும் வாதத்தையும் பிரிக்கணுங்க.. யார் சொன்னாங்க அப்படீங்கறது முக்கியமில்லை. என்ன சொன்னாங்க என்பதுதான் முக்கியம்.

என்னைப் பொருத்தவரை எதிராளியை நானாகவே பார்த்துக்கறேன். இன்னொரு தாமரை.. இதில ஒரு வசதி என்னன்னா அடுத்து நீங்க என்ன சொல்லப் போறீங்க என்பதை ஏறத்தாழ யோசிச்சு வச்சிக்கலாம். என்னோட நானே வாதாடும் போது அடுத்தவங்களை இகழ்வது.. கண்மூடித்தனமா பேசறது இப்படி பல விஷயங்கள் காணாமப் போயிடும். கருத்து மட்டுமே மனசில ஓடும்.

அதனால பல சமயம் நான் சொல்றதில என்ன தப்பு இருக்கு. எது சரின்னு நானே எடுத்துச் சொல்லவும் முடியும்.

மன்றத்தில நான் அதிகம் விவாதிக்கிறது இல்லை. விவாதிக்க நேரமும் என்னிடம் குறைவு.. நான் விவாதத்தில் மன்றத்தில் இதுவரை ஜெயிக்கலை.. காரணம் என் கோணத்தை காட்டி ஒரு ஸ்ட்ராங்கான பாயிண்டைப் போட்டா அதுக்கு பின்னால விவாதம் நின்னு போயிருது, மன்றத்தில் பல விவாதங்கள் அந்திரத்தில தொங்குதே தவிர யாரும் தங்களோட இருப்பைக் கருத்தை விட்டுத் தர்ர மாதிரி இல்லை. அதனால விவாதங்கள் சும்மா ஒரு மேடைப்பேச்சு மாதிரி பலனில்லாம தான் இருக்கு. உன் கருத்து உனக்கு என் கருத்து எனக்கு என்னும் பொழுது விவாதிச்சு என்ன பிரயோசனம்?

இருந்தாலும் சில திரிகளில் விவாதங்கள் ஆரம்பிச்சிருது. இப்படியாகப்பட்ட நேரத்தில விவாதங்கள்ல நான் தோற்றுதான் போகிறேன்.. ஆனால் அது கருத்துக்களால் இல்லை என்பது எனக்கு நல்லாவே தெரியும்.. ஏன்னா என் கருத்துக்கள் எங்கோ மூலையில கிடக்க, அதுவேறுவகையான விவாதமா மாறி இருக்கும்.( நிழல் படக் கவிதையில் பாட்டில் - போத்தல் என ஆரம்பிச்சப்ப நடந்தது)

முழுமையா நடந்த ஒரு விவாதம் நம்பிகோபாலனின் கவிதையில நடந்தது ஆதியோட.. கவனிச்சிருப்பீங்க.. உங்க கவிதையை ஒரு 100 முறையாவது படிச்சு ஒவ்வொரு வார்த்தையையும் அணு அணுவாகப் பார்த்துப் பெரிய கதையே சொல்லி இருப்பேன். சின்ன விஷயம்தான் எவ்வளவு விஷயங்கள் பின்னாடி..எவ்வளவு சிந்தனைகள்.. அந்த அளவிற்கு ஆழமாப் போய் மனம் கோணாம, எதையும் பர்சனலா எடுத்துக்காம கருத்தை கருத்தா மட்டுமே பார்க்கிற விவாதங்கள் இல்லை..

இதைச் சரி செய்ய ஒரு வழி இருக்கு.. விவாதத்திற்கு ஒரு நடத்துனர் இருக்கணும். அவர் விவாதத்தோட ட்ரெண்டை சுருக்கி, ஒரு 10 பதிவுகளுக்கு ஒரு முறை இந்தப் பக்கம் என்ன பிளஸ், அந்தப் பக்கம் என்ன பிள்ஸ், இந்தப் பக்கம் என்ன மைனஸ் அந்தப் பக்கம் என்ன மைனஸ்,, விவாதத் தராசு எப்படி இருக்குண்ணு சொல்லணும். ஆனால் அவர் விவாதம் செய்யக் கூடாது. அதை விவாதிக்கிறவர்கள் ஒத்துக்கணும்.. இல்லைன்னா விவாதம் செய்து பிரயோசனமே இல்லை...

என் வாழ்வில் வெற்றிபெற்றது அப்படின்னா பல பார்வையாளர்களோட மனசை..

தோற்றது என்று நான் எதையுமே நினைக்கிறதில்லை, ஏன்னா என் பார்வைப்படி நான் என்னோடதானே விவாதிக்கிறேன். அப்ப நான் தோத்தா நான் தானே ஜெயித்தேன்.!!!

No comments:

Post a Comment