Monday, December 21, 2009

தாமரை பதில்கள்

உங்களது நீண்ட காலச் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? (சாதித்தாகவும் இருக்கலாம், இனி சாதிக்கப்போவதாகவும் இருக்கலாம்)

இது வரை செய்த நீண்ட நாள் சாதனை : உயிரோடிருப்பது...

இனிமேல் செய்ய எண்ணிக் கொண்டிருக்கும் சாதனை..

இன்னும் உருவம் கிடைக்கலீங்க. ஆனால் எதையாவது செய்யணும்னு ஆசை இருக்கு..

உலகத்தில் இது வரைக்கும் கண்டுபிடிச்ச விளையாட்டுச் சாதனங்களில் சிறந்தது எது - பந்து!

உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண்ட்டு பிடிப்புகளில் முக்கியமானவை எவை?

நெருப்பு உண்டாக்குதல், சக்கரம், மின்சாரம்..

இப்படிச் சிந்திக்கிற மனசு என்னுடையது.. மிகப் பெரிய கண்டுபிடிப்பா இருக்கட்டும் மனுஷனுக்கு அதனால் எவ்வளவு இலாபம்னு பாக்கணுமில்லையா!!!

மனிதர்களை தொழிலும் சமுதாய நோக்கும் என்ற பகுதியில் நாலாப் பிரிச்சி இருப்பேன்..

1, மனித இனத்தை உலகில் பல்கிப் பெருகி காத்துக் கொண்டிருப்பவர்கள்
2. மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக, அவனது ஆயுளைக் கூட்ட, அண்ட சராசரிங்களின் புதிரை அவிழ்க்க, சாவை வெல்ல இப்படி பல நோக்கத்துடன் ஆராயும் சிலர்..
3. இந்த இரண்டு சிந்தனையும் இல்லாமல் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்னு இருக்கறவங்க
4. தான் மட்டும் தன்னிஷ்டப்படி வாழணும்னு நினைக்கறவங்க...

என்னைப் பொருத்தவரை நான் முதலிரண்டு வகைகளில் ஒருவனாக வாழ ஆசைப்படுகிறேன்..

பெருசா ஒண்ணுமில்லங்க.. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம நிறைய கத்துக்கறோம்னு நினைக்கிறோம். ஆனால் நிஜமா கத்துக்கறாமான்னு யோசிச்சுப் பார்த்தேன்..

உதாரணமா இன்னிக்கு திடீர்னு தனியாக் காட்டில எதுவுமில்லாம விட்டுட்டா அடிப்படை விஷயமான நெருப்பை உண்டாக்கக் கூடத் தெரியாது,, ஆதி மனுஷன் நிலைமைதான். சரிப்பா நமக்கு என்ன தெரியும்? சிந்திச்சுப் பார்த்தா தியரியா பல விஷயங்கள் தெரிஞ்சாலும் பிராக்டிகலா நாம செய்யறது ஒரு சின்ன மாறுதல்.. அதையே திருப்பித் திருப்பிச் செய்யறோம்..

ஆக ஒவ்வொரு மனிதனும் விரும்பியோ விரும்பாமலோ சின்ன மாறுதலை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறான்..

ஆனால் கொஞ்சம் விலகி நின்னு சிந்திக்கும் போது அந்த முதலாம் படி நிலை மனிதன் இரண்டாம் படி நிலைக்கு உயருகிறான்.. அவன் செய்யற அந்த மாற்றம் மனித குலத்தை ஒரு மில்லி மீட்டர் உயர்த்தி விடுகிறது..

இப்படி மனித சிந்தனைகளில் ஓரு மாற்றத்தைக் கொண்டு வரணும்னு எனக்கு ஆசை.. பலருடைய சிந்தனைகள், ஒருமுகப் படுத்தப் படும்பொழுது உயர்வு எளிதில் வசப்படும். நாடு, மொழி, இனம், மதம் இவையெல்லாம் நாமாய் போட்டுக் கொண்ட கற்பனைக் கோடுகள். அந்தக் கற்பனைக் கோடுகளில் சிக்கிக் கொள்ளாமல் மனதை மனிதனை நோக்கித் திரும்ப வைக்கணும்.. சிலர் மனதையாவது.. இது என் ஆசை...

எல்லாமும் சரியும் அல்ல,, எல்லாமும் தவறுமல்ல.. ஏனென்றால் அதைப்பற்றி நமக்கு முழுதாகத் தெரியாது.

புதியதோர் உலகம் செய்வோம்... என் கையொப்பமாக இருந்தது, அதன் பிண்ணனி இதுதான்.. மனித சிந்தனையை மாற்றணும்.

எல்லைக் கோடுகளை அழித்து மனிதன் மனித பயமில்லாமல் வாழணும்...

.

No comments:

Post a Comment