Tuesday, December 8, 2009

படிச்சதும் கடிச்சதும் - 2

படிச்சது : பொதுவாகவே வாயை மூடிட்டு இருக்கறது நல்லது.. முக்கியமா நீங்க தண்ணீரில் மூழ்கிட்டு இருக்கும்போது..!

கடிச்சது : ஆமாம் வாயைத் திறக்காம எப்படி தண்ணியில முழுகறது?
படிச்சது : ஒருக்காலும் உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் இந்த நிலையை அடைய என்னென்ன அவமானங்களை சந்திக்கவேண்டியிருந்ததோ..?


கடிச்சது : அதை கேட்டுச் சந்தோஷப்படவாவது ஒப்பிடணும் போல இருக்கே!!!

படிச்சது : ஒரு வேலையை மகா சொதப்பலா செய்யறதிலக்கூட ஒரு நன்மை இருக்கு.. மறுபடி உங்ககிட்ட அதே வேலையைத்தர யாருக்கும் தைரியம் வராது..!


கடிச்சது : அதுக்குப் பதிலா வேலையே செய்யாம இருந்தா எந்த வேலையையுமே யாருமே குடுக்க மாட்டாங்க இல்லியா?
படிச்சது :சமரசம் : நமக்கு கிடைத்திருப்பதே மற்றவர்களுக்கு கிடைத்திருப்பதைவிட அதிகம் என்று எல்லோரையும் நம்பவைக்கும் கலை..!


கடிச்சது :அடி உதையைக் கூடவா??
படிச்சது : Set..! என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 192 அர்த்தங்கள் உண்டாம்..!

கடிச்சது : எத்தனை இருந்து என்ன பிரயோசனம். நமக்குதான் ஒண்ணும் Set ஆகமாட்டேங்குதே!!!
படிச்சது : கொசுக்களை நீல நிறம் அதிகமாகக் கவருமாம்..!

கடிச்சது : அப்புறம் பகல்ல ஏன் வானத்தை நோக்கிப் பறக்கறது இல்லை?

படிச்சது : கங்காரு விலங்குகளால் பின்புறமாக நடக்க இயலாதாம்..!

அப்போ முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்னு சொல்றவங்களை கங்காருன்னு சொல்லலாம்னு சொல்லுங்க.

அமெரிக்கர்கள், தினமும் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிட்சாவை தின்று தீர்க்கிறார்களாம்..
!

ஒரு ஏக்கர் 100 செண்ட்,. ஒரு செண்ட் 100 சதுர மீட்டர். அதாவது 7 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர். ஒரு சதுர மீட்டர் பிஸாவை 16 பேர் சாப்பிடறாங்க அப்படின்னு வச்சுகிட்டா அமெரிக்காவில் 1 கோடியே25 லட்சம் பேர் ஒரு நாளைக்கு பிஸா சாப்பிடறாங்க. அமெரிக்காவின் ஜனத்தொகை 30 கோடி. அதாவது 4 சதவிகிதம் பேர். கொஞ்சம் கொறைச்சலாதான் இருக்கு.
நம்ம நாட்டுல இவ்வளவு பேர் சாப்பிடறதே இல்லை.
படிச்சது : சுதந்திர தேவி (அமெரிக்கா) சிலையின் சுட்டுவிரல் எட்டு அடி நீளமுள்ளது
.

கடிச்சது : எட்டுன தூரம் வரை சுட்டும் விரல்னு சொல்றாங்களோ??

படிச்சது : அடகாமா பாலைவன (சிலி) வரலாற்றில் மழையே இதுவரை பெய்ததில்லை.

கடிச்சது : அடராமா
படிச்சது : உலகில் வாழும் மனிதர்களும், கோழிகளும் சம எண்ணிக்கை கொண்டவர்கள். ( புரட்டாசியில் கோழிகள் தொகை அதிகரிக்கக்கூடும்..!)

கடிச்சது : ஆளுக்கொரு கோழி வச்சு ஆண்டவன் படைச்சான்னு சொல்லுங்கோ!!!
(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான் - அப்போ
யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்)


படிச்சது : ஒருவகை ஹம்மிங் பறவையின் எடை நம் 5 ரூபாய் நாணயத்தைவிட குறைவு.

கடிச்சது : புதுசா? பழசா??

இல்லை 5 ரூபா மாதிரியே ஹம்மிங் பறவையும் (தேன்சிட்டு) இளைச்சுகிட்டே போகுதா?
அப்போ சுத்தத் தேன் எடையைக் குறைக்க உதவும்னு ஒரு அழகுக் குறிப்பு போட்டுடலாமே!!

படிச்சது : சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸில், எந்த சூதாட்ட விடுதியிலும் கடிகாரம் இருக்காது..!


கடிச்சது : நாம கடிகாரம் கட்டிகிட்டு சூதாட்ட விடுதிக்குள்ளப் போனா விடமாட்டாங்களா? அடப் பாவமே! நான் உள்ளயே அடகு வச்சுக்கற வசதி இருக்கும்னு நெனச்சேன்.
படிச்சது :அகராதியில் ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் தப்பா இருந்தா யாருக்குத் தெரியும்..?

கடிச்சது : படிக்கிறவங்களுக்கு.

படிச்சது : நாய்களுக்கு பிடித்த சுவைன்னு விளம்பரம் செய்யறாங்களே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க..?

கடிச்சது : நாய்க்கு பிஸ்கட் போட்டு பிராக்கெட் பண்ணும் திருடங்கதான் சொன்னாங்களாம்.

படிச்சது : அரளிக்கொட்டையை அரைச்சுக் குடிச்சா செத்துப்போயிடுவோம்ன்னு உலகுக்கு உணர்த்திய தியாகிக்கு அப்படி நடக்கும்ன்னு முன்னாடியே தெரியுமா..? இல்லே பசிக்கு தின்னுருப்பாரா..?

கடிச்சது : அது ஒரு மாமியாரோ மருமகளோ சொன்னதா இருக்கலாம் இல்லியா! தியாகி மட்டும் இல்லை துரோகியும் கண்டுபிடிப்புகளைச் செய்யலாம். ஹி ஹி..

படிச்சது : சோதிடர் லாட்டரி வென்றார்.. / குதிரைப்பந்தயத்தில் வென்றார்ன்னு ஏன் தகவலே வரமாட்டுது..?

கடிச்சது : அவங்களுக்குக் கிடைக்காதுங்கறது அவங்க ஜாதகத்தில இருக்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ?? ஏன்னா இந்த லாட்டரியை வெல்வேன் அந்த பதக்கத்தை வெல்வேன் அந்த பந்தயத்தை வெல்வேன் அப்படின்னு அவங்க அறிக்கை கூட விடறதில்லையே!!!

...

No comments:

Post a Comment