Monday, December 21, 2009

தாமரை பதில்கள்

வீட்டில் நல்ல குடும்பதலைவராக.. அனிருத் ஸ்வேதாக்கு நல்ல அப்பாவாக உங்கள் பெற்றோருக்கு நல்ல மகனாக, மருமகனாக எங்களை போன்ற தங்கைகளுக்கு அண்ணனாக மன்றத்தில் ஆலோசகராக என்று எவ்வளவோ பொறுப்புக்கள்.... அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ பணிச்சுமைகளுக்கு மத்தியிலும்


எப்படி உங்களுக்கு மட்டும் எப்பிடி டென்ஷனே வரமாட்டேங்குது......???

டைம் இல்லை... மறந்துட்டேன் இது போன்ற பதில்களை இதுவரை நான் உங்களிடம் கேட்டதே இல்லை.....???

எப்படின்னா எல்லாத்தையும் நினைவில வச்சிருகீங்க......??


ஒரு சன் பிறந்த உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்தாச்சு அப்புறம் எப்படி டென்சன் வரும்?


என்னவோ பெரிய தலைவர் ரேஞ்ஜூக்கு கேள்வி கேட்டிருக்கீங்க. சிம்பிளா பதில் சொல்லவா!


மொதல்ல ஒரு முறை வாத்தியார் பிரதமரானால் திரியில் சொல்லி இருப்பேன்...


ஒரு முடிவை எடுத்தால் 50 சதவிகிதம் தவறாகப் போவதற்கு வாய்ப்புண்டு.. ஆனால் முடிவெடுக்காமலேயே இருந்தால் 100 சதவிகிதம் அது தவறாய்த்தான் போய் முடியும்..


ஒரு வேலை வரும்பொழுதே அதற்கான முக்கியத்துவமும் குறிக்கப் பட்டு விடுகிறது.. நம்மில் பல பேர் என்று முடிக்க வேண்டும் என்று பார்க்கிறோம். நான் என்று ஆரம்பிக்க வேண்டும் என்று பார்க்கிறேன்.



உதாரணமா ரீஸண்டா பழனிக்கு போனோம். முக்கியமாய் செய்ய வேண்டிய விஷயம் 3.

1. ஸ்வேதாவிற்கு மொட்டை..

2. உச்சி கால மூலவர் அபிஷேகம்,

3. தங்கத் தேர் இழுத்தல்.



இதில் டைம் பௌண்டட் அப்படின்னு பார்த்தா உச்சி கால முலவர் அபிஷேகம். அதை மிஸ் பண்ணாட்டி வேற எதையும் மிஸ் பண்ண மாட்டோம்.. ஆக

பழனியில் மலை மேல் இருக்க வேண்டிய நேரம் 11:30.

மலை ஏற 45 நிமிடம்.

சாப்பிட ஒரு 45 நிமிடம்

மொட்டை அடித்து குளிக்க 1:00 மணி நேரம்

ஆக 9:00 மணிக்கு பழனி எல்லையில் இருக்க வேண்டும்.

9 மணிக்கு பழனியில் இருக்கணும் என்றால்

ஈரோட்டில் 7:00 மணிக்கு கிளம்பணும்.

மொத்தம் 6 பேர் கிளம்ப, இரண்டு பேர் ஒரே சமயத்தில் தயார் ஆகின்றனர் என்றால் 1:30 மணி நேரம் - 5:30.

ஒரு அரை மணி நேரம் முன்னெச்சரிக்கையாகச் சேர்க்க 5:00

5:00 மணிக்கு எழுந்தால் எல்லாம் எளிதாக முடியும். இப்போ பாருங்கள் என் கையில் இருப்பது தெளிவான ஷெட்யூல்.. உச்சிகாலப் பூஜைக்கும்

தங்கத் தேர் இழுப்பிற்கும் மத்தியில் உள்ள காலத்தில் ஓன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்தது தான். அந்த சமயத்தை மலையைச் சுற்றிப் பார்த்தல் நீண்ட நாளாக பேசாத நண்பர்கலுடன் பேசுதல் என் அப்போதைக்கு உப்பயோகமாய் செலவு செய்யலாம். இன்னும் எதாவது செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பிளான் செய்யலாம்..


பெரிய காரியங்களுக்கு இடையில் இப்படிச் சிறிய காரியங்களை நுழைக்கத் தெரிந்தால்.. மிக அதிகமாகச் சாதிக்கலாம்


ஏனென்றால் எந்த ஒரு காரியமும் நம் தனி ஒருவரால் செய்யப்படுவது இல்லை.எல்லா வேலைகளையும் நாமே செய்யப் போவது இல்லை.


எந்த காரியம் நடக்கிறதோ அதன் மீது உழைப்பவர் கவனம் பதிகிறது. எந்தக் காரியம் நடக்கவில்லையோ அதன் மீது சோம்பேறிகள், முதலாளிகள் கவனம் பதிகிறது..


ஒவ்வொரு வேலைக்கும், முக்கியத்துவம்(இம்பார்டன்ஸ்) அவசரம்(எமர்ஜென்ஸி) என்று இரு அளவுகோள்கள் உண்டு..


முக்கியமான வேலைகளை நிதானமாகவும், முக்கியமில்லாத வேலைகளை அவசரமாகவும் செய்தால் போதும். சில வேலைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் பிரச்சனை இல்லை..


ஒவ்வொரு நாள் விழித்த உடனும் அன்று முக்கியமாய் என்ன செய்தல் வேண்டும் என நினைவு படுத்த்க் கொண்டாலே போதும்.. அது நடை பெறுதலின் பொருட்டு மற்ற வேலைகளைச் சுருக்கியோ இல்லை மாற்றியோ செய்வதால் செய்ய வேண்டியதை நிம்மதியாய் செய்யலாம்..


இரண்டாவது எடுக்கும் முடிவில் அடமாய் நிற்கக் கூடாது. ஒரு முடிவு எடுத்து காரியம் நடந்து கொண்டிருக்கும் போது வரும் பிரச்சனைகளை, காரியம் கெட்டு விடும் என்று தள்ளி வைத்துவிடக் கூடாது.. சற்று அடிப்படையில் சென்று ஆராய வேண்டும். தேவைப்பட்டால் முடிவை மாற்ற நேரிடலாம்.. கவலைப் பட்டுக் கொண்டே இருந்து காலத்தை வீணடிப்பவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்..


இப்போது இன்னும் கொஞ்சம் பார்ப்போம்....


சில திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதாகவும் இருக்கும். பல காரியங்களை ஒரேசமயத்தில் செய்தல்.. மூளையைக் கவலை வலையில் சிக்காமல் தெளிவாகச் சிந்திக்க வைத்தல் இப்படி...


சில சின்ன தோல்விகள் பலரைத் துவண்டு போக வைத்து விடுகிறது. எதோ அவர்களுக்கு திறமை இல்லாததால் தான் தோற்றுவிட்டதாக எண்ணிக் கலங்கி மனம் உடைந்து வருந்தி தங்களை தாங்களே திட்டிக் கொள்கிறார்கள்..


தோல்வி என்பது மிக்ச் சகஜமான ஒன்று.. வெற்றி என்பதும் அது போலத்தான். அதெல்லாம் வரும் போகும்.. இதில் ஜெயித்தால் இது .. இதில் ஜெயித்தால் இது என மனகோட்டை கட்டுவது போல இதில் தோற்றால் இது.. இதில் தோற்றால் இது என இன்னொரு ரூட்டும் மனதில் இருன்ந்துகிட்டே இருக்கணும். ஸ்டாப் லாஸ் என்பது பங்கு வர்த்தகத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒரு கொள்கை..


நம்மில் பலபேருக்கு கான்ஸண்ட்ரேஷன் முக்கியம்.. அதனால் ஒரு நேரத்தில் ஒரு வேலைக்கு மேல் அதிகம் செய்வதில்லை. ஆனால் நம்மால் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும். முதலில் முக்கியமில்லா சில வேலைகளைச் சேர்த்து செய்யப் பழக வேண்டும். ஒரு வேலை செய்யும் பொழுது ஒரு 10 நிமிடம் சிந்தித்தால் அது சம்பந்தமான இன்னும் 4 வேலைகளை முடித்து விடலாம்.. இப்ப பாருங்களேன்,, மார்ச் 15 க்குள் படைப்புகளை பரிந்துரை செய்ய வேண்டும்.. இன்னிக்கு 10 ஆம் தேதி.. பட படன்னு வேலையைப் பார்க்கலைன்னா எப்படின்னு ஒரு கொட்டு வச்சம்னா ஆஹா தாமரை எதையும் மறக்கவே மாட்டார்னு வேலையைச் சட்டுன்னு ஆரம்பிச்சிடுவாங்க.


அப்புறம் இன்னொன்று நான் கடைபிடிப்பது.. மற்றவரை நம்புவது. அதே சமயம் கண்மூடித்தனமாய் நம்பாமல் இருப்பது,


ஒரு விருந்துக்கு 100 பேரை அழைத்திருப்போம்.. இருவர் வரவில்லை என்றதும் அவர்களைப் பற்றிப் பேசி 98 பேரின் நேரத்தை வேஸ்ட் செய்வோம். நம் நேரத்தைப் போலவே மத்தவங்க நேரமும் பொன்னானது இல்லிங்களா? அதனால அந்த 2 பேரை அப்புறமா விசாரிச்சுக்கலாம்.. 98 பேரை சந்தோஷப் படுத்தலாம்..


குடும்பம்.. வேலை.. மன்றம்.. நட்புகள்.. எப்படி பேலன்ஸ் செய்வது? எதுக்கு பேலன்ஸ் பண்ணனும்.. மலர் வேலை இருக்கு அப்புறம் பேசலாம்னா நீங்க என்ன விழுந்து புரண்டு அழப் போறீங்களா என்ன? அதே மாதிரிதான்.. எல்லோரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள்.. போன மின்னிதழ் வேலை நடந்த பொழுது ஸ்வேதாவும் அனிருத்துமே அட்ஜஸ்ட் பண்ணிக்கலையா? அப்பா நம்மலை அவாய்ட் பண்ணலை. அப்பாவுக்கு முக்கியமான வேலை.. அப்படிங்கற நம்பிக்கை தானே காரணம். அந்த நம்பிக்கை எப்ப வரும்.. அவங்களை நாம் வேணும்னே அவாய்ட் பண்ணாம இவ்வளவு நாள் இருக்கறதினால..


ஆக..


இது ஒரு சின்ன வாழ்க்கை முறை. ஒரு நாள் மட்டும் கடை பிடிச்சிட்டு விட்டுட முடியாது.. எல்லாம் மனசுக்குள் இருக்கு, வெளிய காட்டினா போதும்..


10 நிமிஷம் ஃபிரீயா இருந்தா நீங்க படம் கலெக்ட் பண்ணி ஒரு பதிவு போடுற மாதிரி..


5 நிமிஷம் ஃபிரீ டைம் கிடைச்சா அதை ஒருத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பார்த்து தர்ர மாதிரி.


கேப்ல காரியம் சாதிச்சிக்கிறது நல்லது தானே!

No comments:

Post a Comment