Thursday, December 10, 2009

இராவணன் நல்லவனா? பாகம் 2

சூர்ப்பனைகையின் மூக்கறுந்த கோபமே முழுமுதற்காரணம்.. மோகம் என்று நான் சொல்லவில்லை நண்பரே.... கதை சொல்கிறதே... ஒரு சகோதரியின் மூக்கும் முலையும் அறுபட்டால் அறுத்தவன் மனைவியை தூக்கிச் செல்லும் பண்புடையவன் நல்லவனா? ஆச்சரியமாயிருக்கிறது உங்கள் பதில்...இராவணன் மகள் சீதை என்று சொல்ல வந்த நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை.. மகளை இப்படியா கடத்திச் செல்வார்கள்... நல்லவர்கள்/???
கதை என்று சொல்லும்போதே அதை ஒதுக்கி விட்டேன். தன் தங்கையை ஒருவன் இம்சித்தான். ராவணன் ஏற்கெனவே சில போர்களில் அடிபட்டவன். வாலியிடம்.. கார்த்தவீரியனிடம் (இது ராமாயணத்தில் இல்லை பாகவததில்)..
சிந்தித்து இருக்கலாம்.. தான் படும் வேதனையை ராமன் பட வேண்டும் என அவன் மனைவியை அபகரித்து இருக்கலாம்.. ராவணனின் எண்ணம் நமக்குத் தெரியாது..

சீதையைக் கவர்ந்த பின் ராவணன் மண்டோதரி நிம்மதியாய் வாழ்ந்திருக்கின்றனர் என்பது மிகச் சரிதான்... பொதுவாக அரசர்களுக்கு மனைவி என்ற ஒருத்து நிரந்தரமாகவும் keep தற்காலிகமாகவும் இருப்பார்கள்... உதா: தசரதன்

ஒரு பெண்ணை அடையத் துடிக்கும் ஒருவன் அவள் கைக்கு அருகில் இருக்க அடைய முடியாமல் இருக்க நிம்மதியாய் எப்படி உறங்குவான்???

பெண்களையும் பசுக்களையும் கவர்வதும் பீஷ்மர் மூன்று பெண்களைக் கவர்ந்ததும் அரச குணமென்று வைத்துக் கொள்கிறீர்கள்???? ஆக நாட்டை வென்று பெண்களைக் கவர்வது குற்றமல்ல என்று ஒத்துக் கொள்கிறீர்கள்??
அதை நான் ஒத்துக் கொள்ளவில்லை.. அந்தக்காலச் சூழ்நிலையில் மக்கள் அதை தவறாக எண்ணவில்லை என்று உதாரணம் சொன்னேன்.

சீதைக்கு அக்னி பரீட்சை செய்ததையும் தனியொருவன் ஏசலும் கெளரவமில்லை நண்பரே!! சந்தேகம். இதை முதலிலேயே சொல்லியிருக்கிறேன்... கெளரவம் பார்க்கும் அரசன் வேறொரிவன் ஏசல் கண்டு மனைவியை காட்டுக்கனுப்புவானா??

சீதையை விடுவித்து பின் காட்டுக்கனுப்பியதுதான் கௌரவம் என்று எண்ண வைக்கிறது.. ராமன் தேவர்களை நம்புபவன் என்றால் அக்னி பரிசுத்தமானவள் என்று சாட்சியளித்த பெண்ணை ஏன் காட்டிற்கு அனுப்பவேண்டும்? அவள் ராணியென்றாலும் அயோத்தியின் குடிமகள்தானே. குற்றமற்ற குடிமகளை விசாரணையின்றி நாடு கடத்தியதற்குக் காரணம் கௌரவமா? இல்லை வேறு ஏதாவதா?


ராவணனை ஏன் துவந்த யுத்தத்திற்கு அழைக்கவில்லை?
கதாசிரியரிடம் கேட்கவேண்டிய கேள்வி..
ஆமாம்.

ராமன் சீதையைக் கைவிட்டு கானகம் அனுப்பியது இதை நிரூபிக்கிறது. ஆக சீதையை காப்பாற்ற அல்ல,,,,,, பின் எதற்கு அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையிடம் மோதிரம் காண்பிக்கவேண்டும்? எதற்காக சீதையை மீட்டு அயோத்திக்கு அழைத்துச் செல்லவேண்டும்?
பாவம் வானரங்கள். சீதையை அசோக வனத்தில் விட்டிருந்தால் ராமன் மனைவியை ராவணன் அபகரித்தான் என்ற நிந்தனை.. போர் முடிந்த வுடன் நிராகரித்திருந்தால் கற்புள்ள சீதை ராமன் கைவிட்டான் என்ற நிந்தனை.. அயோத்தியில் கைவிட்டான்.. குடிமக்களின் மனம் தன்னை சற்று குறைத்து நினைத்து விட்டதே என்ற கௌரவப் பிரச்சனை.. ராமன் மழைக்காலம் முழுதும் சீதையைத் தேடாமல் இருந்திருக்கிறான்.. அதாவது ஒரு 4 மாத காலம். சரியா?

தசரதன், ஜனகன், கோசல நாடு, கேகய நாடு என் அனைத்து நாடுகளும் அமைதியாக இருந்திருக்கின்றன. என்று கூறும்போது ஏன் இந்த காவியமே படைக்கவேண்டும்? ஏன் முனிவர்கள் விஷ்ணுவிடம் முறையிடவேண்டும்?? கதாசிரியரிடம் கேட்கவேண்டிய கேள்வி..
ஆமாம்.

ஒருவன் எப்பொழுது தன்னிலை மாறுகிறானோ அப்போதுதான்அவன் அடுத்தவனிடம் தோற்றவனாகிறான். தன்னிலை மாறாமல் இறந்துவிட்டால்...... அப்படியென்றால் இறந்துபோனவன் சேனையை தோற்ற சேனை யென்று அழைப்பீர்களா? இல்லை வேறு எப்படி அழைப்பீர்கள்? இந்த கேள்விக்கு விடை தரவில்லையே நீங்கள்?

தலைவன் இறந்தபின் ஓடிப்போனால் தோற்ற சேனை.. மேலும் போரிட்டால்.. தோற்ற சேனையா அது??

பாகவதம் நான் படித்ததில்லை. ஆயினும் வால்மீகி ராமாயணத்திலேயே இது சொல்லப்பட்டிருக்கிறது.. ஒருவேளை நான் படித்த நூல் இரண்டையும் கலந்து வந்திருக்கலாம்.
பத்து அவதாரம் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ராமன் விஷ்ணு அவதாரம் என்பது மட்டுமே உள்ளது.

நாசம் விளைவித்த ஒருவனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி செய்தான் ராவணன் எனும் நீங்கள் தக்க தண்டனை கொடுக்க மாட்டீர்கள் அப்படித்தானே!! வாலிலே தீக் கொளுத்துவது இராவணக் குல தர்மப்படி அரசு சட்டப்படி தண்டனையோ?
தன் அரச்சபையில் இருந்த விபீஷணனின் கருத்தை மதித்து அனுமனைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டான் ராவணன். என்ன அரச மாண்பு பார்த்தீர்களா? பல அரசர்கள் மந்திரிகள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதே இல்லையே

தூதுவன் என்பவன் தூதிற்கான ஆதாரம் கொண்டுவர வேண்டும். நான் ஜார்ஜ்புஷ் -இன் தூதுவன் என்று சொன்னால் நீங்கள் எப்படி என்னை நடத்துவீர்கள்? அழகாக வாதிடும் திறமை உங்களுக்கு உண்டு ஆனால்.......... அப்படியே சொன்னாலும் ஜார்ஜ் புஷ் அடிபொடிகள் வாலுக்குத் தீவைக்க மாட்டார்கள்.. தீர விசாரிப்பதே தர்மம்.
வெடிதான் வைப்பார்கள்..

அதாவது அறிவுள்ளவர்கள் உயர்ஜாதி அறிவில்லாதோர் அற்பஜந்து அப்படித்தானே--- இது நீங்கள் தேவையின்றி எழுப்பிய கேள்வி.. எதற்க்கா என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள்.. என்னைப் பார்த்து சொல்கிறீர்களா இல்லை இராவணனைச் சொல்கிறீர்களா?

நான் சொல்லவந்தது பொன்மான் அறிவுகுறைந்த உயிரினம். அது மாயமான் என்ற சந்தேகம் கொண்டதாலேயே ராமன் அம்பால் அடித்துக் கொல்கிறான்.

அனுமன் அறிவு உயர்ந்த உயிரினம். அதனால் ராவணன் அனுமனை மதிக்கவேண்டும்.. என்று உங்கள் வாதம் அர்த்தம் கொள்ளவாய்ப்புள்ளதாய் இருந்ததால் சொன்னேன்,

இராவணை எவ்வளவு கொடியவனயிருந்தாலும் தவத்திலே சிறந்தவன்.. அருமையான சிவபக்தன்.. மறுக்க முடியாத உண்மை. இந்திரன் கலைத்திருக்கலாமே என்று வினவுகிறீர்கள் இது கதை... எழுதப்பட்டதை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்... இருக்கலாம் என்று சந்தேகம் இருக்கவேண்டாமே!

ராவணன் பெண்பித்து கொண்டவன் அல்ல என்பதற்கு இது ஆதாரம். ராவணன் புலனடக்கி தவம் செய்து வரம் பெற்றவன். அப்படிப்பட்டவன் சீதையிடம் கட்டுக்கொள்ளா மோகம் கொண்டான் என்று வால்மீகி எழுதியது ஒப்பவில்லை. மோகம் கொண்டவன் கடத்தி வந்தபின் ஒத்துக்கொள் என்று சொல்லி மிரட்டும் அளவிற்கு மோகம் என்பது ஒருவனை நிதானமாய் இருக்க விடாது.. ஆகவே ராவணன் என்று ஒருவன் இருந்திருந்தால் வால்மீகி சொன்னது போல் மோகத்தால் கவர்ந்தான் என்பது சந்தர்ப்ப சாட்சியங்களைப் பார்க்கும் பொழுது தவறு என்றே வாதிடுவேன் நான்.

அதேசமயம் இன்றைய சூழ்நிலைகளை ஒத்து எழுதுவது சரியான பதிலாக எனக்குத் தோன்றவில்லை... உதா: காஷ்மீர் விமானம்

பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது என்பதை விளக்குவதற்காக சொன்ன உதாரணம் அது.


அது ராவணன் தவத்தில் இருந்த காலத்தில் நடந்திருக்கலாம்.. இது நீங்களாக சொல்லக் கூடாது அன்பரே!! எழுதியவர் சொல்லவேண்டும்
நீங்கள் இராமாயணத்தைக் கேட்பதும் நாமிங்கே நேரம் செலவழிப்பதும் வீண்...

ஒரு கதையை பற்றி விவாதிக்கும் போது அதில் இல்லாத சில விஷய்ங்களை.. சொல்லாத விஷயங்களை அனுமானிக்க வேண்டி இருக்கிறது.. எனது நோக்கம் எவ்வளவு வருடங்கள் ராவணன் அரசாண்டான் அவனால் எம் மனிதர்களும் எம் முனிவர்களும் பூமியில் எத்தனைக் காலம் துன்பம் அனுபவித்தார்கள் என்று அறிவது.. வால்மீகி சொல்லவில்லை. மற்றவர்களும் சொல்லவில்லை. இதைத் தெரிந்து கொள்ளாமல் ராவணன் நல்லவனா கெட்டவனா? ராவணனை அழிக்க விஷ்ணு ஏன் அவதாரம் எடுக்க வேண்டும் என எப்படி விவாதிப்பது?

ராவணன் உண்மையாய் இருந்தான் (அதுவும் சீதையைக் கடத்தி ராமனுடன் மோதிய ராவணன்) என்னிடம் ஆதாரமில்லை.

ஆனால் ராவணன் ஆட்சியில் அவன் நாட்டுப் பெண்கள் சுதந்திரமாய் உலவினர். ராவணன் சிறுவர்களுடன் போரிடவில்லை.. என ராவணனுக்குண்டான பல நல்ல குணங்கள் மட்டுமே படித்து கேட்டு அறிந்திருக்கிறேன்..

ராமாயண காலத்திற்கான காலம் என்ன? கி.மு 5000 என்கின்றன சில இணையதளங்கள்.. ஆனால் அதிலெல்லாம் உறுதியான ஆதாரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.

பாமபனில் உள்ள மணல்திட்டு ராமாயணப் பாலம் என்று பலர் சொல்லுகின்றனர்.. ஆனால் அங்குள்ள பாறைகளையோ மண்ணையோ யாரும் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை.. இலங்கை என்பது இலங்கையே இல்லை.. கோதாவரி நதிக்கு மத்தியிலிருந்த ஒரு தீவு என்போரும் உள்ளனர்.

ராவணன் தேவர்களைத் துன்புறுத்தினான்.. முனிவர்களைத் துன்புறுத்தினான் என ராமாயணம் சொன்னாலும் அதற்கான ஆதாரங்களைத் தரவில்லை.. அதையெல்லாம்தான் என் பதில்கேள்விகளில் தந்திருக்கிறேன்..

ராவணன் சீதையைக் கடத்தியது மோகத்தால் அல்ல என்று சிந்திக்கும் பொழுது கதையின் பல கோணல்கள் சீராகின்றன. சீதை 6 மாதங்களுக்கு மேல் அவன் கைப்பிடியில் இருந்திருக்கிறாள்.. ராவணனுக்கு மோகம் என்ற ஒன்று அவள் மேலிருந்திருந்தால் நிம்மதியாய் உறங்கியிருக்க முடியாது.. என்னை மணந்துகொள் என்று சொல்லி இருக்க மாட்டான்.. தன் குலப் பெண்களுக்கு பணி செய்ய வைக்காது தனியே சிறைவைத்ததன் மூலம் அவன் சீதைக்கு மரியாதை அளித்தான் என்று புரிந்து கொள்ள முடியும்.. அவளின் மன உறுதியை குலைக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபடுகிறான்.. சீதையும் ஏறத்தாழ தன் மன உறுதியை இழந்து விடுகிறாள்.. அனுமனிடம் அவள் காலக்கெடு கொடுப்பதில் இதை அறியலாம். தன் தம்பி மகளான திரிசடையை சீதையுடன் தங்க வைத்ததன் மூலம் சீதைக்கு மதிப்பளிக்கிறான் ராவணன்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது ராம லட்சுமணர்கள் தன் தங்கையை அவமானப்படுத்தியதை பழிவாங்கும் பொருட்டே சீதையை கடத்தி இருக்கலாம்.. எல்லா சொந்தங்களையும் இழந்த பின்னும் சீதைக் கதையை முடித்து விடலாம்.. அப்புறம் போருக்குப் போகலாம் என்ற கெட்ட எண்ணம் அவனுக்கு எழவில்லை.. சீதையை ஆசையோடு தொடவேண்டாம்.. ஆத்திரத்தில் கொன்றிருக்கலாமே.. செய்யவில்லை ராவணன்.. ஏன் தெரியுமா? அவன் நல்லவன்

நம் கேள்வி பதில்களை ஆராயும் பட்சத்தில் ஒரே ஒரு கேள்வி நான் கேட்கிறேனே!!!

நான் கேட்ட கேள்விகளிலெல்லாம் நீங்கள் ராவணனை ஒரு நல்லவனாகவே காட்டுமாறு சுவாரசியமாகவும் திறமையாகவும் பதிலளித்தீர்கள்...... நான் கேட்டவை வால்மீகி (அதாவது கதை ஆசிரியர்) எழுதியவை மட்டுமே.......

ஆயிரம் தவறுகள் இருக்கட்டும்; அந்த நாட்டுக் கலாச்சாரமோ அல்லது அரசர்களின் மேலான செயலோ, மோகமோ கோபமோ அல்லது எதுவாகத்தான் இருக்கட்டும்.... ஒரு பெண்ணைக் அதுவும் கற்புக்கரசியை அதுவும் ஓர் உன்னத தலைவனின் (?) மனைவியை கடத்திக் கொண்டு வரும் ஒருவன் நல்லவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அப்படித்தானே?

இதற்காக இராமன் நல்லவனா கெட்டவனா அல்லது அவன் தவறு செய்தானே! மானை துரத்தினானே மங்கை மூக்கை அறுத்தானே என்று ஆயிரம் காரணம் சொல்லவேண்டாம்... ஏனெனில் நான் ராமனும் கெட்டவன் தான் என்று முன்னமே குறிப்பிட்டுள்ளேன்....

அப்படியிருந்தும் இராவணன் நல்லவன்தான் என்றூ நீங்கள் அடித்துக் கூறும் பட்சத்தில் நான் ஒத்துக்கொள்கிறேன்.. ஓர் கடத்தல்காரனை நல்லவனாக.... மனதால் அல்ல....

எனக்குத் தெரியும்,.,, விவாதத்தின் முடிவில் இராவணன் கெட்டவன் தான் என்று அறியும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் மனதார ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்.... இது மனித இயல்பு.... உங்கள் பார்வையில் இன்னும் நல்லவராகவே அவர் இருக்கிறார்.....

அதாவது ராவணன் சீதையைக் கடத்திய ஒரே ஒரு செயல்தான் தவறு என்கிறீர்கள்.. சரிதானே!!!


விவாதம் முடிந்தது.

.

No comments:

Post a Comment